தற்போதைய அவசர உலகில் வயிற்று அல்சர் பொதுவானதாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பதும், பட்டினியாக இருப்பது தான். உலகில் வயது வித்தியாசமின்றி எல்லோரும் எதிர்கொள்கிற ஆரோக்கியப் பிரச்சினை அல்சர். அதிலும் சாஃப்ட்வேர் நிறுவனங்களின் வருகைக்குப் பிறகு, இந்தியாவில் இளைஞர்களிடமும் இளம்பெண்களிடமும் அல்சர் தொல்லை மிகவும் அதிகரித்துவிட்டது.
தொண்டையில் தொடங்கி இ ரைப்பை வரை உணவு செல்ல உதவும் உ ண வுக்குழாய், இ ரைப்பை, முன் சி றுகுடல் ஆகியவற்றில் ஏற்படும் பு ண்க ளைப் பொதுவாக ‘பெப் டிக் அ ல்சர்’ (Peptic ulcer) என்கிறோம். இ ரைப்பையில் பு ண் ஏற்பட்டால் ‘கேஸ்ட்ரிக் அல்சர்’ (Gastric ulcer) என்றும், முன் சிறுகுடலில் பு ண் ஏற்பட்டால் ‘டியோடினல் அல்சர்’ (Duodenal ulcer) என்றும் அழைக்கிறோம்.
இரைப்பையில் உணவு செரிப்பதற்காகச் சுரக்கப்படுகின்ற ஹைட்ரோகுளோரிக் அமிலமும் பெப்சின் எனும் என்சைமும் சில காரணங்களால் அளவுக்கு அதிகமாகச் சுரக்கும்போது, இரைப்பை, முன்சிறுகுடலின் சுவற்றில் உள்ள மியூகஸ் படலம் அ ழ ற்சியுற்று வீ ங்கிச் சி தை வ டையும். இதை ‘இ ரைப்பை அழ ற்சி’ (Gastritis) என்கிறோம். இதைக் காலத்தோடு கவனிக்கத் தவறினால், நாளடைவில் இது இ ரைப்பைப் பு ண் ணா க மாறிவிடும்.
இப்படி சாப்பிடாமல் இருப்பதால், இ ரைப்பையில் சுரக்கப்படும் அ மிலம் கொஞ்சம் கொஞ்சமாக இ ரைப்பை சுவற்றை அரிக்க ஆரம்பித்து, பு ண் ணா க்கிவிடும். இந்நிலையே அல்சர் எனப்படுகிறது. அல்சரால் ஏராளமானோர் அ வ ஸ் தைப்படுகின்றனர்.
இந்த அல்சர் பிரச்சனைக்கு தற்போதைய மருத்துவத்தில் மருந்துகள் இருந்தாலும், சரியான டயட்டை மேற்கொள்வதும் மிகவும் முக்கியமாகும். அல்சர் இருப்பவர்கள் அல்சரில் இருந்து விடுபட எப்படியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று பார்க்கலாம்.