வாக்கியப்பஞ்சாங்கப்படி சார்வரி வருடம் ஐப்பசி 30, நவம்பர் 15ஆம் தேதி குரு பெயர்ச்சி நிகழ்கிறது. திருக்கணித பஞ்சாங்கப்படி கார்த்திகை 5ஆம் நாள், நவம்பர் 20ஆம் தேதி நிகழப்போகிறது. குரு பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். கடகம் ராசிக்காரர்களுக்கு களத்திர குருவாக ஏழாம் வீட்டில் அமரப்போகிறார் குரு பகவான். கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியினால் மன அழுத்தங்கள் முடிவுக்கு வரும் சுகமும் சந்தோஷங்களும் அதிகரிக்கப் போகிறது. குரு தனுசு ராசியில் ஆறாம் இடத்தில் கேது உடன் இருந்தவரை ஒரு சில கடன் பிரச்சினைகள், ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள், அலுவலகப் பணிகளில் ஒரு சில இடர்பாடுகள், தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் இல்லாத நிலை, குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஆரோக்கிய பிரச்சினைகள் வந்து மருத்துவமனைக்கு போய் வந்தீர்கள்.
இனி உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். குருபகவான் ஏழாம் இடத்தில் அமர்ந்து யோகத்தை கொடுக்கப்போகிறார். உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் அமர்ந்து நேரடியாக உங்களுடைய ராசியை பார்வையிடுகிறார் குரு. இதுநாள் வரை உங்களுக்கு இருந்த சிக்கல்கள் நீங்கும். மன சஞ்சலங்கள் முடிவுக்கு வரும் காரணம் குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு பலம் அதிகம்.

திடீர் திருமண யோகம் = ஏழாம் வீட்டில் வரும் குருவினால் இல்லற வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். சிலருக்கு திடீர் திருமண யோகம் வரும். சனியின் பார்வையால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கி குருவின் பார்வையால் குழப்பம் நீங்கும். குரு பார்வை லாப ஸ்தானத்தின் மீது விழுவதால் உங்களுக்கு லாபங்கள் அதிகரிக்கும்.தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வீடு வாகன யோகம் வரும். சுய தொழில் செய்வதற்கான யோகம் வருகிறது. குழந்தை பாக்கியத்திற்காக காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். சுப விஷேசங்கள் நிறைய நடைபெறும்.