சனி பகவனால் ஏற்படும் பிரச்சினைகளும் !! அதனை சரி செய்ய எளிய பரிகாரங்களும் !!

ஆன்மீகம்

நீங்கள் தொடர்ச்சியாக தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும். சனிக்கிழமை நாட்களில் நாள் தோறும் சனி பகவானுக்கு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய்யில் தீபம் ஏற்றி வழிபடவும். மேலும், கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம். சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.

 

சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் குளியல் செய்தால் கெ டு தல் குறையும். ஸ்ரீஆஞ்சநேயருக்கு வடை மாலை அல்லது வெற்றிலை மாலைஅல்லது வாழைப்பழமாலை சாற்றி வழிபடுதல் வேண்டும். அனுமார் வழிபாடு சனி பகவானின் தொ ல்லைகளை குறைக்கும்.

 

ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம். அவருடைய வாகனமான நாய்களுக்கு உணவு அளிக்கலாம். தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம். வேத பாடசாலையில் வேதம் படிப்பவர்களுக்கு உதவி செய்யலாம்

 

அத்துடன் அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்யலாம்.  இவ்வாறு செய்து வருவதால் சனி பகவனால் ஏற்படும் பிரச்சினைகலிலிருந்து  மீண்டு விடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *