சில நேரங்களில் உலகிலேயே கொடுமையான பா திப்பு இந்த சளி, இருமல் தான் என்று தோணும். பொதுவாக பலரும் சந்திக்கும் ஓர் ஆரோக்கிய பிரச்சனை தான் வறட்டு இருமல். தும்மி, தும்மி, இருமி, இருமி மொத்த உடல் சக்தியும் கரைந்து போய்விடும். எப்படி இருந்தாலும் அதிகபட்சம் ஒரு வாரம் தான் இதன் ஆயுள் என்றாலும், அவதிப்படுபவர்களுக்கு தானே தெரியும் அந்த ஏழு நாட்களின் வேதனை. கால நிலை மாற்றம் காரணத்தால் நீங்களும் வறட்டு இருமலால் பாதிக்கப்பட்டால், இதோ!

இந்த எளிய வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றி பயன்பெறுங்கள்…பருவமாற்றங்கள் துவங்கினாலே காய்ச்சல், இருமல், சளி என்பது இயல்பான ஒன்று. இதுபோன்ற சிக்கலில் குழந்தைகளே எளிதாக பாதிக்கப்படுவர். அதிலும், காய்ச்சல், சளி ஏதும் இல்லாமல் வறட்டு இருமல் குழந்தைகளை பாடாய்படுத்தும். நன்றாக ஓடியாடி விளையாடும் குழந்தைகள்,

இரவு முழுவதும் வறட்டு இருமலால் தூங்க முடியாமல் அவதிப்படுவர்.இருமல், சளி தொல்லை இருக்கும் போது உடலுக்கு வைட்டமின் சி சத்து மிகவும் அத்தியாவசியம். இந்த வகை இருமல் சளியால் வருவதில்லை. மாறாக வைரஸ் அல்லது இதர நோய்த்தொற்றுகளால் வருவதாகும். இந்த வகை இருமல் தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்டது போன்று தொடர்ச்சியாக வரும்.

இது மிகுந்த அசௌகரியத்தை உண்டாக்குவதோடு, சில சமயங்களில் எரிச்சலுணர்வை உண்டாக்கும். இந்த நாள்பட்ட வறட்டு இருமலில் இருந்து விடுபட ஒருசில எளிய இயற்கை கை வைத்தியங்கள் உள்ளன. உங்களுக்கு வறட்டு இருமல் பிரச்சனைக்கான எளிய வைத்தியங்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், முழுமையாக இந்த காணொளியை பார்வையிடவும்.
