விருந்து காலங்களில் தமிழர்கள் பயன்படுத்தும் சக்தி வாய்ந்த இயற்கை பொருள்! இவ்வளவு பிரச்சினைக்கும் தீர்வா?

மருத்துவம்

சீனாவில் மருத்துவ குணமிக்க பொருளாக அன்னாசிப்பூ பார்க்கப்படுகிறது. நுரையீரல் வாத நோய்களுக்கு அன்னாசிப்பூவை பயன்படுத்துகிறார்கள். தெற்கு சீனாவில் கண்டெடுக்கப்பட்ட இந்த மசாலா பொருள் இந்தியாவிலும் சீனாவை போன்று மசாலா உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இவை செரிமானத்துக்கு அதிகம் உதவுவதால் அசைவம் மற்றும் மசாலாக்கள் அதிகம் இருக்கும் உணவில் இதை பயன்படுத்தி வருகிறோம். நட்சத்திர வடிவில் இருக்கும் அன்னாசிப்பூவில் வைட்டமின் ஏ, சி, ஆன்டி ஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கிறது. வைரஸ் காய்ச்சலுக்கு தயாரிக்கப்படும் மருந்தில் இருக்கும் ஷிகிமிக் அமிலம் அன்னாசிப்பூவில் இருப்பதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளது. பன்றிகாய்ச்சலுக்கு பரிந்துரைக்கப்படும் டாமிஃப்ளூ என்னும் மாத்திரையில் அன்னாசிப்பூவில் இருக்கும் ஷிகிமிக் அமிலம் தான் உ தவுகிறது.

நுரையீரல், செரிமானக்கோளாறு போக்கும் அன்னாசிப்பூ! - TopTamilNews

நமது உடலில் கல்லீரலில் பாதிப்பை உண்டாக்கும் ஹெபாடைடிஸ் வைரஸ்களையும் அதன் வீரியத்தையும் கட்டுப்படுத்தும் குணம் அன்னாசிப்பூக்கு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவை முன்பே தக்கோலம் என்ற பெயரில் நாட்டு மருந்தாக விற்பனை செய்யப்பட்டதுதான். மாதவிடாய் காலங்களில் பெண்கள் வயிற்றுவலியால் அவதிப்படும் போது அவர்கள் அன்னாசிப்பூ சேர்த்த நீரை குடித்து வந்தால் வலி உணர்வு குறையும். தீவிரமாகாது.

அன்னாசி பூவை உணவில் சேர்க்கலாமா? நன்மைகள் ஏராளமாம் - Lankasri News

விருந்து காலங்களிலும் பலமான உணவுக்குப் பிறகும் உடலில் செரிமானப்பிரச்சனை உண்டாவதுண்டு. உணவு எளிதில் ஜீரணமாக நீரை கொதிக்க வைத்து அன்னாசிப்பூவை சேர்த்து கால் டம்ளராக சுண்டி வந்ததும் அதை குடித்து வந்தால் விருந்து பலமாக இருந்தாலும் ஜீரணம் ஆகும். ஜீரணமண்டலத்துக்கு மட்டுமல்லாமல் வாயு பிரச்சனைக்கும், வயிறு கோளாறு இருப்பவர்களுக்கும் கூட அன்னாசிப்பூ தேநீர் சிறந்த நிவாரணமாக இருக்கும். மனதில் படபடப்பு, பயம் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் தினமும் ஒரு கப் அன்னாசிப்பூ தேநீர் குடித்துவரலாம்.

star anise for children: வளரும் பிள்ளை வயிறு வலின்னு அழுதா இதை கொடுங்க  வயிறுகோளாறு எல்லாமே சரியாகும்! - home remedies for indigestion for growing  children | Samayam Tamil

இவை மன அழுத்தம் படபடப்பு பிரச்சனைகளை குறைக்கும். குழந்தைகள் மந்தமாக இருந்தால் அவ்வபோது அன்னாசிப்பூவை நீரில் கொதிக்க வைத்து குடிக்க வைத்தால் சுறுசுறுப்பாக வளைய வருவார்கள். உற்சாகமாக இருப்பார்கள். சோர்வும் தெரியாது. சளி, இருமல், காய்ச்சல் மூன்றும் சேர்ந்துவரும் காலத்தில் இரண்டு டம்ளர் தண்ணீரோடு அன்னாசிப்பூ 5 கிராம் சேர்த்து சிறுதுண்டு இஞ்சியை நறுக்கி சேர்த்து கால் டீஸ்பூன் சீரகம் கலந்து கொதிக்க வைத்து மிளகுத்தூள் சிட்டிகை ,இனிப்புக்கு தேன் கலந்து குடித்துவந்தால் காய்ச்சல் காணாமல் போகும்.

மார்பக அளவைப் பெரிதாக்கும் சில சமையலறை மூலிகைப் பொருட்கள்! | No Silicones –  These Plants Will Make Your Breasts Bigger - Tamil BoldSky

சுவாசப்பாதையில் பிரச்சனை, நுரையீரல் பாதிப்பு, சளி தொந்திரவு, அஜீரண கோளாறு இருப்பவர்களும் தினம் ஒருமுறை இதை குடித்துவந்தால் நிவாரணம் பெறலாம். சுவாசப்பாதையில் ஏற்படும் நுண்கிருமிகள் தொற்று மேலும் பரவாமல் இருக்கவும் அதை வெளியேற்றவும் அன்னாசிப்பூவை பொடித்து தேனில் குழைத்து தினமும் இரண்டு வேளை உட்கொள்ள வேண்டும்.

Star Anise Benefits In Tamil

சுவாசப்பிரச்சனைகள் தொடர்ந்து இருந்தால் அன்னாசிப்பூவை நீரில் கொதிக்கவைத்து சுண்டிய பின்பு வடிகட்டி சாப்பிடுவதற்கு முன்பு குடித்துவந்தால் சுவாசப்பிரசனை படிப்படியாக நீங்கும். தொண்டைவலி குணமடையும். சளி கட்டியாக இருந்தாலும் அதை கரைத்து வெளியேற்றும். இருமலும் படிப்படியாக குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *