பிறக்க இருக்கும் தீபாவளி திருநாளில் காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன தெரியுமா !! சுப கிரகங்களின் சிறப்பான பலன்களை பெறும் ராசியினர் யார் !!

ஆன்மீகம்

ஒருவருக்கு அதிர்ஷ்டத்தைத் தருவதில் ஜோதிட ரீதியாக , அதிர்ஷ்டத்தின் அதிபதிகளான குரு, சுக்கிரன் ஆகிய இரண்டு கிரகங்களுக்கும் முக்கியப் பங்குண்டு. உழைப்பால் உயர்ந்தவர்களும் இருக்கிறார்கள். திடீர் அதிர்ஷ்டத்தால் உயர்ந்து நல்லநிலைக்கு வந்தவர்களும் இருக்கிறார்கள். எவ்வளவுதான் உழைத்தாலும் அதற்குரிய பலன் கிடைப்பதில்லையே என ஆதங்கப்படுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். திறமையுள்ளவராகவும், கடும் உழைப்பாளியாகவும் இருந்தாலும்கூட அதிர்ஷ்டத்தின்மீது சிறிதளவாவது நம்பிக்கை கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள். அதிர்ஷ்ட யோகம் என்றால் என்ன? அதிர்ஷ்டம் ஒருவருக்கு எப்போது வரும்? அதிர்ஷ்டம் ஒருவருக்கு எப்படி வரும்? அதிர்ஷ்டம் பெறக்கூடிய ஜாதகர்களின் கிரகநிலை எப்படி இருக்கும்? என்பது பற்றி பிறக்கும் தீபாவளி திருநாளில் இருந்து இந்த வாரத்தில் 12 ராசியினருக்கும் காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்…

 

 

மேஷம் = அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம் ஆகிய நட்சத்திரங்கள் அடங்கியது மேஷம் ராசி. இந்த வாரம் சிரமங்கள் குறைந்து சுகமானதாக இருக்கும்.சிலருக்கு பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். தொழிலில் புதிய வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய ஆர்டர்கள் கிடைக்கும்.

 

ரிஷபம் = கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிடம் ஆகிய நட்சத்திரங்கள் அடங்கிய ரிஷப ராசிக்கு அனைத்து வகையிலும் நன்மை உண்டாகும்.நிதி நிலை சிறப்பாக இருக்கும். கடன் தொல்லை குறையும். சுப நிகழ்வுகள் விரும்பியபடி நடக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மன நிறைவு ஏற்படும்.

 

மிதுனம் = சுப கிரகங்களின் சிறப்பான பலன்களை நீங்கள் பெறுவீர்கள் என்பதால், உங்கள் ராசிக்கு சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் ஆதாயம் ஏற்படும்.உங்கள் மீதான மதிப்பு, மரியாதை உண்டாகும். உறவினர்களால் பிரச்சினை ஏற்படலாம். பேச்சாற்றல் சிறப்பாக இருக்கும்.

 

கடகம் = குடும்பத்தின் இனிப்பான நிகழ்வுகள் நடக்கும். மன தைரியம் அதிகரிக்கும் என்பதால் தொழில், உத்தியோகத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். கணவன் – மனைவி இடையே மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும்.

 

சிம்மம் = எதிலும் கவனமாக இருக்க வேண்டிய வாரம். உங்கள் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும் என்றாலும், அதற்காக அதிக மெனக்கெட வேண்டி இருக்கும். பயணங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். பெற்றோர், மூத்தோரின் சொல் கேட்டு நடப்பது நல்ல பலனை பெற்றுத் தரும்.

 

கன்னி = பல்வேறு வகையில் அனுகூலமான பலன் கிடைக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். அது குறித்து ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தின் மூலம் அன்பும், ஆதரவும் பெறுவீர்கள்.

 

துலாம் = நன்மையும், மோசமான நிகழ்வும் கலந்த வாரமாக இருக்கும். பொருளாதாரத்தில் நிறைவாக, உங்கள் வேலைகள் மூலம் லாபத்தை அடைவீர்கள். புதிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. எந்த முடிவாக இருந்தாலும் கவனமாக எடுப்பது நல்லது. பிள்ளைகளால் மன வருத்தம் ஏற்படலாம்.

 

விருச்சிகம் = விருச்சிக ராசியின சற்று கவனமாக செயல்பட வேண்டிய வாரம். பேச்சு, செயலில் கவனமாக இருப்பது அவசியம். தேவையற்ற விஷயங்களையும், மற்றவர்கள் குறித்து பேசுவதை விட பேசாமல் இருப்பது நல்லது. எந்த விஷயத்திலும் முன்னேற்ற பலனை காண விடாமுயற்சி தேவைப்படும்.

 

தனுசு = ராசிக்கு திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் நடக்கும். பேச்சை குறைத்து செயலில் கவனம் செலுத்தவும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. செலவை குறைத்து சேமிப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.

 

மகரம் = பொருளாதார ரீதியான முன்னேற்றத்தை காண்பீர்கள். பெண்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும். உங்களின் செயல்களில் வேகமும், விவேகமும் இருக்கும். குழந்தை பாக்கியம் போன்ற இனிமையான செய்திகள் கிடைக்கும்.

 

கும்பம் = உங்களின் தைரியம் கூடும் என்பதால் எதிலும் கம்பீரமாக செயல்படுவீர்கள். வாய்ப்பு, வசதிகள் உண்டாகும். உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும். தடைப்பட்ட காரியங்கள் முடியும். சில உடல் நல பிரச்னைகள் ஏற்படலாம்.

 

மீனம் = அலைச்சல்கள் அதிகமாகக்கூடும். இருப்பினும் வியாபாரம், தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். நினைத்தது போல பயணங்கள் நடக்காமல் போகலாம். உங்கள் செயல்களில் கவனம் செலுத்துவதால் அலைச்சல் குறைந்து, சிறப்பான பலனை பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *