சிவன் கோவில் செல்லும் போது நந்தியின் குறுக்கே செல்லக்கூடாது என சொல்லவது ஏன் தெரியுமா?

ஆன்மீகம்

சிவாலயங்கள் என்பவை சைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுளான சிவபெருமானை மூலமுதல்வராக கொண்டு அமைந்துள்ள கோயில்களாகும். இந்தியாவில் மிக அதிக அளவில் சிவாலயங்கள் அமைந்திருந்தாலும், இலங்கை, நேபாளம், கம்போடியா என பல உலக நாடுகளிலும் சிவாலயங்கள் அமைந்துள்ளன. பெரும் பாலானான சிவாலயங்களில் மூலவராக சிவலிங்கமும், பிரகாரங்களில் பிற தெய்வ சன்னதிகளும் உள்ளன. விநாயகப் பெருமானை வணங்கிய பின்பு நந்தி தேவரிடம் சென்று மூலவரை தரிசிக்க அனுமதி தர வேண்ட வேண்டும். அதன் பிறகு மூலவரையும், அம்பாளையும் வணங்க வேண்டும். பின்பு கோஷ்டத்தில் உள்ள நடராஜர், திருமால், பிரம்மா போன்றோரை வணங்க வேண்டும். கோஷ்டத்தில் உள்ள விஷ்ணு துர்க்கையை வணங்கும் போது சண்டிகேசுவரை சிவாலயத்தில் எவ்வித பொருட்களையும் எடுத்து செல்லவில்லையென கூறி வணங்க வேண்டும்.

 

 

பின்பு பரிவார தேவதைகளான வள்ளி தெய்வானை முருகன், நடராஜர் மற்றும் இதர தெய்வங்களை வணங்கி, நவகிரத்தையும் வணங்கலாம். சிவாலயங்களில் அனைத்து தெய்வங்களையும் வணங்கியபின்பு சிறிது நேரம் அமர்ந்து செல்வதை பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.சிவாலயத்தில் சிவபெருமானை வழிபட்ட பின்பு அவர் பக்தர்களின் துணைக்காக சிவகணங்களை உடன் அனுப்பவதாகும். இவ்வாறு அமர்ந்து செல்லும் போது சிவகணங்கள் மீண்டும் சிவாலயத்திற்கு சென்று விடுகின்றன என்பதும் நம்பிக்கையாகும். ஏதேனும் வேலையாக அமராமல் சென்றால் சிவகணங்கள் பக்தர்களின் பாதுகாப்பிற்காக வரும் என்றும் நம்புகின்றனர்.

 

 

பொதுவாக சிவன் கோயில் வாசலில் கொடி மரத்தை அடுத்து நந்தி மண்டபம் காணப்படும். பிரதோஷ காலத்தில் இவருக்கே முக்கியத்துவம் தருவர். நந்தியின் குறுக்கே செல்லக் கூடாது எனவும் தடை கூறுவார்கள். இதற்கு காரணம் என்னவென்றால்… நந்தி கர்ப்ப கிரகத்திலுள்ள சிவனைப் பார்த்தவாறு இருக்கும். இது சிவனின் வாகனம். வாகனம் எதுவாயினும் அது ஜீவா ஆத்மாவைக் குறிக்கும். ஜீவாத்மா கருவறையிலுள்ள பரமாத்மாவைக் பார்த்த வண்ணம் உள்ளது. ஜீவாத்மாவின் குறிக்கோள் இறைவனை சென்றடைய வேண்டும் என்பது தான்.

 

 

அந்த கோட்பாட்டை விளக்கும் பொருளாக நந்திதேவர் சிவனை நோக்கி இருக்கிறார். அதனால் தான் பக்தர்கள் நந்தியின் குறுக்கே செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது கடவுளை அடைய நினைப்பவர்களை தடுக்கும் செயலுக்கு ஒப்பாகும். சன்னதியை மறைத்து நிற்காதீர்கள் என சொல்வதும் இதனால் தான்.

 

 

மேலும், நந்தீஸ்வரரை வணங்கி அவரது அனுமதி பெற்றே நாம் கோயிலுக்குள் நுழைய வேண்டும். அது மட்டுமல்ல, இறைவனின் முதல்வன் விநாயகர்.கோயிலில் முதல்வன் நந்தீஸ்வரர். எனவே தான் விநாயகருக்குரிய அருகம்புல் மாலை நந்தீஸ்வரருக்கும் அணிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *