உயிருடன் இருக்கும் சங்கு குட்டியிடும் அ திசய காட்சி !! பல்லாயிரக்கணக்கானகளை வியப்பில் ஆழ்த்தியுள்ள காணொளி !!

விந்தை உலகம்

சங்கு  என்பது நடுத்தரம் முதல் பெரியளவு வரையான கடல் நத்தைகளுக்கு அல்லது அவற்றின் ஓடுகளுக்கு உள்ள பெயராகும். சங்கு எனும் பெயர் பொதுவாக பெரிய, சுருள் அமைப்புள்ள, தூம்புக் குழாய் வழியுள்ள நத்தைகளுக்கு வழங்கப்படுகிறது. சங்குகள் எனப்படும் குழுக்கள் கடல்வாழ் குடற்காலி மெல்லுடலிகள் ஸ்ரோம்பியாடே குடும்பத்தைச் சேர்ந்தவை. வேறுபல இனங்களும் சங்கு என்றே அழைக்கப்படுகின்றன. பொதுவாக சங்கு என அழைக்கப்படும் இனங்களாக, தெய்வீகச் சங்கு அல்லது இன்னும் தெளிவாக ஊதப் பயன்படும் சங்கின் ஓடு (வெண் சங்கு) உட்பட டேபினெலே இனங் சங்குகள் காணப்படுகின்றன. நம் நாட்டுச் சங்கை வலம்புரிச்சங்கு, இடம்புரிசங்கு, சலஞ்சலம் பாஞ்க சன்னியம் எனப் பலவகையாகப் பிரித்துள்ளர்.

 

வலம்புரிச் சங்கு அரிதானது. ஆயினும் சலஞ்கலம், பாஞ்ச சன்னியம் ஆகிய இவ்விரண்டும் மிகமிக அபூர்வமானது. பொதுவாக சங்கில் 80 திற்கு மேற்பட்ட வகைகள் உள்ளன. போர் சங்கு, ஊது சங்கு, பால் சங்கு, இளஞ்சிவப்பு சங்கு, கீற்றுச்சங்கு, சிலந்தி சங்கு எனப் பலவகையுன்டு. ஓரோட்டு உடலியம் கொண்ட சங்குகள் பசிப்பெருங்கடலில் அதிகம் கிடைக்கின்றன. இதில் கைவினைப்பொருட்கள் சங்குமாலைகள் போன்றவை செய்யப்படுகின்றன உலகில் கடல்வாழ் உயிரினங்கள் அதிகளவில் அழிந்து வருகின்றது என்பது இன்று மறுக்க முடியாத உண்மை.

 

 

உலகின் பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள தட்பவெப்பநிலை மாற்றம், அமிலத் தன்மை அடையும் கடல்நீர், வேட்டையாடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து வருகின்றன. அழிவை நோக்கி கடல் உயிர்கள் சென்று கொண்டிருக்கும் நிலையில் பல கடல் உயிர்கள் பற்றி அறிந்திருக்கவே வாய்ப்பில்லை. அப்படியான ஒரு காட்சிதான் இது, கடல் நட்சத்திரம், கடற்குதிரை, மிக சிறிய நண்டு அதிலும் இன்னொரு சுவாரஸ்யம் சங்கு குட்டியிடும் காட்சி.

 

இது அனைத்தையும் தமிழ் இளைஞர் ஒருவர் காணொளியாக வெளியிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இவருக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதோ அந்த வீடியோ காட்சி …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *