உலகில் முதலில் தோன்றியது ஆணா? பெண்ணா? இந்து மதத்தில் நவீன அறிவியல் உண்மைகள் !!

ஆன்மீகம்

இந்துமதத்தில் நவீன அறிவியல் உண்மைகள் (Advanced Science) இருப்பதை உலகம் வெகு வேகமாக உணர்ந்து வருகிறது.மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதிலோர் மகிமை இல்லை; திறமான புலமை எனில் வெளிநாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும்  என்று சொற்தேரின் சாரதியாம் பாரதி பாடி வைத்தான். அது உண்மையாகி வருகிறது சிவபெருமானின் நடனத்தில் பிரபஞ்சத்தின் தாள லயங்கள் (Dance of Shiva) இருப்பதை பல வெளிநாட்டு அறிஞர்கள்

 

ஆங்கிலத்தில் புத்தகம் வாயிலாக வெளியிட்டனர். அதை நடராஜர் என்னும் அற்புதமான பஞ்சலோக சிலையாக வடித்த தமிழ் ஸ்பதிகளின் பெருமையை இன்றும் உலகமே வி ய ந்து பாராட்டி வருகிறது. நடராஜர் சிலை இல்லாத மியூசியம் உலகில் இல்லை. நடராஜர் படமோ விக்ரகமோ இல்லாத வெளி நாட்டு இந்தியவியல் அறிஞர் எவரும் இல்லை. கண்ணபிரானின் விஸ்வரூப தரிசனம் பகவத் கீதையின் 11ஆவது அத்தியாயத்தில் இருக்கிறது.

 

உலகின் மிகப்பெரிய அணு விஞ்ஞானி (Father of Atomic Bomb) ராபர்ட் ஓப்பன்ஹீமர், அணுகுண்டின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். அவர் முதல் அணுகுண்டு வெடித்த கட்சியைப் பார்த்துவிட்டு பகவத் கீதையின் 11 ஆவது அத்தியாயத்தின் 12ஆவது ஸ்லோகத்தைச் சொல்லி வியந்தார். திவி சூர்ய சஹஸ்ரஸ்ய. ஆயிரம் சூரியன் ஒரே சமயத்தில் உதித்தால் என்ன நிகழுமோ அதைப் பார்த்து எனக்கு மயிர்க்கால்கள் தோறும் கூ ச்சம் ஏற்படுகிறது என்று சொல்லி அர்ஜுனர் வி ய ந்த தை அப்படியே ராபர்ட் ஓப்ப்ன்ஹீமர் சொல்லி உலகை வி ய  ப்பி ல் ஆழ்த்தினார்.

 

இப்பொழுது கருந்துளைகள் (Black Holes) பற்றி உலக விஞ்ஞானிகள் எழுதி வி ய ந்து வருகின்றனர். வானவியலின் புதியஅ திச யங் கள் இவை. யாராவது ஒருவர் நியூ ஸைன்டிஸ்ட் (New Scientist or Scietific American) அல்லது ஸைன்டிபிக் அமெரிக்கன் போன்ற அறிவியல் இதழ்களை வாசித்து விட்டு பகவத் கீதையைப் படித்தால் புதுப்புது அர்த்தங்கள் கிடைக்கும். பிளாக் ஹோல் என்னும் கருந்துளைகள் பற்றிய செய்திகள் அதில் (11ஆவது அத்தியாயத்தில்) உள்ளன. ஆனால் பிரம்மா பற்றிய விஞ்ஞான உண்மைகளை யாருமே அறிந்து எழுதவில்லை. ஒரு சில அ றி வி  யல் உண்மைகளை மட்டும் பட்டியலிடுகிறேன்.

 

அறிவியல் உண்மை 1

கடந்த நூறு ஆண்டுகளாகத்தான் பில்லியன் கணக்கில் நட்சத்திரங்களும் அதைச் சுற்றி மில்லியன் கணக்கில் பூமி போன்ற கிரகங்களும் இருப்பதை உலகம் அறியும். அதில் பல்லயிரம் கிரகங்களில் வெளி உலகவாசிகள் (Extra Terrestrials) வசிக்க உள்ள வாய்ப்புகள் பற்றியும் விஞ்ஞானிகள் அறிவர். ஆனால் சத்ய லோகத்தில் வசிப்பதாகக் கருதப்படும் பிரம்மா பற்றிப் படிக்கையில் அவர் ஒரு வெளி உலகவாசியோ என்று வி ய க்க த் தோன்றும்.

 

அவருடைய வாழ்நாளின் காலம் நாம் இந்தப் பக்கத்தில் எழுத முடியாத அளவு பெரிய எண்ணிக்கை. மற்ற கலாசாரங்களுக்கு 1000, 10,000 என்ற எண்கள் கூடத் தெரியாத காலத்ததி , நாம் உலகமே வி ய க் கு ம் ஆயுளை பிரம்மாவுக்குக் கொடுத்தோம் அது மட்டுமல்ல இது ஒரு பிரம்மாவின் ஆயுள். அவர் போன பின், அடுத்த ப்ரம்மா வருவார் என்றும் சொன்னோம். இன்னும் விஞ்ஞானிகளுக்கு — காலம் என்பது சுழற்சி உடையது— Cyclical வட்டமானது என்று கூடத்தெரியாது. இப்பொழுது கருந்துளை ஆய்வுகள் நிறைய நடப்பதால் நமது கொள்கையை வெகு விரைவில் உலகம் ஏற்கும்.

 

பிரம்மாவின் ஒரு நாள் என்பது 4,320000,000 ஆண்டுகள். இது போல அவர் 100 ஆண்டுகள் வாழ்ந்த பின்னர் புது பிரம்மா வருவார். இப்பொழுதுள்ள பிரம்மாவுக்கு வயது 51. ஏதோ அறிவியல் புனைக்கதை (Science Fiction) படிப்பது போலத் தோன்றும்.. இது கதை என்று யாராவது நினைத்தாலும் முதலில் அறிவியல் புனைக் கதை எழுதிய பெருமை நமக்கே கிடைக்கும். அது மட்டுமல்ல. யுகம் பற்றிய எதைக் கூட்டிப் பார்த்தாலும் ஒன்பது என்ற எண் வரும். இதை சுமேரியர்கள் கூட நம்மிடமிருந்து எடுத்துக் கொண்டு பி ர ள ய த்துக்கு முந்தைய சுமேரிய மன்னர்களுக்கு இப்படி ஆட்சி ஆண்டுகளைக் கொடுத்துள்ளனர்!

 

அறிவியல் உண்மை 2

பிரம்மாவுக்கு ஒரு பெயர் ஹிரண்ய கர்பன். அதாவது தங்க முட்டை! உலகம் உருண்டை என்பதைக் கண்டுபிடிக்க மேலை நாடுகள் ஒரு கலீலியோ, ஒரு கோப்பர்நிகஸ் தோன்றும் வரை காத்திருந்தது. ஆனால் நாமோ துவக்க காலம் முதல் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் கோள வடிவானவை என்பதை அறிந்து, அண்டம் ( முட்டை வடிவானது), பிரம்மாண்டம், பூகோளம் (புவியியல்) என்று பெயரிட்டோம்.

 

அதுமட்டுமல்ல. அந்த ஹிரண்யகர்ப்பன் ஒரு நாள் தி டீ ரெ ன வெ டி த்து வானமும் பூமியுமாகப் பி ள ந்த தென புராணங்கள் பகரும் இதையே இப்பொழுது மாபெரும் வெ டி ப் பு Bi g Ba n g Th e ory பிக் பேங் என்று சொல்லுகின்றனர். இது ஏன் ஏற்பட்டது என்று விஞ்ஞானிகளால் விளக்க முடியவில்லை. நமது சாத்திரங்கள் மட்டுமே கடவுள் ஒரு சொல்லை நினைத்தார் — அதைச் சொன்னார் உலகம் உருவாக்கப்பட்டது என்று சொல்லுகிறது. இதை பைபிள் அப்படியே நம்மிடமிருந்து எடுத்துக் கொண்டது. ஆனால் அதற்கு மேல் விளக்கவில்லை.

 

நாம் அதற்கும் மேலாக ஒரு படி சென்று மாபெரும் வெ டி ப் பு  —ஒரு நாளைக்கு பலூன் போல ஊதிக்கொண்டே போய் பின்னர் முடிவில் வெ டி க் கு ம் —அப்பொழுது காற்றுப் போன பலூன் போல பிரபஞ்0சம் சுருங்கும் Big Crunch — மீண்டும் பலூன் போல ஊதும் — என்று – ஸைக்ளீகல் Cyclical —வட்டமான சுழற்சி உடையது என்று சொல்லியிருக்கிறோம். இந்த பிக் க்ரஞ்ச் Big Crunch – கொள்கையை இப்பொழுதுதான் விஞ்ஞானிகள் ஏற்கின்றனர்.

 

அறிவியல் உண்மை 3

தசாவதாரத்தில் முதலில் மீன், பிறகு ஆமை, பிறகு பன்றி, பிறகு பாதி மனிதன் பாதி சிங்கம் என்பதெல்லாம் டார்வீன் சொன்ன பரிணாமக் (Theory of Evolution) கொள்கையை ஒட்டி இருப்பதை நாம் அறிவோம்.

ஆனால் முதல் மூன்று அவதாரங்களும் உண்மையில் ஆதி நூல்களில் பிரம்மாவின் பெயரிலேயே (பிரஜாபதி) உள்ளன. ஆக அவரே படைப்புக் கடவுள்—பரிணாம வளர்ச்சிக் கடவுள். இதை சதபத பிராமணம் (Satapata Brahmana) முதலிய நுல்கள் விளக்கும். பின்னர் இதை விஷ்ணுவின் அவதாரங்களாக புராணங்கள் எழுதின. இதை இன்னொன்றாலும் அறியலாம்.

 

அறிவியல் உண்மை 4

வெளிநாட்டுக்காரர்களுக்கு கி ளு கி ளு ப் பூட் டு ம் ஒரு விஷயம் நம் இலக்கியங்களில் உண்டு. அதை எழுதி, எழுதி நம்மை நக்கல் செய்வது பகடி, செய்வது கிண்டல் செய்வது அவர்களுக்குப் பொழுதுபோக்கு. அது என்ன ’பலான’ கதை என்கிறீர்களா?

பிரம்மா ஒரு மகளைப் பெற்றார். அவள் பெயர் சதரூபா (நூறு உருவம்) அவல் அழகைக் கண்டு பிரம்மா அவளையே உற்று நோக்கினார். அவளுக்கோ வெட்கம் பிடுங்கித் தின்றது- வேறு திசையில் ஓடி ஒளிந்தாள் அங்கேயும் பிரம்மா திரும்பினார். ஒவ்வொரு திசையிலும் ஒரு முகம் வரவே அவருக்கு நாலு முகம் தோன்றி அவர் நான்முகன் ஆனார். அவளோ வெட்கப்பட்டுக் கொண்டு மேலே போனாள். அங்கு ஐந்தாவது முகம் உதித்தது. அவளுடன் ஒன்று கூடிப் (Incestual Intercourse) பின்னர் உலகத்தைப் படைத்தார்.

 

இதைச் சொல்லிச் சொல்லி வெளிநாட்டினர் மகிழ்வர். உண்மையில் இந்தக் கதையை பைபிளும் முதல் அத்தியாயத்திலேயே எழுதியுள்ளது. அதாவது, ஆதாம் என்பவரின் இடுப்பு எலும்பை கடவுள் முறித்து ஏவாள் என்ற பெண்ணை உருவாக்கவும், ஆதாம் அவளுடன் கூடி (Incest?) மனித இனத்தை உருவாக்கினார் என்பது அக்கதை. ஒரே உ ட லி ல் இருந்து ஒருவரைப் படைத்தால் அந்த ஏவாளும் சதரூபா போல ஆதாமின் மகள்தானே!!இதில் உள்ள அறிவியல் உண்மை என்னவென்றால் முதலில் பாக்டீரீயா போல இருந்த உயிரினம் ஒரு செல் உ யி ரினங்களாக மாறி நீரில் நீந்தி பிறகு ஒரே உ டலில் ஆண் பெண் உறுப்புகளுடன் பிறந்தன (ஹெர்மாப்ரோடைட் Hermaphrodite). பின்னர்தான் ஆண், பெண் என தனித்தனி உ யி ர் இனங்கள் தோன்றின. இதை அர்த்தநாரீஸ்வரர் என்னும் சிவனின் வடிவத்துடன் ஒப்பிடலாம்.

 

முதலில் ஆண் தோன்றினானா? பெண் தோன்றினாளா? முதலில் முட்டை வந்ததா? கோழி வந்ததா? (Chicken and Egg question) என்ற கேள்விக்கு விடை கூறும் கதை இது. பெரிய விஞ்ஞான உண்மைகளை, சுவையான கதைகளாகத் தருபவை தான் புராணங்கள்!

அறிவியல் உண்மை 5

பிரம்மாவின் தோற்றம் பற்றிய கதை பெரிய பூகர்ப்பவியல் ( Geology ஜியாலஜி) கதையாகும். அவர் நீரில் படுத்து இருந்த நாராயணனின் தொப்புள் கொடியில் இருந்து உதித்த தாமரை மலரில் இருந்து தோன்றியதாக ஒரு கதை உண்டு. இது காண்டினென்டல் ட்ரிப்ட் Continental Drift எனப்படும் கண்டங்கள் நகர்ந்த கதை ஆகும். முதலில் பூமி என்பது ஒரே நிலப்பரப்பாக இருந்தது பின்னர் அது தாமரை மலர்வது போல மெதுவாக நகர்ந்து இன்றுள்ளது போல ஆசியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா எனப் பிரிந்தது.

 

இதையே தாமரையில் பிரம்மா தோன்றி உலகைப் படைத்தார் என்போம். புராணத்தில் கூட பிரம்மாண்டம் என்று இருப்பதைக் காணலாம். ‘ப்ரு’ என்னும் வடமொழி வேர்ச் சொல் மூலமே ‘’பெருகுதல், பிரிதல், பெரிய, ப்ருஹத், ப்ரம்ம’’ முதலிய சொற்கள் வந்தன.கிரேக்க மொழியில், முதலில் இருந்த சூப்பர் கான்டினென்ட்டை ‘’பங்கேயா’’ Panagaea என்பர். பங்கய என்றால் தாமரை எனப் பொருள். இது பங்கஜம் என்ற வடமொழிச் சொல். பிற்காலத்தில் இந்தப் பொருள் அறியாதோர்

 

கிரேக்க மொழியில் புதுப் பொருள் கண்டனர் ( பேன்+ கயா ). பெண்கள் குழந்தை பெறுவதையும் தாமரை மலரில் இருந்து குழந்தை வந்ததாக வடமொழி இலக்கியங்கள் வருணிக்கும்.

அறிவியல் உண்மை 6

பிரம்மா என்பவர் வானவியலை (Astronomy/ Cosmology) விளக்கும் கடவுள்

பூகர்ப்பவியலை (Geology) விளக்கும் கடவுள்

உயிரியல், பரிணாம வளர்ச்சியை (Biology / Theory of Evolution) விளக்கும் கடவுள்

கணிதம், பிரம்மாண்ட எண்களை (Mathematics and Amazing Numbers) விளக்கும் கடவுள்

பிக் பேங், பிக் க்ரஞ்ச் (Big Bang and Big Crunch) முதலிய அதி நவீன கொள்கைகளை (Ultra Modern Theories) விளக்கும் கடவுள்!! என்று புராணங்கள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *