மதிய நேரங்களில் தூங்குபவரா நீங்கள்? கவனம் இந்த நோய் வர வாய்ப்புள்ளதாம்… அ தி ர்ச்சி தகவல் !!

விந்தை உலகம்

குறிப்பாக ஒரு சிலர் மத்திய நேரங்களில் தூங்குவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள்.  சிலருக்கு  மதியம் சாப்பிட்டதும் கண்ணை கட்டிக்கொண்டு துக்கம் வந்து விடும். நிறைய பேர் மத்தியானம் ஆனதுமே கண்கள் சுழற்றி தூக்கம் போடுவார்கள். அரை மணி நேர தூக்கம் என்றால் பா தகமில்லை. ஆனல் 40 நிமிடங்களுக்கும் மேலாக தூங்கக் கூடாது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.குறிப்பாக சில பெண்கள் மதியம் தூங்குவதை ஒரு வேலையாகவே செய்வார்கள். அவர்கள் இந்த கட்டுரையைப் பற்றி முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டும். உடல் வேலைகளால் அலுப்பு வரும்போது மதியம் தூங்கும் குட்டித் தூக்கம் உடலுக்கு புத்துணர்வையும், மனதிற்கு உற்சாகத்தையும் தரும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் 40 நிமிடங்களுக்கு மேலாக நீங்கள் தினமும் தூங்கினால் சர்க்கரை வியாதிக்கான ஆ ப த்து ஏற்படும்.தினமும் குறைந்தது 45- 1 மணி நேரம் தூங்கினால் 45 % பேருக்கு உடல் பருமன், சர்க்கரை வியாதி வரும் ஆ ப த்து உண்டு என ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.

 

 

டோக்கியோவிலுள்ள யமடா டோமாஹைட் என்ற பல்கலைக் கழகத்தில் நடந்த ஆய்வில் 3 லட்சத்திற்கும் அதிகமானவர்களை ஆய்வில் ஈடுபடுத்தினர்.இதில் 40 நிமிடங்களுக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு தூக்கம் சர்க்கரை வியாதி வரவில்லை. ஆனால் 45- 1 மணி நேரத்திற்கும் தூங்கியவர்கள் பெரும்பாலோனோருக்கு சர்க்கரை வியாதி இருப்பது தெரிய வந்துள்ளது.சர்க்கரை வியாதி பல நோய்களுக்கான இணைப்பு சங்கில் என கூறலாம். கண் பார்வை குறைபாடு, நரம்பு கோளாறு, சிறு நீரக செயலிழப்பு மற்றும் இதய நோய் என பல வியாதிகள் சர்க்கரை வியாதியால் உருவாகும்

 

இதற்காக மதியம் தூங்குபவர்களுக்கு எல்லாம் சர்க்கரை வியாதி வந்தே தீரும் என்று அர்த்தம் இல்லை. எப்படி உடல் பருமன், உணவுப் பழக்கம், மரபு ஆகியவை சர்க்கரை வியாதிக்கு காரணமாகிறதோ அதுபோல் மதிய தூக்கமும் ஒரு காரணம் என்று கிளாக்ஸோ மருத்துவமனையின் சிறந்த வளர்சிதை நோய்க்கான மருத்துவ வல்லுநர் நவீத் சட்டார் கூறுகிறார்

 

இந்த ஆய்வின் இறுதியில் அதிக நேரம் மதியம் தூங்குபரகளுக்கு சர்க்கரை வியாதி மட்டுமல்ல, பல நோய்களுக்கும் வித்தாகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த ஆராய்ச்சி கட்டுரை பியர் ரிவியூ மருத்துவ இதழில் வெளிவர இருக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *