சாலை ஓரங்களில் காணப்படும் சொடக்கு தக்காளிக்கு இவ்வளவு மகத்துவம் உண்டா !!

மருத்துவம்

நடுவில் பழமும் சுற்றிலும் பை போன்ற குமிழும் இருக்கும் இந்தத் தக்காளியைப் பறித்து நெற்றி, தலைப்பகுதியில் அடிப்பார்கள். அப்போது `சொடக்கு’ போடுவதுபோல் சத்தம் வரும். அதனால் இதை `சொடக்குத் தக்காளி’ என்கிறார்கள். நமக்கு அருகில் இருக்கும் எந்த ஒரு பொருளாக இருந்தாலும், அதனுடைய அருமை பெருமைகள் நமக்கு கட்டாயம் தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும். “நம் வீட்டைச் சுற்றி ஏராளமான அபூர்வ மூலிகைகள் வளர்ந்து நிற்கின்றன. அவற்றின் அருமை நமக்குத் தெரிவதில்லை. நாம் நடக்கும் திசையெல்லாம் முளைத்துக்கிடக்கும் ‘சொடக்குத் தக்காளி’ என்ற செடியின் இலைகளும் பழங்களும் நிறைய நோய்களைக் குணப்படுத்தும் வல்லமை வாய்ந்தது”. அந்த வரிசையில் கிராமப்புறங்களில் சாலைகளில்  அல்லது வீடுகளில் அருகாமையிலோ தானாகவே வளரும் அபூர்வ வகையான சில வகை மூலிகை செடிகளுக்கு அதிக சக்தி உண்டு. அந்த வரிசையில் இன்று சொடக்கு தக்காளியினைப் பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

நம்மில் பல பேருக்கு சொடக்கு தக்காளி என்ற ஒன்று இருக்கிறதா என்பதே தெரியாது. இதில் அதனுடைய பயன்களை அறிந்திருக்க வாய்ப்பு என்பது குறைவுதான். கிராமப்புறங்களில் சிறுவர்கள்  இந்த தக்காளிப்பழத்தை செடியில் இருந்து பறித்து, நெற்றியில் வைத்து உடைக்கும்போது சொடக்கு போடுவது போல் ஒரு சத்தம் எழும். இதனால்தான் இந்த மூலிகை பழத்திற்கு ‘சொடக்கு தக்காளி’ என்ற பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.

எந்தவிதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத இந்த சொடக்கு தக்காளி மருத்துவ குணம் ஏராளம். இந்த சொடக்கு தக்காளி இலைகளையும், கனிகளையும் மஞ்சள் சேர்த்து அரைத்து  கட்டியின் மேல் போட்டு வந்தால், கட்டிகள் சுலபமாக கரையும். கட்டியினால் ஏற்படும் வலியும் சுலபமாக நீக்கிவிடும்.இந்த செடியின் இலைகளையும், காய்களையும் நசுக்கி, ஒரு டம்ளர் அளவு தண்ணீரில் போட்டு, நன்றாக கொதிக்க வைத்து அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளையும் சேர்த்து வடிகட்டி குடித்து வந்தால், நம்முடைய உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு இது ஒரு நல்ல மருந்தாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த மருந்தை புற்றுநோய் உள்ளவர்களும் தொடர்ந்து குடித்து வரலாம். புற்று நோயினால் ஏற்படக்கூடிய  பெரிய அளவிலான பாதிப்புகளை குறைக்கும் என்று சில மருத்துவ குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். நாம் உண்ணும் கடினமான உணவுகள் கூட சுலபமாக ஜீரணம் ஆக வேண்டுமென்றால் இந்த பழத்தை  சாப்பிடுவது மிகவும் நல்லது. இந்த பழத்தில் இருக்கும் நார்ச்சத்தானது செரிமானத்தை அதிகப்படுத்துகிறது.

இந்த செடியின் பழத்துக்கு இவ்வளவு பவரா? சர்வநோயும் தீர்க்கும் இயற்கையின்  அதிசயம்... இனி இதை வழியில் பார்த்தா மிஸ் பண்ணிடாதீங்க..!

சர்க்கரை நோயால் வரக்கூடிய புண்கள், பிற ஆறாத புண்களுக்கு இதன் இலைகள் நல்ல மருந்தாகும். சொடக்குத் தக்காளி இலைகளை அரைத்து தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி புண்களின்மீது தடவினால் விரைவில் ஆறும்.இதன் பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள், கல்லீரலில் ஏற்படும் பிரச்னைகள் குணமாகும். இரும்புச் சத்து அதிகளவு இருப்பதால் அனிமீயா, சோர்வு நீங்கும்.

Plant House Live Rasbhari/Golden Berry Medicinal Plant: Amazon.in: Garden &  Outdoors

கீல்வாதம் ஏற்படும்போது இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் அதிலுள்ள வைட்டமின் பி 3 சத்து போதுமான அளவு ரத்தத்தைப் பாயச் செய்து, வலியைக் குறைத்துவிடும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அல்சைமர், டிமென்ஷியா போன்ற அறிவாற்றல் சார்ந்த மூளை பாதிப்பு நோய்கள் ஏற்படாமலிருக்க உதவும். இந்தப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிப்பதுடன் மூளைச் செறிவுத்திறன் மேம்படும். பெக்டின் எனப்படும் கரையும் நார்ச்சத்து இருப்பதால், நாம் உண்ணும் உணவை செரிமானமடையச் செய்வதுடன் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்..!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *