இந்த கிழமைகளில் மற்றவர்களுக்கு பணம் கொடுக்க கூடாதாம் ஏன் தெரியுமா?

ஆன்மீகம்

நம்முடைய வீடுகளில் உள்ளே பெரியவர்கள் பலர் வீட்டில் உள்ள பணத்தை மற்றும் நகைகளை செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமை நாட்களில் மற்றவர்களுக்கு கொடுக்க கூடாது என்று சொல்லி கேள்வி பட்டு இருப்போம். அத்துடன் இந்நாட்களில் செலவு போன்றனவும் செய்ய கூடாது என சொல்வதை கேட்டு இருப்போம். பொதுவாக மனிதராக பிறந்த நாம் அனைவரும் உதவி செய்யவே விரும்புகின்றோம். ஆனாலும் சிலர் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கடன் கொடுக்க மறுக்கிறார்கள். ஏன்? அப்படிக் கொடுத்தால் என்ன நேரும்?  வாரத்தின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமையும், ஐந்தாம் நாளான வெள்ளிக்கிழமையும் வீட்டில் நாம் என்ன செய்யலாம், எதையெல்லாம் தவிர்க்கலாம் என்பதைப் பற்றி பார்ப்போம். 

Nepal bans Indian currency notes above Rs 100 - Times of India

செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மற்றவர்களிடம் பணத்தை கொடுக்கக் கூடாது. செலவு செய்யக் கூடாது என்று கூறுவார்கள்.அவ்வாறு ஏன் கூறுகிறார்கள் என்பது குறித்து நீங்கள் யோசித்தது உண்டா?அதற்கான அர்த்தம் இங்கே உள்ளது. செவ்வாய் வெள்ளி கிழமைகளில் பணம் கொடுக்க கூடாது ஏன்?செவ்வாய் கிழமை முருகனுக்கும், வெள்ளிக் கிழமை லட்சுமிக்கும் உகந்த நாட்களாக கருதப்படுகிறது.

Indian economy: How printing money can save the economy of a nation

நாம் வணங்கும் இந்த இரண்டு தெய்வங்களும் நமக்கு செல்வ வளத்தை கொடுப்பதுடன், அவைகள் நமது வீட்டில் நிரந்தரமாக இருப்பதற்கும் அருள் புரிகின்றது. இதனால் நாம் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பணம் வைத்து இருக்கும் பெட்டியில் இருந்து பணத்தை எடுத்து செலவு செய்வதை தவிர்க்க வேண்டும்.

Indian Banking Customers, Beware! Hackers Have an Eye on Your Money

இல்லையெனில், நம்மிடம் இருக்கு. அனைத்து செல்வ வளங்களும் நம்மை விட்டு சென்று விடும் என்பது ஒரு ஐதீகமாகும். மேலும், அத்தியாவசிய சில முக்கியமான செயல்பாடுகளை தவிர்த்து, அந்த இரண்டு கிழமைகளிலும் பணம் வைத்திருக்கும் பெட்டியை திறக்கவே கூடாதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *