தில்லையில் நடராஜர் சிற்பத்திற்கு மட்டும் மழை பெய்யும் அதிசய நிகழ்வு !!  வைரல் ஆகும் அதிசய காணொளி !!

ஆன்மீகம்

சைவர்களின் கடவுள்களான மும்மூர்த்திகளில் ஒருவரும், அவர்களின் முதன்மைக் கடவுளும் ஆகிய சிவனின் இன்னொரு தோற்றமே கூத்தன் (வடமொழி – நடராசர்) திருக்கோலம் ஆகும். நடனக்கலை நூல்களிலே எடுத்தாளப்பட்டுள்ள நடனத்தின் 108 வகைக் கரணங்களிலும் வல்லவனாகக் கூறப்படுகிறது. தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வரும்  விடியோவில்  தில்லையில் நடராஜர் சிற்பத்திற்கு மட்டும் மழை பெய்யும் அதிசய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

 

 

சைவ ஆகமங்களிலும், சிற்பநூல்களிலும், பல்வேறு சைவ நூல்களிலும் நடராசர் தோற்றத்தின் விபரங்கள் தரப்பட்டுள்ளன. கோயில் கட்டிடச் சிற்பங்களிலும், வணக்கத்துக்குரிய சிலைகளாகவும் காணப்படும் உருவங்களும் நடராசர் தோற்றத்தை விளக்குகின்றன.

 

 

நடராசர் என்ற சொல்லானது நட + ராசர் என பகுந்து நடனத்துக்கு அரசன் என்ற பொருள் தருகின்றது. நடராசர், நடராஜா, நடேசன், நடராசப் பெருமான் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். ஊன்றியிருக்கும் கால், குப்புற விழுந்து கிடக்கும் முயலகன் என்ற அசுரனின் முதுகின்மீது ஊன்றப்பட்டுள்ளது. இடது கால் உடம்புக்குக் குறுக்காகத் தூக்கப் பட்ட நிலையில் உள்ளது.

 

 

நான்கு கைகளைக் கொண்டுள்ள நடராசர் தோற்றத்தின் வலப்புற மேற் கையில், உடுக்கை எனப்படும் இசைக் கருவியும், இடப்புற மேற் கையில் தீச்சுவாலையும், ஏந்தியிருக்க, வலப்புறக் கீழ்க் கை அடைக்கலம் தரும் நிலையில் (அபயஹஸ்தம்) உள்ளது. இடது கீழ்க் கை தும்பிக்கை நிலை (கஜஹஸ்தம்) எனப்படும் ஒருநிலையில், விரல்கள், தூக்கிய காலைச் சுட்டியபடி அமைந்துள்ளது.

 

 

ஒன்பது கரணங்களில் மட்டுமே சிவனின் நடனத் தோற்றங்கள் விபரிக்கப்பட்டுள்ளன. பரவலாகக் காணப்படும் நடராசரின் தோற்றம், ஒற்றைக் காலைத் தூக்கி நின்று ஆடும் நிலையாகும். பஞ்சகுண சிவமூர்த்திகளில் நடராசர் ஆனந்த மூர்த்தி என்று அறியப்பெறுகிறார். இங்கு குறிப்பிட்ட ஒரு வீடியோ ஒன்றில் இருக்கும்  மூன்று சிற்பங்களில் தில்லையில் நடராஜர் சிற்பத்திற்கு மட்டும் மழை பெய்யும் அதிசய நிகழ்வு ஒன்று இடம் பெற்றுள்ளது

 

 

இதோ அந்த வீடியோ காட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *