நட்பு ராசிக்கு இடம் பெயரும் நவகிரக தலைவர் சூரியன் .!! அதிக பிரச்சனையை சந்திக்கப் போகும் ராசிக்காரங்க யார்னு தெரியுமா !!

ஆன்மீகம்

நவகிரகங்களின் தலைவராக கருதப்படும் சூரியன், அதன் பலவீனமான ராசியான துலாம் ராசியில் இருந்து அதன் நட்பு ராசியான விருச்சிக ராசிக்கு இடம் பெயரப் போகிறது. இந்த பெயர்ச்சி 2020 நவம்பர் 16 ஆம் தேதி அன்று காலை 6.40 மணியளவில் நடக்கவிருக்கிறது. சூரியன் விருச்சிக ராசியில் 2020 டிசம்பர் 15 ஆம் தேதி வரை இருப்பார். சூரியன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அவர்கள் நல்ல பெயர், புகழுடன், தலைமைத்துவ பண்புகளுடன் திகழ்வார். வேத ஜோதிடத்தின் சூரியன் ஆத்மாவாகக் கருதப்படுகிறது. இது அரசாங்கத்தையும், நிர்வாகத்தையும் பாதிக்கிறது. இத்தகைய சூரியன் விருச்சிக ராசிக்கு மாறுவதால், அதனால் ஒவ்வொரு ராசியிலும் ஏற்படும் விளைவுகள் குறித்து இப்போது காண்போம்.

 

 

மேஷம்

மேஷ ராசியில் சூரியன் எட்டாவது வீட்டில் இடம் பெயரவிருக்கிறார். சூரியனின் இந்த நிலை மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல முடிவுகளைத் தராது. இவர்கள் இந்த காலத்தில் சில கஷ்டங்களை சந்திக்க நேரிடும். சில நேரங்களில் கொடூரமான கிரகமாக கருதப்படும் சூரியன், நேரடியாக இரண்டாவது வீட்டைப் பார்த்தால், அது செல்வம் மற்றும் வருமானம் தொடர்மான சிக்கல்களை சந்திக்க வைக்கும்.இக்காலத்தில் செலவு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். மேலும் உங்கள் பேச்சும் சற்று கடுமையாக இருக்கக்கூடும். இதனால் குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும். பணிபுரிபவர்கள் இக்காலத்தில் அமைதியாகவும், பொறுமையாகவும் இருக்க அறிவுறுத்தப்படுகிறது.அலுவலகத்தில் யாருடனும் மோதலில் ஈடுபடாதீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதில் சிரமங்களை சந்திக்க நேரிடும். எண்ணெயில் பொரித்த மற்றும் காரமான உணவுகளை தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால் அடிவயிறு சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

 

 

ரிஷபம்

ரிஷப ராசியில் சூரியன் ஏழாவது வீட்டில் இடம் பெயரப் போகிறார். மேலும் சூரியன் உங்களின் முதல் வீட்டை நேரடியாக பார்ப்பதால், இது சில சமயங்களில் உங்கள் நடத்தையில் அதிகாரம் மற்றும் ஆதிக்கத்தை செலுத்தும்.இதனால் உங்கள் வாழ்க்கைத் துணை அல்லது குடும்பத்தினருடன் சில சிக்கல்களை சந்திக்கலாம். எனவே கண்ணியமாக நடக்க முயற்சி செய்யுங்கள். கூட்டாளருடன் வணிகம் செய்பவர்கள், அவர்களுடன் சிறிது கருத்து வேறுபாட்டை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் சிறிது பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இருப்பினும் அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. இந்த காலத்தில் வயிற்றுப் பகுதியில் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும் என்பதால் உப்பு மற்றும் காரம் நிறைந்த உணவுகளைத் தவிர்த்திடுங்கள். அதிக நீர் குடியுங்கள் மற்றும் தினமும் உடற்பயிற்சியை செய்யுங்கள். இது உங்கள் உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கு சாதகமான முடிவுகளைத் தரும்.

 

 

மிதுனம்

மிதுன ராசியில் சூரியன் 6 ஆவது வீட்டிற்கு செல்லவிருக்கிறது. சூரியனின் இந்த நிலை மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல முடிவுகளைத் தரும். நீண்ட நாட்களால் அவஸ்தைப்பட்டு வந்த ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். இந்த காலத்தில் மிதுன ராசிக்காரர்கள், தாங்கள் சந்திக்கும் சவால்களை எளிதில் சமாளிப்பார்கள்.இந்த சூரிய பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு அதிக போட்டி ஆற்றலை வழங்கும். வேலை மாற்றத்தை தேடுபவர்களுக்கு, விரும்பிய துறையில் வேலை கிடைக்கும். கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.பணத்தை முதலீடு செய்ய விரும்பினால், இது மிகவும் நல்ல நேரம். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களின் கனவு இக்காலத்தில் நனவாகும்.

 

 

கடகம்

கடக ராசியில் சூரியன் ஐந்தாவது வீட்டிற்கு செல்லப் போகிறார். இந்த மாற்றம் கடக ராசிக்காரர்களுக்கு ஒரு கலவையான முடிவுகளைத் தரும். ஐந்தாவது வீட்டில் சூரியன் இருப்பதால், நீங்கள் எளிதில் எரிச்சலடையலாம். சிறு விஷயங்களுக்கு கூட கோபப்படுவீர்கள். இதனால் உங்கள் உறவுகளில் சிக்கல்கள் ஏற்படக்கூடும் பணியிடத்தில் சில தேவையற்ற தாமதங்களை எதிர்கொள்ளக்கூடும், இது சில தேவையற்ற மன அ -ழுத்தத்தையும் கவலைகளையும் ஏற்படுத்தக்கூடும். அதிக மன அ-ழுத்தம் உங்களுக்கு சில உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். மாணவர்களுக்கு இது ஒரு நல்ல நேரமாக இருக்கும்.

 

 

சிம்மம்

சிம்ம ராசியில் சூரியன் 4 ஆவது வீட்டிற்கு செல்வதால், நீங்கள் வீடு மற்றும் குடும்பத்தில் அதிக கவனம் செலுத்துவீர்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சொத்து, ரியல் எஸ்டேட் விற்பனை மற்றும் கொள்முதல் தொடர்பான விஷயங்களை கையாள்வதற்கும் இது ஒரு நல்ல காலமாகும்.உங்கள் குடும்பத்தினருடன் சில தரமான நேரத்தை செலவிட இது ஒரு நல்ல காலம். இருப்பினும், இந்த நேரத்தில் தாயின் உடல்நிலை பலவீனமாக இருக்கலாம். தொழில் அடிப்படையில் இந்த காலம் சாதகமான முடிவுகளைத் தரும்.

 

 

கன்னி

கன்னி ராசியில் சூரியன் வீரம் மற்றும் தைரியத்தின் வீடானது மூன்றாவது வீட்டில் செல்வதால், நீங்கள் வீரம் மற்றும் தைரியம் நிறைந்து காண்பீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் தைரியமாக இருப்பீர்கள்.பணியிடத்தில் உங்களின் கருத்துக்களை வெளிப்படுத்த வெட்கப்படமாட்டீர்கள். கன்னி ராசிக்காரர்கள் இந்த காலத்தில் உயர் பதவியைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.மேலும் அதிக செல்வம் ஈட்டுவதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். உடன்பிறப்புகளுடன் தரமான நேரத்தை செலவிடுவீர்கள். இக்காலத்தில் நீங்கள் மேற்கொள்ளும் தொழில் பயணம் வெற்றிகரமாகவும், லாபத்தை அளிப்பதாகவும் இருக்கும். மாணவர்களுக்கு இந்த காலம் சிறப்பான காலமாக இருக்கும்.

 

 

துலாம்

துலாம் ராசியில் சூரியன் இரண்டாவது வீட்டிற்கு செல்லவிருக்கிறார். வேத ஜோதிடத்தில் சூரியன் ஒரு வறண்ட கிரகமாக கருதப்படுவதால், சூரியனின் இந்த நிலை துலாம் ராசிக்காரர்களின் உணர்வுகளை அல்லது உணர்ச்சிகளை அன்புக்குரியவர்களிடம் வெளிப்படுத்துவது கடினமாக இருக்கும். பணவருமானம் நன்றாக இருக்கும்.ஆனால் அதை தக்க வைத்துக் கொள்வதில் சில சிக்கல்களை சந்திப்பீர்கள். எனவே பண வரவு, செலவுகளில் கவனமாக இருங்கள்.ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண்கள் மற்றும் பற்கள் சம்பந்தமான பிரச்சனைகளை சந்திப்பீர்கள். எனவே வாயை சுத்தமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள் மற்றும் கண்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்காதீர்கள்.

 

 

விருச்சிகம்

சூரியன் விருச்சிக ராசியின் ஆளுமை மற்றும் சுய வீட்டில் செல்கிறார். உங்கள் 10 பத்தாவது வீட்டின் அதிபதியாக இருக்கும சூரியன், உங்கள் முதல் வீட்டில் சுயமாக நிலைநிறுத்தப்படுகிறார். விருச்சிக ராசிக்காரர்கள் பொதுவாக தொழில் சார்ந்தவர்களாக இருப்பார்கள்.இந்த நேரத்தில் நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க மிகவும் ஆக்கிரோஷமாக செயல்படுவார்கள். இதனால் பாராட்டுக்களைப் பெறுவார்கள். சூரியனின் இந்த நிலை உங்கள் கவனம், செறிவு மற்றும் பார்வை ஆகியவற்றை மேம்படுத்தும் என்பதால், புதிதாக ஒன்றைத் தொடங்க இது ஒரு நல்ல காலமாகவும் இருக்கும்.தனிப்பட்ட முறையில் சூரியனின் இந்த நிலை உங்களை ஆக்கிரோஷமாகவும், கோபமாகவும் ஆக்குகிறது. இதனால் உறவுகளில் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். எனவே அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

 

 

தனுசு

தனுசு ராசியில் சூரியன் 12 ஆவது வீட்டிற்கு செல்லவிருக்கிறார். இந்த காலத்தில் நீங்கள் சில பழைய பிரச்சனைகள் அல்லது சிக்கல்களை சமாளித்து முன்னேற வேண்டும். இந்த காலம் நீங்கள் தனியாக செலவழிக்க வேண்டிய காலமாகும். ஏனெனில் இது உங்களை புத்துணர்ச்சி அடையச் செய்யும் காலம்.இந்த காலக்கட்டத்தில் உங்களின் இரக்கமுள்ள பக்கம் வெளியே வரும். ஏனெனில் நீங்கள் தங்களுக்கு உதவ விரும்புவோருக்கு உதவ அதிக விருப்பம் காட்டுவீர்கள். தொழில் ரீதியாக சில கடினமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். நிதி முன்னணியில் சூழ்நிலைகள் இறுக்கமாக இருக்கும். காத்திருந்த பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு தாமதமாகலாம்.இந்த காலகட்டத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். ஏனென்றால் அவர்கள் நீங்கள் என்று நினைக்கும் அளவுக்கு அவ்வளவு உண்மையுள்ளவர்களாக இருக்க மாட்டார்கள். அடிவயிறு மற்றும் கண்கள் தொடர்பான பிரச்சனைகளை சந்திப்பீர்கள். எனவே கண்களுக்கு அதிக சிரமத்தைக் கொடுக்காதீர்கள்.

 

 

மகரம்

மகர ராசியில் சூரியன் வெற்றி, லாபம் மற்றும் அந்தஸ்தின் வீடான 11 ஆவது வீட்டிற்கு செல்லவிருக்கிறார். சூரியனின் இந்த பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு புனிதமானதாக இருக்கும். நீங்கள் எதிர்பார்க்காத லாபங்களை வழங்கும். தொழில் செய்பவர்கள் பணியிடத்தில் தங்கள் முயற்சிகளுக்கு பாராட்டைப் பெறுவார்கள்.தனிப்பட்ட முறையில், இந்த காலம் அற்புதமான காலம். தம்பதிகள் தரமான நேரத்தை செலவிட மிகவும் பயனுள்ள காலமாகும். இது உங்கள் உறவை மேலும் வலுப்படுத்த உதவும். மொத்தத்தில் மகர ராசிக்காரர்களுக்கு சூரியனின் இந்த மாற்றம் அவர்களுக்கு விரும்பிய முடிவுகளை வழங்கும் திறனைக் கொண்டுள்ளது.

 

 

கும்பம்

கும்ப ராசியில் சூரியன் 10 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இந்த ராசியைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள், அவர்கள் விரும்பிய துறையில் அவர்களைக் கண்டுபிடிப்பார்கள். வேலையில் உள்ளவர்கள், உயர் பதவிக்கான பல வாய்ப்புக்களை சந்திப்பார்கள். உங்கள் உடன் பணிபுரிபவர்கள் உங்களை ஆதரிப்பார்கள்.இது உங்களின் உற்பத்தித் திறனையும், செயல்திறனையும் அதிகரிக்கும். வியாபாரம் செய்பவர்கள் , இந்த காலத்தில் நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க முடியாமல் தவிப்பார்கள். இக்காலத்தில் மேற்கொள்ளும் தொழில் பயணம் லாபத்தை வழங்கும். தனிப்பட்ட முறையில், உறவுகள் மற்றும் குடும்பத்திற்கு ஒரு நல்ல நேரம். உங்கள் தந்தையுடனான உங்கள் உறவுகள் மேம்பட வாய்ப்புள்ளது.தனிப்பட்ட உறவுகளில், உங்கள் அன்பான மற்றும் மனைவியிடமிருந்து நீங்கள் நல்ல ஆதரவைப் பெறுவீர்கள், அது உங்களுக்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தரும்.

 

 

மீனம்

மீன ராசியில் சூரியன் 9 ஆவது வீட்டில் இடம் பெயரவிருக்கிறார். இந்த வீடு ஆன்மீகம், நீண்ட பயணம், உயர் கல்வி மற்றும் அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது. இந்த நிலையில் இருக்கும் சூரியன் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை ஆகிய இரு முனைகளிலும் உங்களுக்கு நன்மைகளை வழங்குவார். இந்த ராசிக்கார மாணவர்கள் தங்கள் முயற்சிகள் மற்றும் கடின உழைப்புக்கான நல்ல முடிவைப் பெறுவார்கள்.நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள எந்தவொரு சட்ட மோதல்களும் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். நீங்கள் செய்த பணிக்காக உங்கள் பணியிடத்தில் நீங்கள் அங்கீகரிக்கப்படுவீர்கள் மற்றும் பாராட்டப்படுவீர்கள். ஒட்டுமொத்தமாக, இது உங்களுக்கு மிகவும் நல்ல காலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *