கரையாத கொழுப்பையும் வேகமாக கரைக்கும் டீ… இந்த ஒரு பழம் போதும்

மருத்துவம்

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரை பார்க்க வேண்டிய அவசியமே இருக்காது என்று சொல்வார்கள். அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்சிடண்ட்டுகள் நம்முடைய உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகின்றன. கலோரி அளவும் மிக மிக குறைவு. அந்த ஆப்பிளை வைத்து டீ போட்டு குடித்தால் உடல் எடையை வேகமாகக் குறைக்க முடியுமாம். அது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். எப்படி தயாரிப்பது – இதை குடிப்பதினால் பலவகையான உடல் நன்மைகள் நமக்குக் கிடைக்கும். இந்த பிங்க் டீ வழக்கமாக நீங்கள் தினமும் குடிக்கும் டீயை விட மிகவும் ஆரோக்கியமானது. எளிமையாகத் தயாரிக்க முடியும். குழந்தைகள், சர்க்கரை நோயாளிகள் என யார் வேண்டுமானாலும் குடிக்கலாம்.

கரையாத கொழுப்பையும் வேகமாக கரைக்கும் டீ... இந்த ஒரு பழம் போதும் - Manithan

தேவையான பொருள்கள் – ஒரு பெரிய துண்டு ஆப்பிள், சிறிது இஞ்சி, எலுமிச்சை சாறு, மிளகு , டீ பேக், தேன், பட்டை பொடி ​செய்முறை – ஆப்பிளை துருவி எடுத்துக் கொள்ளுங்கள். இவற்றில் தேன் மற்றும் ஆப்பிளைத தவிர மற்ற எல்லா பொருள்களையும் 2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு அது ஒன்றரை கப் அல்லது ஒரு கப் அகும்வரை சுண்ட வைக்க வேண்டும்.

ஆரோக்கியம் நிறைந்த ஆப்பிள் டீ! எப்படி செய்வது தெரியுமா?

அதன்பின் வடிகட்டி அதற்குள் துருவிய ஆப்பிளையும் தேனையும் சேர்த்து அப்படியே 5 நிமிடங்கள் மூடி வைத்து விட்டு, பின் எடுங்கள். ஆப்பிள் டீ தயார். குழந்தைகள் மிகவும் விரும்பி இந்த டீயை குடிப்பார்கள். ஆப்பிள் டீயில் இயற்கையாகவே விட்டமின் சி அதிகம் உள்ளது. விட்டமின் சி என்பது உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவது மட்டுமில்லாமல், பல வகையான நோய்கள் மற்றும் நோய்த் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

Apple Tea Recipe in Tamil How to Cook Healthy Apple Tea Food Traditional  Apple Tea Dishes Tamil Samayal

மேலும் இதில் உள்ள பாலிஃபீனால் குறைந்த எல்டிஎல் அல்லது கெட்ட கொலஸ்ட்ரால் ஆகியவற்றை அடியோடு அழிக்கிறது. இதில் பைபர் அதிகமாக உள்ளதால் உடல் எடை குறைப்பதற்கும் பல வகைகளில் உபயோகமாக உள்ளது.

உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் ஆப்பிள் டீ

மேலும் இதில் மிளகு, சீரகம், இஞ்சி, எலுமிச்சை ஆகியவற்றை சேர்ப்பதால் இது உடலில் உள்ள கழிவுகளையும் உடலில் தேங்கியிருக்கும் கொழுப்புகளையும் அகற்றுகிறது. ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வாருங்கள். பாரிய மாற்றத்தினை நீங்களே உணருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *