குழந்தைகள் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலும் அதற்கு பிடித்ததாகதான் இருக்கும்.
திறமை எல்லோரிடமும் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட துறையில் இந்த திறமை அதிகமாக இருக்கும். அது எந்த துறை என்பதை உணர்ந்து தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அதன்பின்பு அதை வளர்ப்பதற்கு என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்றுவது என்று யோசிக்க வேண்டும்.
அதற்கு நாம் அந்த துறையைப் பற்றிய தகவல்களை விரல்நுனியில் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் குழந்தைகள் விரும்பிய துறையில் ஜொலிக்க முடியும். குழந்தைகள் வளர்ப்பில் தனி கவனம் செலுத்த வேண்டும். எந்த எழுது பொருட்களும் குழந்தைகளின் கையில் கிடைத்தால், பார்க்கும் இடங்களில் எல்லாம் கிறுக்கி வைப்பார்கள்
இந்த குழந்தைகளுக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் இருக்கிறது என்பதை அறிந்து ஊக்கப்படுத்த வேண்டும். பாட்டு, நடனம், நடிப்பு, இசை, விளையாட்டு,பேச்சு, ஆராய்ச்சி இதில் எந்த துறையில் ஆர்வம் உள்ளது என குழந்தைகளின் செயல்பாடுகளை வைத்தே கண்டு பிடிக்கலாம். குறித்த வீடியோ காட்சியில் சிறு குழந்தைகள் செய்யும் எந்த ஒரு விடயமும் ரசிக்கும் வகையில் இருக்கும்.
அப்படி 2 வயதுக்கும் குறைவாக காணப்படும் இந்த குழந்தை ஆடும் பரதநாட்டியம் காண்போரை ஆச்சரியபட வைத்துள்ளது. குறித்த காணொளியில் சரியாக நடக்க கூட வராமல் இருக்கும் ஒரு குழந்தை பரதநாட்டியம் ஆடுவதோடு பாட்டிற்கு ஏற்றார்போல் பரதநாட்டியத்திற்குள்ள முத்திரைகளும் வைத்து அ சத்துகிறார்.
சிறு குழந்தையின் இந்த நடனத்தை பார்த்தா நீங்களே வி ய ந்து போவீங்க….