தேன் ஓர் இனிய உணவுப்பொருள் ஆகும். மருத்துவ குணமும் கொண்டது. பூக்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான நீர்மத்தில் இருந்து தேனீக்கள்தேனை பெறுகின்றன. தூய தேனில் தண்ணீரோ வேறு சுவையூட்டும் பொருட்களோ கொஞ்சமும் கலந்திருக்காது. நீர்ம (திரவ) நிலையில் உள்ள தேன் கெட்டுப் போவது இல்லை. தேன் என்றால் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. தேன் அனைவருக்கும் பிடித்த விடயம். சிலர் பலகாரங்களின் ஊற்றி சாப்பிடுவார்கள் சிலருக்கு அப்படியே சாப்பிடத்தான் பிடிக்கும். சுத்தமாக தேன் கிடைப்பது என்பது கொஞ்சம் கடினம் தான். பெரும்பாலான இடங்களிலும், கடைகளிலும் கலப்பட தேன் தான் விற்கப்படுகின்றது. ஏனெனில் தேன் கூட்டில் இருந்து தேனை எடுப்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. தற்போது ஒரு வீடியோ காணொளியில் தென் எடுக்கும் காட்சி வைரலாகி வருகின்றது.
தேன் என்பது குளுகோஸ், புரக்டோஸ், நீர், மற்றும் சில என்ஸைம்கள் சிலவகை எண்ணெய்கள் ஆகியவை அடங்கியதாகும். இவை மலரிருந்து கொண்டு வரும் குளுகோஸ் 40 சதவிகிதம் முதல் 80 சதவிகிதம் வரை நீர் நிறைந்ததாக இருக்கும். ஆனால் இவை உற்பத்தி செய்யும் தேனில் 16 முதல் 18 சதவிகிதமே நீர் இருக்கும். இவற்றின் நிறம் மற்றும் சுவை தேனீக்களின் வயது மற்றும் அந்த பகுதியில் அமைந்திருக்கும் தாவர வகைகளைப் பொறுத்து மாறுபட்டு இருக்கும்.
பொதுவாக தேன் மஞ்சள் நிறமுடையதாய் இருக்கும். வெளிர் மஞ்சள் நிற தேன் தரம் வாய்ந்ததாய் இருக்கும். ஆரஞ்சு மரத்தின் பூக்களைக் கொண்டு தேனீக்களினால் உருவாக்கப்படும் தேன் முதல் தரமானதாகக் கருதப்படுகின்றது. குறைந்த தரம் வாய்ந்த தேன் பஹ்வீட் (Buckwheat) என்னும் தாவரத்திலிருந்து பெறப்படும் தேனாகும். ஏனெனில் அந்த தேன் அடர்ந்த மஞ்சள் நிறமானதாய் இருக்கும்.தேன், கலோரி ஆற்றல் மிகுந்த ஒர் உணவாகும்.
உதாரணத்திற்கு ஒரு அவுன்ஸ் தேன் மூலம் ஈக்களுக்கு கிடைக்கும் ஆற்றல் ஒரு முறை உலகைச் சுற்றி வரப் போதுமானதாகும். இந்த தேன் மற்ற திரவத்தைக் காட்டிலும் அடர்த்தி நிறைந்ததாகும். ஒரு குவளை சர்க்கரை நீரின் எடை சுமார் 7 அவுன்ஸ் ஆகும். ஆனால் ஒரு குவளைத் தேனின் எடை 12 அவுன்ஸ் ஆகும். ஏறக்குறைய சர்க்கரை நீரின் எடையைவிட இருமடங்கு அதிக எடையாகும்.
தொட்டவுடன் கொட்டிவிடும் தேனீக்கள் நடுவில் எவ்வளவு லாவகமாக எச்சரிக்கையுடன் இவர்கள் தேனை எடுக்கிறார் என்பதை பாருங்கள்.