அதிக அதிர்ஷ்டத்தைப் பெற போகும் 5 ராசிகள் !! யாருக்கு என்ன சனி தொடங்குகிறது தெரியுமா!!

ஆன்மீகம்

சனிப் பெயர்ச்சியின் போது சுப பலன், உன்னதமான பலனைப் பெறப்போகும் ராசிகள் எவை, ஏழரை சனியைத் தாண்டி, சனி பகவான் ஒரு ராசியிலிருந்து 3, 5, 6, 9, 10, 11 ஆகிய இடங்களில் இருந்தால் சிறப்பான பலன்களை தருவார். அப்படி எந்த ராசியினர் இந்த முறை சிறப்பான அதிர்ஷ்ட பலனைப் பெறப்போகிறார்கள் என்பதை பார்ப்போம்.

 

வாக்கிய பஞ்சாங்கத்தின் படி (மார்கழி 12) டிசம்பர் 27ம் தேதி அதிகாலை 5.22 மணிக்கு தனுசு ராசியில் உள்ள உத்திரம் நட்சத்திரம் 1ம் பாதத்திலிருந்து, மகர ராசியில் உள்ள உத்திரம் 2ம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.

ஏழரை சனி யாருக்கு?
இந்த சனி பெயர்ச்சி 2020ன் போது மகர ராசிக்கு ஜென்ம சனி ஆரம்பிக்கிறது. அந்த வகையில் கும்ப ராசிக்கு விரய சனி தொடங்குகிறது. ஏழரை சனியின் இறுதி பகுதியாக தனுசு ராசிக்கு பாத சனி நடக்க உள்ளது.

 

விருச்சிக ராசி ஏழரை சனியிலிருந்து விடுபடுவதால் மிக சிறப்பான பலன்களைப் பெற உள்ளனர். ஏழரை சனி நடப்பவர்கள் கவனமாக இருப்பது அவசியம். சனி பகவான் ஒரு ராசியிலிருந்து 3, 5, 6, 9, 10, 11 ஆகிய இடங்களில் இருந்தால் சிறப்பான பலன்களை தருவார்.

​மேஷம்
மேஷ ராசிக்கு 10ம் இடமான தொழில், கர்ம ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்க உள்ளார். இதன் காரணமாக மேஷ ராசிக்கு இந்த சனிப்பெயர்ச்சிக்கு பிறகு தொழில் வளர்ச்சியையும், உங்கள் வாழக்கை நகர்த்த காரணமாக இருக்கும் எந்த வேலையாக இருந்தாலும் அது சிறக்கும். சுய தொழில் தொடங்க திட்டம் வைத்துள்ளவர்களுக்கு, தொழில் தொடங்க உகந்த காலமாக இருக்கும். உங்கள் உழைப்பிற்கேற்ற பலனை நிச்சயம் பெறலாம் என்பதால்,

 

எந்த ஒரு செயலையும் நம்பிக்கையுடன் தொடங்கலாம். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வருவாய் எ தி ர் பார்த்ததை விட அதிகமாக இருக்கும். சனியின் பார்வை மேஷ ராசிக்கு 12ம் இடத்தில் விழுவதால் ஆன்மிக பற்று அதிகரிக்கும். கணவன் மனைவி உறவு, காதல் உறவில் கவனம் தேவை. வரக்கூடிய இரண்டரை ஆண்டுக்காலம் அற்புதமாக இருக்கும் என்பதால் அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

 

ரிஷப ராசி
ரிஷப ராசிக்கு 9ம் இடமான பாக்கிய, தந்தை ஸ்தானத்தில் சனி பகவான் ஆட்சி பெற்று அமர்கிறார். பாக்கிய ஸ்தானம் என்பதால் குடும்பத்தில் உள்ள குழப்பங்கள், பிரச்னைகள் தீரும். குடும்ப பிரச்னை தீர்ந்தால் மன நிம்மதியும், ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் ராகு ராசியில் அமர்ந்து சிறப்பான பலனைத் தரக்கூடிய நிலையில், குருவும் தனது 5ம் பார்வையால் ரிஷப ராசிக்கு நற்பலன்களை வாரி வழங்குவார் என்பதால் மிக சிறப்பான யோகங்களை ரிஷப ராசியினர் பெறுவார்கள். பொருளாதார நிலை உயரும் என்பதால்,

 

கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். மேலும் வீடு, மனை போன்ற அசையா சொத்துக்கள் வாங்கக்கூடிய அற்புத காலமாக இருக்கும். வெளியூர், வெளிநாடு போன்ற தூர தேசம் இடங்களுக்கு செல்ல உகந்ததாக இருக்கும். அதே சமயம் ராசிக்கு 3ம் இடத்தில் சனியின் பார்வை விழுவதால், சகோதரர்களுடன் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது அவசியம்.

சிம்ம ராசி
சிம்ம ராசிக்கு 6ம் இடமான நோய், எதிரி ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிக்க உள்ளதால் பல வகையில் ஆட்சி அதிகாரம் கிடைக்கக்கூடிய நிலை இருக்கும். மிக சிறப்பான பலன் பெற வாய்ப்புள்ள காலம் என்பதால் பயன்படுத்திக் கொள்வது நல்லது. உங்களின் போட்டியாளர், எதிரிகள் நீங்குவார்கள் என்பதால் உங்கள் தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தையும், லாபத்தையும் பார்க்க முடியும். புதிய தொழில் தொடங்க சிறந்த காலம். மாணவர்களுக்கு மிக மேன்மையான பலன்களையும், போட்டி தேர்வில் வெற்றி தரக்கூடியதாக அமையும்.

 

​விருச்சிகம்
இதுவரை இருந்த ஏழரை சனி காலம் முடிந்து ராசிக்கு 3ம் இடத்தில் சனி பகவான் பெயர்ச்சி ஆக உள்ளார். அதுமட்டுமல்லாமல் ஜென்ம ராசியில் கேது, குரு 3ம் இடத்தில் என முக்கிய கிரகங்கள் உங்கள் ராசிக்கு சாதகமான சூழலில் உள்ளனர். இதனால் பல்வேறு பலன்களைப் பெறக்கூடிய காலமாக இருக்கும். பட்ட கஷ்டங்களுக்கு நல்ல பலனைப் பெறக்கூடிய காலமாக இருக்கும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

 

தொழிலில் முன்னேற்றமும். புதிய தொழில் தொடங்க நல்ல காலமாகவும், நல்ல முன்னேற்றம் தருவதாக இருக்கும். நீண்ட காலமாக எதிர்பார்த்த உத்தியோக உயர்வு, சம்பள உயர்வு பெறுவீர்கள். புதிய வேலை கிடைக்கும். குடும்ப பிரச்னைகள் தீர்ந்து அமைதியும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். வருவாய் மிக சிறப்பாக இருக்கும்.

மீன ராசி
மீன ராசிக்கு 11ம் இடமான மூத்த சகோதரர், லாப ஸ்தானமான மகர ராசியி லாப குருவாக சஞ்சரிக்கும் நிலையில், சனி பகவானும் வரும் டிசம்பர் 27ம் தேதி மகர ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். இதன் காரணமாக மீன ராசி நபர்களுக்கு தொழில், வியாபாரத்தில் முயன்றளவுக்கு நல்ல பலனாக லாபம் வந்து சேரும். கல்வியில் மேல்நிலையை அடைவீர்கள்.

 

ஆன்மீக சுற்றுலா, செல்ல வாய்ப்பும், ஆரோக்கியம் அதிகரிக்கவும் நல்ல வாய்ப்பாக இருக்கும். சனிப்பெயர்ச்சியால் மிக நல்ல பலன்கள் கிடைக்க உள்ளது மீனம் ராசி எனலாம். புதிய வேலைவாய்ப்பு, வெளிநாடு செல்ல முயல்பவர்களுக்கு மிக நல்ல செய்தி கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

 

யாருக்கு என்ன சனி தொடங்குகிறது
தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிக்கு மிகச்சிறந்த படிப்பினை கொடுக்க உள்ளார். இதன் காரணமாக இந்த ராசிகள் எந்த வித பா தி ப்பு க ளைப் பெற உள்ளனர் என்பதைப் பார்ப்போம்.

கண்ட சனி – கடக ராசி
அர்த்தாஷ்டம சனி : துலாம்
அஷ்டமத்து சனி : மிதுனம்
விரய சனி : கும்பம்
ஜென்ம சனி: மகர ராசி
பாத சனி, வாக்கு சனி : தனுசு ராசி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *