ஆயிரக்கணக்கில் குட்டியிட்டு வாய் பிளக்க வைத்த ஆண் கடற்குதிரை! மில்லியன் பேர் பார்த்த காட்சி

காணொளி

கடற்குதிரை ஒன்று கடலுக்கு அடியில் தனது குட்டிகளை ஈனும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. இதுவரை பார்த்திராத காட்சிகள் இவை என்பதால் இவை வைரலாக்கப்படுகிறது கடற்குதிரையை பொருத்தமட்டில் ஆண் குதிரையே குட்டி போடும். கிட்டதட்ட காங்காருகள் தனது குட்டியை மடியில் கட்டி கொள்வது போன்றுதான். இந்த வீடியோ பதிவிட்ட சில மணிநேரத்தில் வைரலாகியுள்ளது.

அதாவது பெண் கடற்குதிரைகள் தங்களின் முட்டைகளை ஆண்களின் வால் பகுதியில் உள்ள இனப்பெருக்க பைகளில் போட்டுவிடும். அதனை ஆண் கடற்குதிரைகள் கங்காரு போல பேணி காத்து 6 வாரங்கள் பாதுகாத்து குஞ்சு பொரிக்கும். சுமார் 200 முட்டைகளில் 50 முதல் 100 வரையிலான குட்டிகள் வெளியே வரும்.

கடற்குதிரையை பொருத்தவரை குட்டி ஈனுவதோடு சரி. அதை பராமரிப்பது கிடையாது. அது போல் அதற்கு உணவை கொடுக்காது. மற்ற உயிரினங்களிடம் இருந்து பாதுகாக்கவும் செய்யாது.

இதனால்தான் அந்த குட்டிகள் பெரும்பாலும் மற்ற உயிரினங்களுக்கு இரையாக சென்றுவிடும் இல்லாவிட்டால் இறந்துவிடும். இதனால்தான் கடற்குதிரைகள் நிறைய எண்ணிக்கையில் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *