இப்படிப்பட்ட  கனவுகள் உங்களுக்கு வருகிறதா ? , அப்போ நீங்கள் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் !! 

ஆன்மீகம்

கனவு என்பது பொதுவாக எல்லோருக்கும் வர கூடிய ஒன்று, கனவு வராதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். ஆனால் ஏன் இந்த கனவு வந்தது என்பதில் எல்லோருக்கும் ஒரு கேள்வி இருக்கும், சில வேளைகளில் கனவுக்குரிய விளக்கம் தெரியாமல் குழம்பி பொய் இருப்போம்.  நமக்கு வரும் கனவினால் நம்முடைய வாழ்க்கையில் அதிர்ஷ்டமா, துரதிர்ஷ்டமா, அந்தக் கனவிற்கு உண்டான அர்த்தம் என்ன, என்ன மாதிரியான கனவுகள் நம்முடைய வாழ்விற்கு நல்லது என்பது பற்றி பார்ப்போம்.

 

தெய்வீக சம்பந்தப்பட்ட சில நிகழ்வுகள் நம்முடைய கனவில் வந்தால், அதிர்ஷ்டம் நம்மை தேடி வரப்போகிறது என கூறுவதுண்டு . ஒரு சில கனவுகள் நம்முடைய வாழ்க்கையின் எதிர்காலத்தில் நடக்கக்கூடிய நல்லது கெட்டதை கூட நமக்கு காண்பிக்கும் என்று சொல்லுவார்கள்.  இறைவனின் அருள் இருப்பவர்களுக்கு மட்டுமே, வரக்கூடிய சில நல்ல பலன்களைக் கொடுக்கக் கூடிய கனவுகளைப் பற்றி தான் பார்க்க போகின்றோம்.

 

 

கோவில் சம்பந்தப்பட்ட கனவுகள்

கோவில் என்று சொன்னதும் நம்முடைய நினைவுக்கு வருவது கோவிலில் அடிக்கக்கூடிய மணி ஓசை தான்.  கோவில் சம்பந்தப்பட்ட கனவுகள் எந்த கனவுகள் வந்தாலும் அது நமக்கு நன்மை தரக்கூடிய கனவுகள் தான் என்று சொல்லப்பட்டுள்ளது. கோவிலில் மணி ஓசை உங்களது கனவில், உங்களது காதுகளில் கேட்டால், உங்களுக்கு இருக்கக்கூடிய தீராத பிரச்சனைகள் தீர போகிறது என்பதை குறிக்கின்றது.

 

 

வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு, உங்களது காலை ஒருபடி மேல எடுத்து வைக்கப் போகிறீர்கள் என்று கூட சொல்லலாம்.குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கவும் வாய்ப்பு உள்ளதுவாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு தேவையான வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். வருமானம் அதிகரிக்கலாம். நல்ல வேலை கிடைக்கலாம்.திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

 

 

இறைவனை தரிசனம் செய்யும்  கனவுகள்

அந்த சிவபெருமான் உங்களுடைய கனவுகளில் வந்தால் ஆன்மீக ரீதியான தேடல்களில், உங்களுக்கான மனநிறைவு கிடைக்கப் போகின்றது என்பதே அர்த்தம். ஆனால் இறைவன் எப்போதுமே ‘நான் இருக்கின்றேன்!’ என்பதை உங்களுக்கு உணர்த்தி கொண்டே இருப்பான். கோவிலுக்கு சென்று இறைவனை நீங்கள் தரிசனம் செய்வது போல கனவுகள் வந்தால்,

 

 

நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளில் வெற்றி அடைய போகிறீர்கள் என்பதை குறிக்கின்றது. ஆனால், வெற்றியை தொடுவதற்கு முன்பாக சில ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.  கஷ்டமும் நஷ்டமும் சேர்ந்தது தான் வாழ்க்கை என்பதை சில அனுபவங்கள் உங்களுக்கு உணர்த்தும். அந்த ஈசன் உங்கள் கனவில் வந்தால், உங்களை விட பாக்கியசாலி இந்த உலகத்தில் வேறு யாரும் இல்லை.

 

 

வரக்கூடாத கனவுகள் 

ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் பாழடைந்த கோவில், இறைவன் இல்லா மூலஸ்தானமும், உங்களது கனவுகளில் வரவே கூடாது. வாழ்க்கையில் ஏதோ ஒரு நஷ்டமும் கஷ்டமும் வரப்போவது, என்பதை குறிக்கக்கூடிய அறிகுறிதான் இது. வரக்கூடிய துயரத்திலிருந்து உங்களை காத்துக் கொள்ள, இப்படிப்பட்ட கனவு உங்களுக்கு வந்தால் உங்கள் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வேண்டுதல் வைத்து வருவது நல்லது‌.

 

 

இறைவனின் ஆடம்பரமான கனவுகள் 

ஆடை அலங்காரத்தோடு பெருமாளும் மகாலட்சுமி தேவியும், தங்க நிற குபேர சிலையோ, அழகன் முருகனை உங்கள் கனவில் வந்தால் நிச்சயம் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் தான். ஆடை ஆபரண அணிகலன்கள் அணிந்து, ஆடம்பரமான ரூபத்தில் இறைவன் உங்களுக்கு காட்சி அளித்தால், நிச்சயம் உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் அதிர்ஷ்டம் காத்துக் கொண்டிருக்கின்றது என்பது தான் அர்த்தம்.அதிர்ஷ்ட காத்து நிச்சயம் உங்கள் பக்கம் வீசும். பண மழையில் நீங்கள் நனைவதற்கு கூட வாய்ப்பு உள்ளது.

 

 

இ ற ந் தவர்கள் கனவுகள் 

இறந்தவர்கள் உங்களது கனவில்வந்தால் நீங்கள் கொஞ்சம் எல்லா விஷயங்களிலும் உஷாராக இருக்க வேண்டும். உங்களுடைய உறவினர்களோ அல்லது தாய் தந்தையரோ இ ற ந்திருந்தால், அவர்கள் உங்களுடைய கனவில் வந்தால், உங்களுடைய வாழ்க்கையில் நடக்கப்போகும் ஏதோ ஒரு பிரச்சனையை உங்களுக்கு வலியுறுத்துவதற்காகவும், அந்தப் பிரச்சினைகளில் இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக அவர்கள் வருவார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.ஆகவே  எந்து ஒரு புதிய முயற்சியையும் அவசரப்பட்டு எடுக்கக்கூடாது. வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

 

 

உயிரோடு இருப்பவர்கள் இறந்தது போல கனவு

இதுவே யாராவது உங்கள் சொந்த காரங்களா, உங்களுக்கு தெரிஞ்சங்களோ உயிரோடு இருப்பவர்கள் இறந்து போயிருப்பது போல கனவு வந்தால், அதை நினைத்து நீங்கள் பயப்பட வேண்டாம். உங்களுக்கு இருக்கக்கூடிய தீராத கஷ்டங்களோ, அந்த நபருக்கு உரிய தீராத கஷ்டங்களோ, கூடிய விரைவில் தீர போகின்றது என்பதை அறிவுறுத்தவே இந்த கனவு என்று சொல்லப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *