நினைத்த நேரத்தில் பணவரவு செழிக்க பச்சை குங்குமத்தை இப்படி பயன்படுத்துங்கள்.. மகிமையும் நன்மையும்..!

ஆன்மீகம்

பணத் தேவைகள் ஒவ்வொரு மாதிரியான சமயங்களில் வேறுபடுகிறது. ஆனால் எதிர்பார்த்த நேரத்தில் பணவரவு தடைபடும் பொழுது இறைவன் மேல் நமக்கு கோபம் வரும். அவசர தேவைக்கு கூட கிடைக்க வேண்டிய பணம் உங்களுக்கு கிடைக்காமல் போக இதுவும் ஒரு காரணம் தான்.

 

தேவையான நேரத்தில் பணம் கிடைக்காமல் தடைபடும். அந்த சமயத்தில் இந்த பச்சை குங்குமம் எப்படி வேலை செய்யும்? இதற்கு ஏன் இவ்வளவு மகிமை? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம். எதிர்பார்த்த நேரத்தில் பணம் கிடைக்காமல் அல்லல்பட நேரிடும். உங்களுடைய பணமாக இருந்தாலும், அது உங்கள் கைக்கு வருவதற்கே நீங்கள் போ ரா ட வேண்டி இருக்கும்.

 

இது போல் இருந்தால் எ தி ர் மறை ஆற்றல்கள் இருக்கிறது என்பதை உ றுதி செய்து கொள்ளலாம். இதற்கு உங்கள் வீட்டை ஒரு முறை சுத்தம் செய்து விட்டு, வெண்கடுகு போட்டு சாம்பிராணி தூபம் காட்டலாம். இருக்கிற திருஷ்டிகள் எல்லாம் க ழிந்து போகும். பின்னர் பூஜையறையில் பச்சை கற்பூரம் மற்றும் பச்சை குங்குமத்தை வைத்து தூப, தீபம் காண்பித்து, கற்பூர ஹாரத்தி எடுத்து வீடு முழுவதும் காண்பிக்கலாம்.

 

இவ்வாறு செய்யும் பொழுது நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். வீட்டில் இருக்கும் பிரச்சனைகளும் நீங்கும். குபேர சம்பத்தை பெற்ற ஒரு வஸ்து பச்சை குங்குமம். பச்சை குங்குமம் வைத்துக் கொள்பவர்களுக்கு மனம் சாந்தமாகவே இருக்கும். அலைபாயும் மனம் கொண்டவர்கள் பச்சை குங்குமத்தை தினமும் நெற்றியில் வைத்துக் கொள்ளலாம்.

 

உங்களுக்கு இக்கட்டான பண பிரச்சனை இருக்கும் சூழ்நிலையில் குபேரனை வணங்கி பச்சை குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொண்டு, குபேர மந்திரத்தை உச்சரித்தால் எங்கிருந்தாவது உங்களுக்கு கிடைக்க வேண்டிய பணம் கிடைத்துவிடும் என்பது ஐதீகம். பச்சை குங்குமம் குபேர வஸ்து என்பதால் பச்சை குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொள்பவர்களுக்கு குபேரனுடைய அருள் கிடைக்கும்.

 

குபேர வஸ்துகளை பயன்படுத்துபவர்களுக்கு பொதுவாகவே குபேர உறவு ஏற்படும். தூய மனதோடு குபேரனை வேண்டி வணங்குபவர்களுக்கு குபேரன் சிரித்துக் கொண்டே முழுமனதாக அவர்களுக்கு செல்வ வளத்தை வாரி வழங்குவதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *