வீட்டிலிருந்தவாறே மூலநோய் மற்றும் மலச்சிக்கலை குணமாக்கலாம் !! எப்படி என்று தெரியுமா !!

மருத்துவம்

இன்று அதிகமானவர்கள் இந்த விதமான வியாதிகளில் ஒரு தீர்வின்றி கஷடப்பட்டுக்கொண்டு தன இருக்கின்றார்கள். அதாவதுமூலநோய் மற்றும் மலச்சிக்கலை குணமாக்கும் காரணிகளுக்காக பல்வேறு வழிமுறைகளை கைக்கொண்டு வருகிறார்கள். சஅதற்கான தீர்வு ஒன்றினை நீங்கள் இயற்கை முறையில் உங்கள்  வீடுகளிலேயே செய்து கொள்ளலாம். அது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.  முடக்கத்தான் கீரை பல நோய்களுக்கு மருந்தாகிறது. தொடர்ந்து சப்பிட்டு வருவதால் மூலநோய், மலச்சிக்கல், பாதவாதம், மூட்டுநோய்கள் போன்றவை குணமடையும்.

 

 

அந்த வகையில் இந்த நோய்க்கு எப்படி  முடக்கத்தான் கீரையை பயன்படுத்தலாம்.  தேவையான பொருட்கள் :முடக்கத்தான் கீரை – 3 கப்,புளி – கொட்டைப்பாக்கு அளவு, தக்காளி – 3,பூண்டு விழுது, மிளகு, சீரகத்தூள் – தலா ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு – தேவையான அளவு. தாளிக்க:- கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், நெய், கறிவேப்பிலை – சிறிதளவு.

 

 

செய்முறை : தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். முடக்கத்தான் கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டவும். இரண்டு கப் முடக்கத்தான் கீரை இலைகளை தண்ணீர்விட்டு மிக்ஸியில் அரைத்து வடிகட்டி தனியாக வைக்கவேண்டும். இப்பொழுது வாணலியில் நெய்விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து தாளிக்கவும்.

 

 

இதனுடன் தக்காளி, உப்பு, பூண்டு விழுது, மீதமுள்ள ஒரு கப் இலைகளை சேர்த்து வதக்கவும். பிறகு புளிக்கரைசல் விட்டு, ஒரு கொதி வந்ததும் மிளகு – சீரகத்தூள், வடிகட்டிய கீரைச்சாறு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *