உலகம் முழுவதும் நான்காவது விரலில் அணியும் திருமண மோதிரம்…. முதன் முதலாக தொடங்கப்பட்டது எங்கு தெரியுமா? அறிவியல் கூறும் காரணம் இதுவா !!

விந்தை உலகம்

காலங்காலமாக இடது கையில் உள்ள நான்காவது விரலில் தான் இந்த திருமண மோதிரத்தை அணியவேண்டும் என்ற கருத்து நிலவிவருவதோடு மட்டுமல்லாமல் மக்களும் இதனை பின்பற்றி வருகிறார்கள். திருமணத்தின் அடையாளமாக தாலி இருந்தாலும் மோதிரம் மாற்றிக்கொள்வது என்பது இப்பொழுது பரவலாக இருக்கும் ஒரு பழக்கமாகும். ஒவ்வொரு மனிதனது வாழ்விலும் மிக முக்கியமான திருப்புமுனை காலக்கட்டம் அவனது திருமணம் தான். அதனால்தான் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம் என முன்னோர்கள் சொன்னார்கள்.

 

 

திருமண பந்தத்தில் இணையவிருக்கும் ஆண், பெண் இருபாலரும் தங்கள் விரல்களில் ஒருவருக்கொருவர் மோதிரம் மாற்றிக்கொள்வர். இதில் மாறிக்கொள்வது இரு மோதிரங்கள் மட்டுமல்ல, இருவரது இ த யங்களும் தான். உலகம் முழுவதும் நான்காவது விரலில்தான் திருமண மோதிரத்தை அணிகின்றனர். ஆனால், திருமண மோதிரத்தை இடது கையில் தான் அணிய வேண்டும் என்று எவ்வித சட்டமும் இல்லை,  ஆனால் ஏன் உலகம் முழுவதும் காலங்காலமாக இடது கையில் உள்ள நான்காவது விரலில் மட்டும் இந்த திருமண மோதிரத்தை அணிகிறார்கள்.

 

 

 

இதற்கு பின்னால் பல காரணங்களும்,கதைகளும் இருக்கிறது. இந்து மதச் சடங்கின்படி தாலி கட்டுவதே திருமணம் ஆகும். கிறிஸ்தவர்கள் மோதிரம் மாற்றிக் கொள்கிறார்கள். இப்போதெல்லாம் எந்த மதத்தை சேர்ந்தவர்களும் நிச்சயதார்த்தத்தின் போது மோதிரம் மாற்றிக் கொள்ளும் பழக்கமும் இருக்கிறது. உலகம் முழுவதுமே திருமண மோதிரத்தை 4வது விரலில் தான் போட்டுக்கொள்கின்றனர். இடதுகையின் நான்காவது விரலில் மோதிரம் அணியும் இந்த வழக்கம் கிபி 1549ல் இருந்து தொடங்கியது.

 

 

அதாவது ஐரோப்பாவில் இருந்த கத்தோலிக்க திருச்சபையில்தான் இந்த பழக்கம் முதன் முதலாக தொடங்கப்பட்டது.  அதாவது ஆரம்பத்தில் வலதுகையில் அணியப்பட்ட இந்த திருமண மோதிரம் ஐரோப்பாவில் இருக்கும் ஆர்.சி சபையில் நடந்த கல்யாணத்தில் தான் இடதுக்கு மாறியது.  கை ஒருவரின் பலத்தை பிரதிபலிப்பதால் இந்த பழக்கம் கடைபிடிக்கப்பட்டு வந்தது.  அதன்பின் பல்வேறு மாற்றங்களால் இது இடக்கைக்கு மாற்றப்பட்டது.

 

 

அதாவது அறிவியல் பெரும் வளர்ச்சியில் முன்னேறாத போது   நம் கையின் நான்காவது விரலில் இருந்து ஒரு ந ரம்பு நேராக இ த ய த்திற்கு ஓடுகிறது என்று நம்பப்பட்டது. இது பொதுவான நம்பிக்கையாக கருதப்பட்டாலும் இதற்கு பின்னால் வேறு சில காரணங்களும் இருந்தது. அத்துடன் சீனர்களின் நம்பிக்கைப்படி நம்முடைய ஒவ்வொரு விரல்களும் ஒவ்வொரு உறவை பிரதிபலிக்கிறது. அந்த வகையில் நமது நான்காவது விரல் நம்முடைய வாழ்க்கைத்துணையை பிரதிபலிக்கிறது.

 

 

கட்டை விரல் பெற்றோர்களையும், நடுவிரல் உங்களையும், சுண்டு விரல் குழந்தைகளையும் பிரதிபலிக்கிறது. உங்களின் இரண்டு கைகளையும் ஒன்றாக இணைத்து வையுங்கள். உங்களை பிரதிபலிக்கும் உங்களின் நடுவிரலை மட்டும் கீழ்நோக்கி மடக்குங்கள். மீதமுள்ள விரல்கள் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டிருக்க வேண்டும்.இப்பொழுது உங்கள் குழந்தைகளின் விரலான சுண்டு விரலை பிரிக்க முயற்சியுங்கள். உங்களால் எளிதில் இதனை செய்ய முடியும். ஏனெனில் குழந்தைகள் குறிப்பிட்ட காலம் வரைதான் உங்களுடன் இருப்பார்கள். அவர்களுக்கான குடும்பம் அமைந்த பிறகு உங்களை விட்டு விலகிவிடுவார்கள்.

 

 

இதனைத் தொடர்ந்து உங்களின் விரலாய் பிரிக்க முயலுங்கள், இதையும் எளிதில் செய்து விடலாம், உங்கள் உடன்பிறந்தவர்களும் உங்களை விட்டு விலகுவதன் அடையாளம் இது.இதேபோல உங்களின் கட்டை விரலையும் நீங்கள் பிரிக்கலாம். உங்கள் பெற்றோரும் காலம் முடிந்தவுடன் உங்களை விட்டு விலகிவிடுவார்கள்.இப்போது உங்கள் வாழ்க்கைத்துணை விரல் மட்டும் மீதமிருக்கும். அதனை நீங்கள் எவ்வளவு முயன்றாலும் பிரிக்க முடியாது. ஏனெனில் உங்கள் வாழ்க்கைத்துணை மட்டுமே உங்களுடன் இறுதிவரை வரப்போகிறார்கள் என்பதே இதன் அர்த்தம். இதனால்தான் நான்காவது விரலில் மோதிரம் அணியப்படுவதாக சீனர்கள் கூறுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *