வீட்டில் எலிகளுக்கு அடுத்தப்படியாக அதிக பிரச்சனைகளை தருவது இந்த பல்லிகள் தான். அதுவும் குழந்தைகள் இருக்கும் வீட்டில், பல்லிகள் இருந்தால் சற்று கூடுதல் கவலை தான். வீட்டில் ஆங்காங்கே சுற்றித் திரியும் பல்லிகளால் ஒவ்வொரு நாளும் சி ர ம மாக தான் இருக்கும். இதை அகற்றுவது எப்படி என்றும், அது தொடர்பான சில எளிய வழிகளை தற்போது காணலாம்.
பிரிஞ்சு இலை- கோழி முட்டை ஓடு- வெங்காயம்- பூண்டு பிரிஞ்சு இலை
பிரிஞ்சு இலை = பிரிஞ்சி அல்லது பிரியாணியில் வாசனைக்காக பயன்படுத்தும் பொருள் தான் இந்த பிரிஞ்சு இலை. இந்த இலையை நெ ரு ப் பி ல் எ ரி த் தா ல் கிளம்பும் பு கையை, பல்லி இருக்கும் இடங்களில் பரவ விடுங்கள். பிறகு பல்லிகள் நடமாட்டம் அப்பகுதியில் இருக்காது.
கோழி முட்டை ஓடு – உடையாத கோழி முட்டை ஓடு இருந்தால், அதனை பல்லி சுற்றும் இடங்களில் ஆணி அடித்து அதன் மேல் முட்டை ஓட்டை வையுங்கள். நம் வீட்டில் கோழி வளர்ப்பதாக நினைத்து பல்லிகள் உள்ளே வராது. அது பல்லிக்கு அச்சமூட்டும் ஒரு பொருள்.
வெங்காயம் – வெங்காயத்தை சிறு து ண் டு க ளா க வெ ட் டி எடுத்துக்கொள்ளுங்கள். அந்த துண்டை, பல்லி உலாவும் இடங்களில் வைத்துவிடுங்கள். அப்போது, பல்லியின் தொ ந் தரவு குறையும். மேலும், வெங்காய சாற்றை அப்பகுதியி;ல் தெளித்தாலும் பல்லி வராது.
பூண்டு – பூண்டு பற்கள் பல்லிக்கு ஆகாவே ஆகாத பொருட்களில் ஒன்று. எனவே அவற்றை பல்லி எப்போதும் திரியும் இடங்களில் வைத்து விட்டால், அந்த இடத்தில் இருந்து பல்லி காணாமல் போய்விடும்.