பாம்பு சட்டை உரிப்பதை முழுவதும் பார்த்ததுண்டா?.. இதுவரை அவதானிக்காத அரிய காட்சி இதோ

மருத்துவம்

பொதுவாக உடல் வளர வளர, ஓட்டையோ தோலையோ நீக்குவதே விலங்குகளின் இயல்பு.பாம்புகள் காலுறை போன்று ஒரே பொருளாக உரித்து விடுகின்றன. இதைத்தான் தமிழில் பாம்புச்சட்டை என்கிறோம். ஒரு பாம்பின் உடல்நலம் எவ்வாறிருக்கிறது, எவ்வளவு பெரிது என்பதோடு, அது எந்த வகைப் பாம்பு என்று ஓரளவிற்கு அறியவும் துணைபுரிகிறது பாம்புச்சட்டைகள்.

உடல்நலன் குன்றிய அல்லது மிகவும் வயதானப் பாம்புகளின் சட்டை ஒரே பையாக இல்லாமல் பல பகுதிப் பகுதிகளாக இருக்கும்.பாம்புகளின் கண்களிலும் தோலுரிக்க வேண்டும் என்பதால் தோலுரிக்கும் முன்னர் கண்களில் பொறை விழுந்தது போல் இருக்கும். இந்த நேரங்களில் பாம்புகள் சற்றே அதிகமான அச்சத்துடனும், கோபத்துடனும் இருக்கின்றன.

பொதுவாக கண்களிலுள்ள பழந்தோலைக் கல்லிலோ சற்றே கூரான உராயும் தளங்களிலோ உரசி உதிரவைக்கிறது. பின்னர் தலை முதல் வால் வரையிலான சட்டையை உரித்துவிடுகிறது. அவ்வாறு பாம்பு சட்டையை உறிக்கும் காட்சியினை தற்போது காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *