பாம்பாட்டி என்போர் மகுடி ஊதி பாம்பினை ஆட்டிவைக்கும் செயலினை செய்வோரைக்குறிக்கும். இதனை வேடிக்கைக்காக பிற வித்தைகளோடு தெருக்களில் செய்வர். பா ம்பைப் பிடித்துப் ப ழக்கி ஆ -ட் டுபவர் என்பதால் இத்தொழில் புரிவோர்க்கு இப்பெயர் அமைந்தது. இந்தியாவில் இப்பழக்கம் அதிகம் காணப்பட்டாலும், பிற ஆசிய நாடுகளிலும் குறிப்பாக பாக்கிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய இடங்களிலும் ஆப்ரிக்க நாடுகளான எகிப்து, மொரோக்கோ மற்றும் துனிசியாவிலும் இவ்வழக்கம் உள்ளது. பண்டைய எகிப்தில் இக்கலையின் ஒரு வடிவம் இருந்தது என்றாலும் தற்போது அங்கே உள்ள வழக்கு இந்தியாவில் தோன்றியது ஆகும்.