குரு பெயர்ச்சி 2020 – 2021 : அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகும் ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா? விபரீத ராஜயோகம் யாருக்கு?

ஆன்மீகம்

மகரம் ராசியில் ஐப்பசி 30ஆம் தேதி அதாவது நவம்பர் மாதம் 15ஆம் தேதி வாக்கியப்பஞ்சாங்கப்படி குரு பெயர்ச்சியாகிறார். திருக்கணித பஞ்சாங்கப்படி கார்த்திகை 5ஆம் தேதி அதாவது நவம்பர் 20ஆம் தேதி குரு பெயர்ச்சி நிகழ்கிறது. மகரம் ராசியில் இருந்து குரு பகவானின் பார்வை ரிஷபம், கடகம், கன்னி ராசிகளின் மீது விழுகிறது. மகரம் ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதியன்று கும்பம் ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். இங்கிருந்து குருவின் பார்வை மிதுனம், சிம்மம், துலாம் ராசிகளின் மீது விழுகிறது. நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களுமே நல்ல பலன்களை அடையப்போகிறார்கள். முதல் ஆறுமாதங்களுக்கு சிலருக்கு பாதகமாக இருந்தாலும் அடுத்த ஆறுமாதங்கள் குரு கும்பம் ராசிக்கு பயணிக்கும் போது நிறைய நன்மைகளை கொடுப்பார் குருபகவான். இந்த குரு பெயர்ச்சியால் சிம்மம், கன்னி, துலாம்,விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

சிம்மம்

குரு பகவான் உங்க ராசிக்கு ஐந்து எட்டாம் வீட்டு அதிபதி. இப்போது ஆறாம் வீட்டில் சென்று நீசம் பெற்று சஞ்சரிக்கிறார். சனி ஏற்கனவே ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கிறார். குருவின் பார்வை உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டில் விழுகிறது. சுப காரியங்களுக்காக கடன் வாங்குவீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும். உங்க ராசிக்கு இருந்த பொருளாதார பிரச்சினைகள் நீங்கும். பயணங்களால் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும். குடும்ப உறவில் சுப நிகழ்ச்சி நடைபெறும். நீசமான குரு நீச பங்க ராஜயோகம் பெற்று அமர்கிறார். குருவின் பார்வை உங்க ராசிக்கு பத்தாம் வீடு, விரைய ஸ்தானம், இரண்டாம் வீடுகளின் மீது விழுகிறது.

சிம்ம ராசிக்காரர்களின் திருமண யோகம் || Leo Zodiac Sign marriage pariharam

தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். நல்ல வேலையும் புரமோசனும் கிடைக்கும். நிறைய சுப விரைய செலவுகள் வரும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டும் வெளிநாட்டு வேலை வாய்ப்பும் தேடி வரும். குடும்பம் குதூகலமாக இருக்கும். நிறைய பணம் வரும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்கவும். பயணங்களில் நன்மை நடைபெறும் வெளியூர் பயணங்கள், வேலை விசயமான பயணங்களில் நன்மை நடைபெறும்.

2020 புத்தாண்டு பலன் : : சிம்ம ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி  இருக்கும்..?– News18 Tamil

சொத்து சேர்க்கை ஏற்படும். சிலர் வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். குரு 2021 ஏப்ரல் மாதம் அதிசாரமாக கும்பம் ராசிக்கு பெயர்ச்சியாகி உங்க ராசியை பார்வையிடுவார். எதிர்பார்க்காத யோகம் வரும். இந்த குரு பெயர்ச்சியால் பாதிப்புகள் எதுவுமில்லை பலன்கள் அதிகம் ஏற்படும்.

கன்னி

குரு பகவான் நவம்பர் முதல் ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். குரு உங்க ராசிக்கு நான்கு மற்றும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி. ஐந்தாம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கப்போகிறார். ஏற்கனவே சனி ஐந்தாம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் நீச பங்க ராஜயோகம் கிடைக்கும். உங்களுக்கு திருமண யோகம் கை கூடி வரும் நீண்ட நாட்களாக திருமணம் முடிந்து குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைப்பதால் உற்சாகம் அதிகரிக்கும்.

சார்வரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் : கன்னி ராசிக்காரர்களுக்கு கவலைகள்  தீரும் | Sarvari Tamil puthandu rasi palan 2020 - Kanni - Tamil Oneindia

உடலில் இருந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி அதிகரிக்கும். தடைபட்டு வந்த காரியங்கள் தடைகள் நீங்கி கை கூடி வரும். பொருளாதார தடைகள் நீங்கும். குருவின் பார்வை உங்க ராசிக்கு ஒன்பதாம் வீடு, பத்னொன்றாம் வீடான லாப ஸ்தானத்தின் மீது விழுகிறது. புதிய வேலை கிடைக்கும் செய்யும் தொழிலில் லாபம் வரும், புதிய வருமானம் வரும்.

கன்னி ராசியின் பொதுவான குணம் - Expres Tamil

குரு பகவான் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதிசாரமாக கும்பம் ராசியில் சஞ்சரிக்கிறார் இது ஆறாம் வீடு. ஆறில் அமரப்போகும் குரு உங்க ராசிக்கு பத்தாம் வீடு, விரைய ஸ்தானம், இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் மீது விழுகிறது. உங்க ஜனன ஜாதகத்தில் குரு சரியான இடத்தில் சஞ்சரித்தால் உங்களுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது.

2019-ம் ஆண்டு கன்னி ராசிக்காரரின் வாழ்க்கை எப்படி இருக்கும்! - Seithipunal

உங்களுடைய பலவீனங்கள் நீங்கி பலம் அதிகரிக்கும். இந்த குரு பெயர்ச்சியால் வேலையில் புரமோசன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் தொழில் தொடங்குவது, திருமணம் சுபகாரியம் செய்வது போன்ற நற்காரியங்களை செய்து விடுவது நல்லது. நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் கைகூடி வரும். தோஷங்கள் நீங்கி சந்தோஷங்கள் அதிகரிக்கும்.

துலாம்

சுக்கிரன் உங்க ராசி அதிபதி. குரு உடல் ஆரோக்கியம், செல்வம் செல்வாக்கு தருபவர் இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு நிறைய நன்மைகளை தரப்போகிறது. குரு பகவான் இப்போது மூன்றாம் வீட்டில் மறைந்திருக்கிறார்.

நவம்பர் மாதம் முதல் குருபகவான் நான்காம் வீட்டிற்கு போகிறார். குருவின் பார்வை உங்க ராசிக்கு எட்டாம் வீடு, பத்தாம் வீடு, 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தின் மீது விழுகிறது. குரு பார்வையால் உங்களுடைய தோஷங்கள் நீங்கும் அவமானங்கள் நீங்கும். மனரீதியான பிரச்சினைகள் நீங்கும். கணவன் மனைவி உறவில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

பத்தாம் வீட்டிற்கு குரு பார்வை கிடைப்பதால் வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சிலருக்கு சுப விரைய செலவுகள் வரும். சகோதர சகோதரிகளிடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. எதிர்கால திட்டமிடல்கள் வெற்றிகரமாக முடியும். 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் குரு அதிசாரமாக கும்பம் ராசிக்கு போகும் போது குருவின் சஞ்சாரம் பார்வையால் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும்.

துலாம் - விகாரி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் | துலாம் - விகாரி வருட  தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - hindutamil.in

காரணம் குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கும், ராசிக்கு லாப ஸ்தானம், பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டின் மீது விழுகிறது. திருமணம் சுப காரியம் விசயமாக பேசுவதற்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு மேல் நேரம் கூடி வரும். இந்த குரு பெயர்ச்சியால் உங்களுடைய குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

2020 ஆண்டுபலன் : விருச்சிக ராசி நேயர்களுக்கு இந்த ஆண்டு எப்படி  இருக்கும்..?– News18 Tamil
விருச்சிகம்

குரு பகவான் உங்க ராசிக்கு இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் இருந்து மூன்றாம் வீட்டிற்கு பயணம் செய்யப்போகிறார். ஏழரை சனி முடிந்து இப்போதுதான் நிம்மதியான நிலையை அடைந்திருப்பீர்கள். ஜென்ம ராசியில் கேது, ஏழாம் வீட்டில் ராகு, என கிரக நிலைகள் உள்ளன. குரு மூன்றாம் வீட்டில் நீசமடைந்து சஞ்சரிப்பதால் கடன் பிரச்சினை நீங்கும். கடனை அடைக்க ஒரு கடனை வாங்குவீர்கள்.

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23 : விருச்சிகம் ராசிக்காரங்களுக்கு ஏழரை  முடிஞ்சு விடிவுகாலம் பிறக்குது | Sani peyarchi 2020 to 2023 predictions and  Effects for Viruchigam ...

சொத்து பிரச்சினைகள் தீரும். குருவின் பார்வை ராசிக்கு ஏழாம் வீட்டின் மீது விழுகிறது. குரு ஒன்பது மற்றும் லாப ஸ்தானங்களின் மீது விழுவதால் பண வரவு கிடைக்கும். சுப காரிய தடைகள் நீங்கும். திருமணம் சுப காரியங்கள் கை கூடி வரும். பணம் விசயங்களில் கவனமாக இருங்கள். உங்களுடைய கையில் இருந்து பணத்தை கொடுக்கும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசித்து கொடுக்கவும்

விருச்சிக ராசியின் பொதுவான குணம் - Expres Tamil

பணம் திரும்ப வருவதில் சிக்கல் ஏற்படும். குருவின் சஞ்சாரம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அதிசாரமாக சஞ்சரிக்கும் காலத்தில் பாதிப்புகள் நீங்கும். இந்த குரு பெயர்ச்சியினால் பலன்கள் உங்களுக்கு சுமாராக இருந்தாலும் பாதிப்புகள் அதிகம் வராது. காரணம் குருவின் பார்வைஉங்களுக்கு என்ன தசை நடக்கிறது குரு உங்க ராசியில் எப்படி இருக்கிறார் என்று பார்த்து பலன்களை முடிவு செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *