இரட்டைக் குழந்தைகள் என்பது பொதுவாக அனைவரின் ஆவலை தூண்டக்கூடிய ஒரு விஷயமாகும். இரட்டையர்கள் என்போர் ஒன் றாகப் பிறந்த குழந்தைகள் என் றே எண்ணப்படுகிறார்கள். ஆ னால் மிகவும் அபூர்வமாக ஒரே நாளில் இரு குழந்தைகளும் பிற க்காமல், அடுத்தடுத்த நாளில் பிறந்தவர்களும் இருக்கின்றனர். இரட்டைப் பிள்ளைகள் இரண்டும் ஒரே பாலாக இருக்கும். அதாவது இரண்டும் ஆணாக இருக்கும்; அல்லது இரண்டும் பெண்ணாக இருக்கும். ஒரே பெற்றோருக்குத் தனித்தனியாகப் பிறக்கும் பிள்ளைகளிடத்தில் எவ்வளவு ஒற்றுமை காணுமோ அவ்வளவேதான் இந்த உடன்பிறப் பிரட்டைப் பிள்ளைகளிடமும் காணும். பெரும்பாலும் நிமிட இடைவெளியுடன் பிற ந்திருப்பவர்களே அதி கம். இதிலிருந்து என்ன தெரிகிறது, இரட்டை யர்கள் வெவ்வேறு பிறந்த நாட்களையும் கொண்டி ருக்க முடியும். ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தை ஐடென்டிக்கல் இரட்டையர்களாக இருக்க முடியுமா? இதற்கான எளிமையான ஒற்றை வரி பதில் – ‘முடியாது’ என்பதே.

இரட்டையர்களைப் பொறுத்தவரை அவர்களின் குணங்களில் பல மாறுபாடுகள் இருந்தாலும் அவர்களுடைய உருவ அமைப்பானது ஒரே தன்மை போன்று இருப்பார்கள். எங்களது பள்ளிக்காலத்தில் எங்களுடன் இரட்டையர்கள் படித்தால் நமக்கே தெரியும். இருவரில் யார் ராமன்? யார் லெட்சுமணன்? என ரொம்பவே குழம்பிப் போய் இருப்போம்.

பொதுவாக இரட்டையர்களில் அதிகமானோருக்கு இந்த பெயரே வைக்கப்படுகிறது. அவர்களின் உருவ அமைப்பு ஒரே மாதிரியாக காணப்படுவதால் பெரியவர்களுக்கே இதை கண்டுபிடிப்பதில் குழப்பம் இருக்கும் அல்லவா, இந்நிலையில் குழந்தைகளின் நிலையை கேட்கவா வேண்டும்?

இந்த வீடியோ காட்சியிலும் ஒரு குழந்தை இப்படித்தான் தன் தாய் யாரென்று தெரியாமல் தடுமாறுகின்றது. தாயோடு பிறந்த இரட்டையரில் யார் தனது தாய் என்பதை தெரியாமல் குழம்பித் தவிக்கிறது. தன்னுடைய தாய் யாரென்று தெரியாமல் ஒருவரின் மடியில் இருக்கும் குழந்தை எதிரில் இருப்பவரும் அதேபோல் இருக்க அழுதுகொண்டு அவரிடம் போகிறது.

மீண்டும் மற்றைய இரடையரில் ஒருவரை பார்த்ததும் அவர் தன் தாய் என எண்ணி மீண்டும் அவரிடம் செல்கிறது . மீண்டும் அழுதுகொண்டு இப்போது எதிரிலே இருப்பவரிடம் போகிறது. இரட்டையர்களும் இதை ரசித்து விளையாட்டு காட்டுகிறார்கள். ரசனையான வீடீயோ பாருங்கள். உள்ளே இணைக்கப்பட்டுள்ளது.

வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.