பால் நிரம்பிய தொட்டியில் ஆனந்த குளியல் செய்து !! தனக்கு தானே ஆ ப் பு வைச்சுக்கிட்ட நபர் .. பின்னர் என்ன நடந்தது தெரியுமா !!

விந்தை உலகம்

இன்றைய நாட்களில் சர்ச்சைக்கு பஞ்சமில்லை என்றே கூறலாம்.  நாளுக்கு நாள் ஒவ்வொரு காரியங்களை மற்றும் சம்பவங்கள் வைரல் ஆகி கொண்டு தன இருக்கிறது. அந்த வகையில்  துருக்கி நாட்டில் உள்ள பால் தொழிற்சாலை ஒன்றில் பால் நிரப்பிய தொட்டி ஒன்றில் தொழிலாளி ஒருவர் பால் குளியல் போட்ட வீடியோ வைரலானதை அடுத்து அந்த பால் தொழிற்சாலையை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. துருக்கி நாட்டின் மத்திய அனடோலியன் மாகாணத்தில் உள்ள கொன்யா என்ற நகரில் பால் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது.

 

 

இந்த தொழிற்சாலையில் வேலை பார்த்துவரும் எம்ரி சாயர் என்பவர் தொழிற்சாலையில் உள்ள தொட்டி ஒன்றில் பால் போன்ற ஒன்றை நிரப்பி அதில் ஆனந்த குளியல் போட்டுள்ளார். இதை, மற்றொரு ஊழியர் வீடியோவாக பதிவு செய்து டிக் டாக்கில் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து பலரும் அந்த தொழிற்சாலைக்கு எதிராக கண்டனங்களை எழுப்பினர். மேலும் அந்த தொழிற்சாலையை மூடவும் கோரிக்கை வைத்தனர்.

 

 

இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள அந்த நிறுவனம், அந்த நபர் உண்மையில் பால் குளியலில் ஈடுபடவில்லை எனவும், நீர் மற்றும் தூய்மைப்படுத்தும் திரவம் கலந்த கலவை தொட்டியில் நிரப்பி வைக்கப்பட்டு உள்ளது.பாய்லர்களை சுத்தம் செய்ய பயன்படும் அந்த திரவத்தில்தான் அவர் குளித்துள்ளார் எனவும், அவரை தற்போது பணியில் இருந்து நீக்கி உள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 

ஆனாலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அந்த தொழிற்சாலையை மூடவும் உத்தரவிட்டுள்ளநிலையில் தொழிற்சாலைக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

 

இதோ அந்த வீடியோ காட்சி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *