தெய்வீக அனுபவங்கள் நிறைந்த கார்த்திகை மாதத்தில் அதிர்ஷ்ட யோகம் எந்த ராசிக்கு கிடைக்கும் தெரியுமா !!

ஆன்மீகம்

கார்த்திகை மாதம் தெய்வீக அனுபவங்கள் நிறைந்த மாதம். கார்த்திகை மாதம் முதல் நாள் சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசியில் பயணத்தை தொடங்குவதால் இது விருச்சிக மாதமாகவும் போற்றப்படுகிறது. இந்த மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம் ராசிக்காரர்களுக்கு கார்த்திகை மாதம் சந்தோஷங்கள் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. பிள்ளைகள் திருமணம் பேசி முடிக்கலாம். வீடு கட்ட ஆரம்பிக்கலாம். புதிய வண்டி வாகனம் வாங்கலாம். சேவை துறையில் இருப்பவர்கள் வெற்றியை ருசித்து ஸ்திரத்தன்மையை அடைவார்கள். வணிகர்கள் லாபம் ஈட்ட புதிய வழிகளைக் கண்டுபிடிப்பார்கள்.நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். ஆரோக்கியம் மேம்படும். அரசியலில் இருப்பவர்கள் வெற்றியை அடைவார்கள்.குரு பத்தாம் வீட்டில் பயணம் செய்வதால் பதவியில் சில மாற்றம் வரும். வியாபாரம் அபரிமிதமாக லாபம் வரும். ரொம்ப நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த பணம் கைக்கு வரும். பெருமாள் கோவிலுக்கு போய் நெய் தீபம் ஏற்றுங்கள்.


ரிஷபம்

ரிஷப ராசிக்கு மிகவும் நேர்மறையான பலன்களைப் பெற முடியும். புதிய வாகனம் வாங்கலாம். வணிகர்கள் லாபத்தை அறுவடை செய்வார்கள்.ஆன்மீக சுற்றுப்பயணத்தைத் திட்டமிட்டவர்கள் சிறப்பாக சென்று வரமுடியும். கொடுத்த பணம் திரும்ப வரும். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கணவன் மனைவிக்குள் சின்னச் சின்ன சண்டைகள் வரலாம் கவனம் தேவை.
கண் பிரச்சினைகள், வயிறு வலி வரும் கவனம் செலுத்துங்கள். புதன் மாத மத்தியில்தான் சாதகமாக மாறுகிறார்.அழகு ஆரோக்கியம் அதிகரிக்கும். வங்கி லோனுக்கு அப்ளை செய்யலாம். வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும்.சூரியன் ஏழாம் வீட்டிற்கு வந்து இருக்கிறார். வழக்குகளில் ஜெயித்து காட்டுவீர்கள். வண்டி வாகனங்களை கவனமாக ஓட்டுங்கள்.


மிதுனம்

மிக சிறப்பான பலன்களைப் பெறும் ராசிகளில் ஒன்றாக மிதுன ராசி உள்ளது. பண ரீதியாக பயனடைவார்கள்.புதிய வீடு அல்லது வாகனம் வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முடியும்.சுக்கிரன் ஐந்தாம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் புத்திர பாக்கியம் கை கூடி வரும். பிள்ளைகளுக்கு திடீர் திருமண யோகம் வரும்.பூர்வீக சொத்து விவகாரங்கள் தொடர்பாக பேசலாம். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நண்பர்கள் உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரலாம் கவனம்.உடல் அரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள் சக்கரத்தாழ்வார் வழிபாடு அவசியம். அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.

கடகம்

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்களே, உங்களுடைய யோகாதிபதி குருபகவான் உங்க ராசியை பார்வையிடுகிறார். தள்ளிப்போன காரியங்கள் நல்ல விதத்தில் முடியும்.வீடு அல்லது கட்டுமானம் தொடர்பான பணிகள் வெற்றிகரமாக நடக்கும். வணிகர்கள் முக்கியமான முடிவுகளை எடுப்பார்கள்.மிதுன ராசிக்கு பூர்வீகம் ஆன்மிக செயல்பாடுகளில் பிஸியாக இருப்பீர்கள். அரசியலில் இருப்பவர்கள் வெற்றி பெறுவார்கள். இழந்த பதவி கிடைக்கும். நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். கோதுமை தானமாக கொடுங்கள்.

சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களே உங்க ராசி நாதன், இதுநாள் வரை மூன்றாம் வீட்டில் சஞ்சரித்தார் மன கலக்கம் அதிகரித்தது. சூரியன் இன்று முதல் நான்காம் வீட்டிற்கு பயணம் செய்கிறார்.வணிகர்கள் லாபத்தை அறுவடை செய்வார்கள் மற்றும் இருப்பினும் சில சறுக்கல்கள் இருக்கும்.சிலவற்றில் வீழ்ச்சியைக் காண்பார்கள். ஆரோக்கியம் மேம்படும். ஆன்மிக ரீதியான நடவடிக்கைகளில் கலந்துகொள்வது நன்மை பயக்கும்.வணிகர்கள் முடிக்கப்படாத பணிகளை முடிக்க முடியும். அரசியலில் இருப்பவர்கள் சிறந்து விளங்குவார்கள்.வியாபாரத்தை விரிவு படுத்தலாம். வேலை செய்யும் இடத்தில் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். விநாயகர் வழிபாடு நன்மையை கொடுக்கும்.

கன்னி

புதன் பகவானை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, இந்த மாதம் உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டில் சூரியன் பயணம் செய்கிறார் தைரியம் தன்னம்பிக்கை அதிகமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சிறந்த முன்னேற்றத்தைப் பெற முடியும். மாணவர்கள் வெற்றியை அடைவார்கள். எதிர்பாராத மூலத்திலிருந்து செல்வத்தைப் பெறலாம்.ஒருவர் தனது தந்தையின் ஆசீர்வாதங்களைப் பெற்று நன்மைகளை அறுவடை செய்யலாம்.எதிர்பார்த்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். சிவபெருமானை திங்கட்கிழமைகளில் தரிசனம் செய்யுங்கள்.

துலாம்

சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, உங்களுடைய ராசியில் ராசிநாதன் சுக்கிரன் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் சவால்களை ஜெயிப்பீர்கள் கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். வணிக ரீதியான உங்களின் முயற்சிகள் வெற்றியை தரும். வணிகர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் இருக்கும். உடல்நலனிலும், நிதி நிலையிலும் முன்னேற்றத்தைப் பெறுவதற்கான அருள் பெறுவீர்கள். வீடு அல்லது வாகனம் வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். வெற்றிக்கு தந்தையின் ஆசீர்வாதங்களையும், ஆலோசனையையும் பெறுவது அவசியம்.


விருச்சிகம்

செவ்வாய் பகவானை ராசி நாதனாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே, உங்க யோகாதிபதி சூரியன் உங்களுடைய ராசிக்குள் சஞ்சரிக்கிறார். அலைச்சல்கள் நீங்கும். சுக்கிரன் நல்ல இடத்தில் சஞ்சரிப்பதால் வீடு கட்டலாம் வீடு வாங்கலாம். புதிய சொத்துக்கள் வாங்கலாம். பிள்ளைகளால் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வேலை மற்றும் தொழிலில் இருப்பவர்கள் வெற்றி பெறுவார்கள். பணப்பரிவர்த்தனை தொடர்பான விஷயங்களில் கவனமாக இருங்கள். முடிக்கப்படாத சில பணிகள் நிறைவடையும். அரசு மற்றும் அரசு தொடர்பான வேலைகளில் உள்ளவர்கள் சிறப்பான பலனைப் பெறலாம். கார்த்திகை மாதம் அற்புதமான மாதமாக அமையும்.

தனுசு

ராசிநாதன் குரு பகவான் உங்களுடைய ராசிக்கு 2-ம் வீட்டில் பயணம் செய்வதால் மனதில் உற்சாகம் அதிகரிக்கும் தடைபட்ட காரியங்கள் எளிதில் நிறைவேறும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். கணவன் மனைவி உறவில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். வார்த்தைக்கு மரியாதை கூடும். நண்பர்கள் உதவி செய்வார்கள். வேலையை மாற்ற நினைப்பார்களுக்கு சாதகமான நிலை இருக்கும். வங்கி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ளவர்கள் வெற்றியை ருசிப்பார்கள்.
அரசு விசயங்கள் வெற்றிகரமாக முடியும். அப்பாவின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கார்த்திகை மாதத்தில் திடீர் யோகங்கள் வரும். காலபைரவாஷ்டமி நாளில் பைரவரை வழிபட நன்மைகள் நடைபெறும்.

மகரம்

அரசியலில் இருப்பவர்கள் சிறந்து விளங்குவார்கள். வணிகர்கள் புதிதாக கிளைகள் அல்லது முயற்சிகளை தொடங்கலாம். மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். அதிகபட்ச பலன்களைப் பெற உங்கள் தந்தையின் ஆசீர்வாதங்களைப் பெறுவது அவசியம். வீடு மனை வாங்கலாம் எதிர்பார்த்த யோகம் வரும் செல்வாக்கு அதிகரிக்கும். பெரிய பதவிகள் பொறுப்புகள் தேடி வரும். சூரியன் 11ஆம் வீட்டிற்கு வருவதால் பதவி உயர்வு வரும். சம்பள உயர்வு அதிகரிக்கும். வியாபாரத்தில் இழந்த லாபத்தை மீண்டும் பெறுவீர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்கு இந்த பெயர்ச்சி மிகவும் சிறப்பான பலனைப் பெறுவார்கள். புதிய வாகனம் வாங்கலாம். தடைப்பட்ட ஒரு பணி மீண்டும் தொடங்கலாம்.வணிகர்கள் லாபத்தை அறுவடை செய்வார்கள். அரசு வேலைக்கு முயற்சி செய்யுங்கள். சம்பள உயர்வு அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கலாம். பெற்றோர்களுக்கு இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். திருமண கைகூடி வரும். மகனுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். பொறுமையும் நிதானமும் தேவைப்படும் மாதம். பெண்களுக்கு யோகங்கள் அதிகரிக்கும். அப்பா வழி உறவினர்கள் மூலம் சுப காரியங்கள் நடைபெறும். வேலையில் இருப்பவர்கள் நிதானமாக வேலையில் கவனம் செலுத்துங்கள். சனிப்பிரதோஷ நாளில் சிவ ஆலயம் சென்று தரிசனம் செய்து வாருங்கள். திருப்பதி வெங்கடாசலபதியை சென்று வணங்கி வருவது நன்மையை தரும்.

மீனம்

ராசிக்கு 10-ம் வீட்டில் சஞ்சரித்த குரு லாப ஸ்தானத்திற்கு வருகிறார். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பண வரவு அபரிமிதமாக வரும். வேலை செய்யும் இடத்தில் கவனம் தேவை, உயரதிகாரிகளிடம் நிதானமாக பேசவும். அரசியல்வாதிகளுக்கு யோகமும் வெற்றியும் நிறைந்த மாதம். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் மனஸ்தாபங்கள் வரலாம் கவனம் தேவை. உணவு விசயத்தில் அக்கறை காட்டவும் சத்தான உணவுகளை சாப்பிடவும். வேலைக்கு செல்லும் பெண்கள் அவசரப்பட வேண்டாம். கவனமும் விழிப்புணர்வும் தேவை. வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அதிக லாபம் வரும். கந்த சஷ்டி நாளில் முருகனை வழிபடுங்கள் எதிரிகள் தொல்லை ஒழியும். செல்வம் உங்களைத் தேடி வரும். ஊடகங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் இருப்பவர்கள் வெற்றிகளையும் முன்னேற்றத்தையும் சுவைப்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *