இந்தியாவில் பெண்களுக்கான உடையென்றால் பலரும் முதலில் சொல்வது சேலை மட்டுமே. எத்தனை விதமான நவநாகரீக உடை வந்தாலும் சேலைதான் பாரம்பரிய உடையென்றும் பெண்களின் அழகை வெளிப்படுத்தும் உடையாக கருதப்படுகிறது. பெண்களின் உடலின் நளினத்தை நிச்சயம் சேலை வெளிப்படுத்தவே செய்கிறது. புடைவை, புடவை, அல்லது சேலை என்பது, தெற்காசியப் பெண்கள் உடுத்தும் மரபுவழி ஆடையாகும்.
இந்த ஆடை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம் முதலிய நாடுகளின் பெண்களால் விரும்பி அணியப்படுகின்றது. இது பல மொழிகளிலும் பல்வேறு பெயர்களில் அறியப்படுகின்றது. தமிழில் சேலை அல்லது புடவை என்றும், ஹிந்தி, குஜராத்தி, மராட்டி ஆகிய மொழிகளில் சாடி என்றும், கன்னடத்திலும், தெலுங்கிலும் முறையே சீரே, சீரா என்றும் அழைக்கப்படுகின்றது.
சேலை கட்டும்போது இடை ஆடைகளாக பாவாடையும், பிளவுஸ்ம் அணியப்படுகிறது. பொதுவாக அதிகமான பெண்களில் விருப்ப தெரிவு முதலில் இருக்கும். அதிலும் குறிப்பாக வித்தியாசமான சேலை தெரிவில் ஈடுபடுவது பெண்களில் ஒரு செயலாக காணப்படுகிறது. அந்த வகையில் தற்பொழுது ஒரு சேலை இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
அதாவது LED சேலையாக ஒரு பெண் சேலை அணிந்து கொண்டு செல்கிறார். அவரின் சேலையை சுற்றி LED லைட் மின்னுகிறது. குறித்த வீடியோ இணைத்ததில் வைரலாகி குறிப்பாக பெண்கள் மத்தியில் நலன் வரவேற்பை பெற்றுள்ளது. தங்களின் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ காட்சி ….