குருவின் பார்வையால் பிறக்கும் ஆங்கில புத்தாண்டில் தேடி வரும் நன்மைகள் !! எந்த ராசிக்கு கோடி நன்மைகள் தெரியுமா !!

ஆன்மீகம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த 2021ஆம் ஆண்டு அஷ்டமத்து சனி, அஷ்டமத்து குரு முடிந்து நிம்மதி பெருமூச்சு விடப்போகிறீர்கள். 2020 ஆண்டில் வேலையிழப்பு, தொழில் நஷ்டம், உடல் நலத்தில் பாதிப்பு என பிரச்சினைகளை சந்தித்த உங்களுக்கு இந்த ஆண்டு அமோகமாக இருக்கப்போகிறது. உங்க ராசிக்கு பத்தாம் வீட்டு அதிபதி சனி 9ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார். உங்களுக்கு புகழும் செல்வாக்கும் தேடி வரும். வேலையில் மாற்றம் வரும். சனியின் பார்வை உங்களுடைய ராசிக்கு 3,6,11ஆம் வீடுகளின் மீது விழுகிறது. வேலையில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டு வேலை ஏற்படும். குருவின் பார்வை உங்களுடைய ராசிக்கு கிடைக்கிறது.

 

 

குரு பலனால் ரிஷபம் ராசியில் பிறந்தவர்களுக்கு திருமண யோகம் வரும். ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டில் இருந்து ஏற்றம் அதிகரிக்கும். குரு, சனி, ராகு கேது சஞ்சாரங்கள் சாதகமாக உள்ளன. நல்ல வேலை நிறைய சம்பளம் கடந்த காலங்களில் நிறைய பிரச்சினைகளை சந்தித்து வந்தீர்கள். அந்த பி ர ச்சினைகள் எல்லாம் நீங்கப் போகிறது. உங்க யோகாதிபதி சனி பகவான் யோக ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். விசா பிரச்சினைகள் நீங்கும். வேலையில் இடமாற்றம் கேட்பவர்களுக்கு வேண்டிய இடத்தில் கிடைக்கும்.

 

 

 

குடும்பத்தில் கவனம்
கணவன் மனைவி உறவில் கவனம் தேவை. ராகு உங்கள் ராசியில் சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானமாக இருப்பது அவசியம். உங்களின் வீட்டில் பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. அந்நியர்களை உங்களின் குடும்ப பிரச்சினைகளில் தலையிட விட வேண்டாம். திருமண வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. அப்போதுதான் மன நிம்மதி கிடைக்கும்.

 

 

மாணவர்களுக்கு யோகம்
பிள்ளைகளின் வாழ்க்கையில் வளர்ச்சி கிடைக்கும். திருமண யோகம் கை கூடி வருகிறது. வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். பிசினசில் நல்ல பணவருமான கிடைக்கும். கவுரவம், புகழ் அந்தஸ்து கூடும். பிள்ளைகள் வழியில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் தகவல் தொடர்பில் நல்ல மாற்றம் கிடைக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் வரும். படிக்க நினைத்த இடத்தில் இடம் கிடைக்கும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும் முயற்சிக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.

 

 

 

முதலீடுகளால் லாபம்
அரசியல்வாதிகளுக்கு இந்த ஆண்டு அற்புதமாக இருக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். கேட்ட இடத்திற்கு இடமாறுதல்கள் கிடைக்கும். குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். பங்கு மார்க்கெட் முதலீடுகள் நல்ல லாபத்தை கொடுக்கும். வங்கியில் சேமிப்பு உயரும். நீங்கள் இந்த ஆண்டு சித்தர் வழிபாடு செய்வது நல்லது. திருச்செந்தூர் முருகப்பெருமானை வணங்குவது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *