வளர்ச்சியடைந்த, வளாச்சியடைந்துவரும் நாடுகள் என்ற எதுவித வேறுபாடுகளுமின்றி ஒன்றிற்கு ஒன்று சளைத்ததில்லை என கூறுமளவிற்கு பாரிய பிரச்சினையாக சிறுவர் துஷ்பிரயோகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறன.அந்த வகையில் சிறுவர்கள் நாளைய சமூகத்தின் அடிநாதங்கள், அவர்களது உரிமைகள் மீறப்படுவதும் மறுக்கப்படுவதும் தவறாக வழி நடாத்தப்படுவதும் இன்றைய நவீன உலகம் எதிர்நோக்குகின்ற பல சவால்களில் முதன்மையானதாகவுள்ளது.
சிறுவர்கள் சமூக கட்டமைப்பில் பெற்றோர்கள், பெரியோர்கள், ஆசிரியர்கள், அயலவர்கள் குடும்ப அங்கத்தவர்கள் என அனைவரினதும் வழிகாட்டலிலும் அன்பிலும் அரவணைப்பிலும் வளர்தெடுக்கப்பட வேண்டியவர்கள் ஒவ்வொருவரும் சிறுவர்களின் ஒவ்வொரு அசைவினையும் கவனமாக அவதானித்து அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தாத வகையில் அன்பினால் வழி நடாத்தப்படல் வேண்டும்.
இன்றைய உலகில் பெற்றோர்கள் வறுமை உயர் அந்தஸ்து போன்ற பல காரணங்களால் தங்களது பிள்ளைகளுடன் இருப்பதற்கு நேரம் ஒதுக்குவதில்லை. தாய், தந்தை இருவரும் தொழிலுக்கு செல்பவர்களாக இருக்கிறார்கள். இதனால் பிள்ளைகள் உறவினர்களதும் சிறுவர் காப்பகங்களிலும் வளர்ந்து வருகிறார்கள்.
இவ்வாறு வளர்க்கப்படும் பிள்ளைகள் தாய் தந்தையின் அன்பை அரவணைப்பை இழக்கிறார்கள் சிறு வயதிலேயே மனதளவில் தாங்கள் ஓரங்கட்டப்பட்டவர்களாக தனிமை சூழ ஒரு வித ஏக்கத்துடன் வளர்கிறார்கள். காலப்போக்கில் தனிமை விரக்தியாக மாறி கட்டுப்பாட்டை மீறி வெளியில் வாழ ஆரம்பித்து விடுகிறார்கள்.
இன்று உலகில் பெரியவர்கள் எதை செய்கின்றார்களோ அதை அவதானிக்கும் குழந்தைகள் அவ்வாறே செய்கின்றனர். பெரியவர்கள் காட்டும் கோபம், சுயநலம், சண்டை, அடிதடி, கெட்ட பழக்கவழக்கங்கள் என அனைத்துமே இதில் அடங்குகின்றது. இங்கு காணொளி ஒன்றில் இதனை அருமையாக விளக்கப்பட்டுள்ளது
பெரியவர்கள் செய்யும் அனைத்து காரியங்களையும் அவதானிக்கும் குழந்தைகள் அப்படியே தங்களது குணத்தினையும் வெளிக்காட்டுகின்றனர். பெற்றோர்களே சற்று உஷாராகவே இருங்கள்… உங்களை குழந்தைகள் அனைத்து நேரங்களிலும் கவனித்து கொண்டு இருக்கின்றனர். அதனை செய்யவும் செய்கின்றனர் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
வீடியோ கீழே !!
Powerful message.👌 pic.twitter.com/X2uut86AiM
— Awanish Sharan (@AwanishSharan) November 30, 2020