உக்கிரமாக கொரோனா தொற்று… புதிய ஆண்டில் குருபெயர்ச்சிக்கு பின்பு நடக்கும் அதிர்ஷ்டம்! பஞ்சாங்கம் வெளியிட்ட பல உண்மைகள்

ஆன்மீகம்

நடப்பு சார்வரி ஆண்டை காட்டிலும் அடுத்த பிலவ ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று பஞ்சாங்கம் கணிப்பில் தெரிய வந்துள்ளது. திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்தை அடுத்த செதளபதி கிராமத்தில் உள்ள முக்தீஸ்வரர், ஆதிவிநாயகர் ஆலயத்தில் உள்ள சிவ வேத ஆகம பாடசாலையில் அடுத்த தமிழ் ஆண்டுக்கான பஞ்சாங்க கணிப்புகள், பஞ்சாங்கத்தில் சாஸ்திரபடியான பண்டிகைகள், திதிகள், திருவிழா தேதிகள் ஆகியவற்றை முடிவு செய்யும் பஞ்சாங்க சதஸ் எனப்படும் கூட்டம் நடைபெற்றது. பஞ்சாங்க சதஸில் சிவ வேத ஆகம பண்டிதர்கள் பலரும் கலந்து கொண்டு வேத சாஸ்திர படி பஞ்சாங்க நடைமுறைகளை முடிவு செய்தனர். இந்த சதஸின் முடிவுபடியே அடுத்த தமிழ் பிலவ ஆண்டுக்கான பஞ்சாகம் வெளியிடப்படும் என்பது குறிப்பிடதக்கது.

கொரோனா வைரஸ் இல்லாத 15 நாடுகள்.. இதுவரை ஒரு பாதிப்பு கூட இல்லை -ஒரு அலசல் |  World News in Tamil

இந்த கருத்தரங்கில் ஆற்காடு, மருத்துவகுடி, அழகர்கோயில் மற்றும் இலங்கை நாட்டின் பஞ்சாங்க பதிப்பாளர்கள் ஆன்லைன் மூலம் கலந்துக் கொண்டனர். பின்னர், பஞ்சாங்க கணிப்பு குழுவின் தலைவர் கூறுகையில், இந்த சார்வரி ஆண்டை தொடர்ந்து அடுத்த பிலவ ஆண்டு தொடக்கம் வரை இப்போது நாடு சந்தித்து கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கும்.

மக்கள் உடல் நலன் பெறுவர் சார்வரி பஞ்சாங்கம் கணிப்பு | Dinamalar

பிலவ ஆண்டின் தொடக்கத்தில் வைரஸின் தாக்கம் உக்கிரமாக இருக்கலாம். எனினும் 2021ம் ஆண்டு குரு பெயர்ச்சிக்கு பின்பு கொரோனா வைரஸ் முழுமையாக தீரும். இந்த ஆண்டை விட அடுத்த ஆண்டு அதிகமாக மழைப்பொழிவு இருக்கும்.

உலகை ஆட்டம் காண வைத்துள்ள கொரோனா வைரஸ்!! | Health News in Tamil

விவசாயிகள் செழிப்புடன் வாழ்வார்கள். மக்கள் பிரச்சனைகளில் இருந்து விடுபட இறைவழிப்பாட்டில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *