பல நன்மைகளை கொண்ட Aloe Vera-வில் மறைந்திருக்கும் தீங்குகள் என்ன தெரியுமா?

மருத்துவம்

பல மருத்துவ குணங்கள் நிறைந்த, கற்றாழை Aloe Vera தோல் மற்றும் ஆரோக்கியம் இரண்டுக்கும் ஏராளமான நன்மைகளைக் கொண்டுள்ளது. Aloe Vera ஒப்பனை மற்றும் தோல் பராமரிப்பு தயாரிப்புகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. Aloe Vera-வால் தோல் மற்றும் கூந்தலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. அதில், தீக்காயங்கள், வெட்டுக்கள், உட்புற காயங்கள் ஆகியவற்றை கற்றாழை தன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் காரணமாக விரைவாக குணப்படுத்துகிறது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. ஆனால் இத்தனை பயன்பாடுகள் உள்ள கற்றாழையை அதிகப்படியாக பயன்படுத்தினால், அது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

Aloe vera - succulent Australian Plants Online

கற்றாழை பல வயிற்று பிரச்சினைகளை ஏற்படுத்தும்: Aloe Vera-வில் லேடெக்ஸ் காணப்படுகிறது. இதனால் சிலருக்கு ஒவ்வாமை (allergy)ஏற்படுகிறது. இது வயிற்று எரிச்சல், வயிற்று வலி போன்ற பல வயிற்று பிரச்சினைகளை ஏற்படுத்தும். உடலில் உள்ள பொட்டாசியம் அளவிலும் அதன் பயன்பாட்டால் ஏற்றத்தாழ்வுகள் எற்படலாம்.

Aayuki Aloe Vera - Buy Aloe Vera Cultivation,Raw Aloe Vera,Sri Lanka Aloe  Vera Product on Alibaba.com

கற்றாழை தோல் எரிச்சலையும் ஏற்படுத்தும்: ஏற்கனவே தோல் ஒவ்வாமை உள்ளவர்கள் Aloe Vera-ஐ பயன்படுத்தினால், சிலருக்கு, தோல் ஒவ்வாமை, சிவப்பு கண்கள், தோல் வெடிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படலாம்.

The benefits of aloe vera for digestion

இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையலாம்: கற்றாழை சாற்றை அதிகமாக உட்கொள்பவர்கள் கவனமாக இருங்கள். கற்றாழை சாறு மலமிளக்கிய விளைவுகளைக் கொண்டுள்ளது. இது நீரிழிவு (Diabetes) நோயாளிகளுக்கு எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

Aloe vera : tout savoir sur ses bienfaits et ses utilisations

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *