இன்றைய தீபாவளி தினத்தன்று அமாவாசையில் என்ன செய்தால்.. அதிர்ஷ்டம் உங்களை தேடிவரும் தெரியுமா !!

ஆன்மீகம்

தீபாவளி தினத்துடன் சேர்ந்து அமாவாசை திதி பிறக்கிறது. மிக அற்புதமான அன்றைய தினத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும், அதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம். பொதுவாக அமாவாசை தினங்களில் ஆண்கள் யாரும் தலைக்கு தேய்த்து குளிக்க கூடாது எனக் கூறப்படுவதுண்டு. ஆனால்  தீபாவளி  நாளில் நிச்சயமாக அனைவரும் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என அனுபவம் வாய்ந்த ஜோதிடர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும், ஐப்பசி மாத அமாவாசை திதியில் பிறக்கின்ற தீபாவளி தினத்தன்று பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4 முதல் 6 மணிக்குள்ளான நேரத்தில் தலைக்கு எண்ணெய் வைத்து கங்கா ஸ்னாநம் எனப்படும் கங்கை நதியை மானசீகமாக வழிபட்டு குளிக்கும் முறையை பின்பற்ற வேண்டும்.

 

 

இப்படி குளிப்பதால் நம் ஜாதகத்தில் நம்மை பீடித்திருக்கும் ஏழரைச் சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, பாத சனி போன்ற சனி பகவானின் கிரகாச்சாரத்தின் கடுமைதன்மை குறையும். தரித்திர நிலை நீங்கும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.இதனையடுத்து, குளித்து முடித்து, உங்கள் ஊரில் இருக்கும் ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் மைத்ர முகூர்த்த நேரம் எனப்படும் அதிகாலை நேரத்தில் வேதியர்களை கொண்டு மறைந்த உங்கள் முன்னோர்கள், உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் தர வேண்டும்.குளம், ஆறு,கடற்கரைகள் போன்றவற்றிற்கு தர்ப்பணம் அளித்தவர்கள், வீடு திரும்பியதும், வீட்டிலிருக்கும் மறைந்த முன்னோர்களின் படத்திற்கு பூக்கள் சமர்ப்பித்து, தூபங்கள் கொளுத்தி வணங்க வேண்டும்.

 

 

தொழில் மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் நோய்களால் பாதிக்கப்பட்டு உடல்நலம் தேறுபவர்கள் ஐப்பசி அமாவாசை தினத்தில் திருஷ்டி பூசணிகாய் அல்லது எலுமிச்சை பழம் வாங்கி அதன் மீது கற்பூரம் கொளுத்தி உங்கள் தொழில், வியாபார இடங்களை திருஷ்டி கழித்து அதற்குரிய பூசணிக்காயை உடைத்தும், எலுமிச்சம் பழத்தை நசுக்கியும் திருஷ்டி கழித்திட வேண்டும்.

 

 

ஐப்பசி மாதம் இறை வழிபாடு மேற்கொள்ளதக்க ஒரு சிறப்பான மாதமாக இருக்கிறது. அதிலும் இந்த ஐப்பசி மாதத்தில் தீபாவளி தினத்தன்று வருகிற அமாவாசை தினத்தில் மேற்கண்ட முறையில் தர்ப்பணம் மற்றும் சிராத்தம் தந்து முன்னோர்களை வழிபடுவதால் வீட்டில் தரித்திர நிலை நீங்குவதோடு, சுபிட்சங்கள் பெருகும்.திருமணம் காலதாமதம் ஆகும் நபர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.

 

 

குழந்தை பேறில்லாமல் தவிப்பவர்களுக்கு பித்ருக்களின் ஆசிகளால் நல்ல ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.வீண் பண விரயங்கள் ஏற்படுவது நீங்கும். குடும்பத்தில் நிலவி வந்த நிம்மதியற்ற நிலை , பிறருடனான விரோதங்கள் போன்றவை தீர்ந்து நிம்மதி கிடைக்கும்.வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றி பெறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் உண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *