இப்படியொரு மனைவியா என்று கடைக்காரரை வியக்க வைத்த ச ம் பவம் !! ஒவ்வொரு மனைவியும் பார்க்க வேண்டிய வைரல் வீடியோ !!

விந்தை உலகம்

கணவன் மனைவிக்கு இடையில் இருக்கும் புரிதல் போல வேறு எந்த உறவுகளுக்கும் இடையில் இருக்க முடியாது என்றும் கூறுவார்கள்.  ஏனெனில் ஒருவரையொருவர் நன்றாக புரிந்து கொள்ளும் பக்குவம் இருவருக்கும் இடையில் காணப்படும். இதனால் தான் பெரியவர்கள் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று கூறுகிறார்கள். ஆனால் அநேகருக்கு இந்த மாதிரி  வாழ்க்க்கை அமைந்து விடுவதில்லை.  குறிப்பிட்ட ஒரு சிலருக்கே இந்த மாதிரி  வாழ்க்கை அமைந்து விடுகிறது.  எனவே தான் திருமண  வாழ்க்கையில் அப்படி ஒரு மனைவி கிடைத்தால் போதும் வாழும் அந்த வாழ்க்கை  சொர்க்கம் என்றே சொல்லிவிடலாம்.  அவ்வாறான ஒரு ச ம் ப வம் தான் இந்த வீடியோ காட்சியில் இடம்பெறுகிறது.

 

 

அதாவது ஒரு கணவனும், மனைவியும் வெளியில் சென்று கொண்டு இருந்தார்கள். சாலையில்  இருந்த  ஒரு கவரிங் கடையைப் பார்த்ததும் மனைவி ஆசைப்பட்டு ஒரு நெக்லஸ் வாங்கிக் கேட்டார். உடனே கணவர் எதுக்கு இப்போ கவரிங்? அடுத்த மாசம் உனக்கு ஒரிஜினல் தங்கத்திலேயே வாங்கித் தருகிறேன் என சொல்கிறார். உடனே மனைவி தங்கத்தில் போட்டால் எனக்கு அரிக்கும் என சொல்லி கவரிங்கை வாங்கினார்.

 

அவர்கள் கிளம்பும் போது கடைக்காரர் ஏங்க எல்லாரும் கவரிங் அரிக்கும்ன்னு சொல்லுவாங்க. ஆனா உங்க மனைவி மட்டும் தங்கம் அரிக்கும்ன்னு சொல்லி கவரிங் வாங்கிட்டுப் போறங்களே என ஆச்சர்யமாகக் கேட்டார். உடனே கணவர் கரோணாவில் எனக்கு வேலை போயிடுச்சு. அவ நகையையெல்லாம் வித்துட்டோம். அதில் தான் இப்போ செலவு பண்றோம்.

 

 

நான் அதனால் தான் அவளுக்கு தங்கத்தில் ஏதாவது வாங்கிக் கொடுக்கணும்ன்னு நினைக்கிறேன். ஆனால் என்னோட சூழல் தெரிஞ்சதால அவ கவரிங்கில் வாங்கிட்டு போயிட்டா என சொன்னார் கணவர். இதைக் கேட்ட கடைக்காரர் உங்களை மாதிரி கணவர்…மனைவி புரிதலோடு இருந்துட்டா டைவர்ஸ் நாட்டுல இல்லாம ஆகிடும் என பாராட்டுகிறார். இப்போ சொல்லுங்க…இப்படியொரு மனைவி கிடைக்க கொடுத்துதானே வைத்திருக்க வேண்டும்? இதோ நீங்களே இந்த விடியோவைப் பாருங்கள்…

இதோ அந்த வீடியோ காட்சி ……..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *