அடிவயிற்றில் உள்ள கொலஸ்ட்ராலை சித்த வைத்தியத்தின் படி குறைப்பது எப்படி தெரியுமா?

மருத்துவம்

நாம் உண்ணும் உணவில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிக அளவில் இருந்தால் அதுவும் இதே போன்று நம்மை பாதிக்க கூடும். நமது உடலில் நீண்ட நாட்கள் தங்கி விட கூடிய கொழுப்புகள் தான் நமக்கு அதிக அளவில் நோய்களை தருகிறது.  இது ஆரம்ப கால கட்டத்தில் பெரிய அளவில் பாதிப்பை தராது. ஆனால், பின்னாளில் உங்கள் உயிருக்கே ஆபத்தை தர கூடிய தன்மை இதற்கு உள்ளதாம். நாம் சாப்பிட கூடிய உணவுகளை விட சித்தர்கள் அவர்களின் குறிப்பில் பல ஆயிரம் வருடத்திற்கு முன்னரே சில அற்புத மூலிகைகளை பற்றிய குறிப்புகளை கூறியுள்ளனர். இவற்றில் ஒரு சில வகையான மூலிகைகள் நம் வீட்டிலே கிடைக்கின்றன.

 

 

அதே போன்று இந்த குறிப்பின் மூலம் தயாரிக்கப்படும் முறையை நாம் பின்பற்றி வந்தால் கொலஸ்ட்ராலை குறைத்து இனிமையான வாழ்வை மேற்கொள்ளலாம். என்னென்ன மூலிகை வைத்தியங்கள் நம் வீட்டிலே கிடைக்கிறது என்பதை இனி அறிந்து கொள்வோம்.

 

 

திரிகடுகு சூரணம் = கொலஸ்ட்ராலை மிக எளிமையான வழியில் குறைக்க இந்த திரிகடுகு சூரணம் நன்கு உதவுகிறது. இதனை இந்த குறிப்பில் கூறுவது போன்று தயாரித்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை அடைய முடியும்.  தேவையானவை = மிளகு , திப்பிலி, சுக்கு, தேன்

 

 

தயாரிப்பு முறை = முதலில் மிளகு, திப்பிலி, சுக்கு ஆகியவற்றை சமமான அளவு எடுத்து கொண்டு வாணலில் 2 முதல் 3 நிமிடம் வறுத்து எடுத்து கொள்ளவும்.அடுத்து இதனை பொடியாக அரைத்து கொண்டு காற்று புகாத பாத்திரத்திரத்தில் வைத்து கொள்ளவும்.தினமும் அரை ஸ்பூன் இந்த பொடியுடன் 1 ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் விரைவில் குறையும்.

 

 

இலவங்க பொடி வைத்தியம் = நமது வீட்டில் இருக்க கூடிய இந்த மூலிகையும் கெட்ட கொலஸ்ட்ராலை விரட்ட கூடும். இவற்றுடன் இன்னும் சில மூலிகைகளை சேர்த்து சாப்பிட்டால் பலன் உடனடியாக கிடைக்கும். இதற்கு தேவையானவை = இலவங்க பொடி 1 ஸ்பூன், திரிகடுகு 1/4 ஸ்பூன், தேன் 1 ஸ்பூன் , நீர் 1 கிளாஸ்

 

 

தயாரிப்பு முறை = நீரை வெது வெதுப்பான சூட்டில் சூடு செய்து இறக்கி கொள்ளவும். அவற்றில் இலவங்க பொடி, திரிகடுகு, ஆகிய மூலிகைகளை சேர்த்து கொண்டு, பின்னர் தேனையும் சேர்த்து நன்றாக கலந்து தினமும் குடித்து வரலாம். இந்த குறிப்பு உடனடியாக உடலில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலை குறைத்து விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *