வி ள க்கு ஏற்றும்போது தெரிந்துக்கொள்ள வேண்டியவை வி ள க்கில் எண்ணெய் விட்டு எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிட வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு திரிகளாவது ஏற்ற வேண்டும். நெய் வேத்தியங்கள் நிவேதனம் செய்யும் வாழை இலையின் பக்கத்தில் விளக்கேற்றுவது மிகவும் சிறந்தது. பூஜை தொடங்கும் முன் வீட்டில் சுமங்கலி குத்துவிளக்கை ஏற்றி விட்டு வணங்கிய பிறகு பூஜை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.

சுபகாரியங்கள் வீட்டில் நடைபெற விளக்கு பூஜை செய்து வழிபட்டால் நற்பலன்களை கண்டிப்பாக பெறலாம்.விளக்கு பூஜை செய்யும் போது குத்து விளக்கிற்கு முன் சிறிது மஞ்சள் தூளால் சிறு விநாயகரின் சிலையை செய்து குங்குமமிட்டு அவரை அங்கு வீற்றிருக்க செய்ய வேண்டும்.அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணை ஊற்றி அதன் பின்பு 5 நூல் கொண்ட நூல் திரி போட்டு திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து அதன் பின்பு விளக்கு ஏற்ற வேண்டும்

விளக்கேற்றவேண்டிய நேரம் – விடையற்காலையில் சூரியன் உதயமாவதற்குச் சற்று முன்பாக பிரம்ம முச்கூர்த்தம் என்று அழைக்கப்படும் நேரத்தில் விளக்கேற்ற வேண்டும்.

அதேபோல் மாலையில் சூரியன் மறைவதற்குச் சற்று முன்னதாக, பிரதோஷ கால, என்கிற உன்னதமான காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால்,குடும்பத்தில் செல்வம் பெருகும். சந்தோஷம் நிலவும், புத்திர பாக்கியம் உண்டாகும். மனதுக்கு ஏற்ற வரன் அமையும்.

திசைகளும் பலன்களும் –கிழக்கு திடையில் தீபம் ஏற்றி வழிப்பட்டால் துன்பம் ஒழியும், வீட்டில் உள்ள பீடைகள் அகலும். மேற்கு திசையில் தீபம் ஏற்றி வழிப்பட்டால் கடன் தொல்லை, சனிபீடை, சிரகதோஷம் பங்களிப்பதை நீக்கும். வடக்கு திசையில் தீபம் ஏற்றி வழிப்பட்டால் செல்வமும், மங்கலமும் பெருகும். தெற்கு திசையில் தீபம் ஏற்றக்கூடாது.
