எந்த கிழமைகளில் எந்தெந்த உணவை சாப்பிட வேண்டும் தெரியுமா !! அப்படி செய்தால் கிடைக்கும் பலன்கள் !!

ஆன்மீகம்

ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு உகந்த நாள். ஞாயிற்றுக்கிழமைகளில் பிறந்தவர்களும், சிம்ம ராசியினரும் காலையில் சூரிய தரிசனம் செய்தால் பலன்கள் அதிகம். ஞாயிறன்று இவர்கள் அசைவ உணவு வகைகளைத் தவிர்த்தல் நலம். ஞாயிற்றுக்கிழமைக்கான உணவு வகைகள், கோதுமை அல்வா, கோதுமை பாயாசம், கோதுமை சாதம், சப்பாத்தி, பூரி, கேசரி, கேரட் அல்வா, மாதுளை ஜூஸ், கேரட் சூப் , பரங்கிக்காய் சாம்பார். இந்த உணவு வகைகள் நலம் பயக்கும்.

 

ஞாயிறு
ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு உகந்த நாள். ஞாயிற்றுக்கிழமைகளில் பிறந்தவர்களும், சிம்ம ராசியினரும் காலையில் சூரிய தரிசனம் செய்தால் பலன்கள் அதிகம். ஞாயிறன்று இவர்கள் அசைவ உணவு வகைகளைத் தவிர்த்தல் நலம். ஞாயிற்றுக்கிழமைக்கான உணவு வகைகள், கோதுமை அல்வா, கோதுமை பாயாசம், கோதுமை சாதம், சப்பாத்தி, பூரி, கேசரி, கேரட் அல்வா, மாதுளை ஜூஸ், கேரட் சூப் , பரங்கிக்காய் சாம்பார். இந்த உணவு வகைகள் நலம் பயக்கும்.

 

திங்கள்
சந்திரனுக்கு திங்கள் என்கிற பெயரும் உண்டு. சந்திரனுக்கு உகந்த பொருட்களான பால், பால் கோவா, பால் பாயாசம், லஸ்ஸி, பச்சரிசி சாதம், முள்ளங்கி, கோஸ் பொரியல், தேங்காய் சாதம், கல்கண்டு சாதம், தயிர் சாதம் போன்றவைகளை திங்களன்று பயன்படுத்தலாம். திங்கள் கிழமைகளில் பிறந்தவர்களும், கடக ராசியினரும் திங்கள் அன்று அசைவ உணவுகளைத் தவிர்க்கலாம்.

 

செவ்வாய்
செவ்வாய்க்கு உகந்த பொருட்களான துவரம் பருப்பு சாம்பார், துவரம் பருப்பு சட்னி, வடை, பீட்ரூட் அல்வா, பேரிச்சை பாயாசம், தர்பூசணி ஜூஸ், தேன் கலந்த செவ்வாழை, ஆப்பிள், ஆரஞ்சு பழக்கலவை போன்றவைகளை பயன்படுத்தலாம். மேஷம், விருச்சிக ராசியினரும் செவ்வாய் கிழமைகளில் பிறந்தவர்களும் செவ்வாய் கிழமைகளில் அசைவ உணவைத் தவிர்த்து விட வேண்டும்.

 

புதன்
புதன் கிரகத்தின் முழு அனுகிரஹம் கிடைப்பதற்கு கீரை தோசை, கீரை, வேப்பம்பூ ரசம், பாவக்காய், முருங்கைக் காய் சூப், பாசிப்பயறு சுண்டல், புதினா, கொத்துமல்லி சட்னி, வாழைப் பழம் , கொய்யாப் பழம் சேர்த்த பழக்கலவை. போன்றவைகளைப் பயன்படுத்தலாம். மிதுனம், கன்னி ராசியினருக்கு நலம் உண்டாகும்.

 

வியாழன்
குருவுக்கு உகந்த நாளான வியாழன் அன்று சுக்கு காபி அல்லது கஷாயம், கார்ன் சூப், கடலைப் பருப்பு கூட்டு, கடலைப் பருப்பு வடை, தயிர் வடை, கொண்டைக்கடலை சுண்டல், சாத்துக்குடி, மாம்பழ ஜூஸ், பொங்கல், தயிர், எலுமிச்சை சாதம், மாதுளை, முந்திரி,திராட்சை, பேரிட்சை கலந்த தயிர் சாதம் போன்றவைகளைப் பயன்படுத்தலாம். தனுசு, மீன ராசியினருக்கு வியாழக்கிழமை நலம் ப ய க்கும்.

 

வெள்ளி
சுக்கிரனுக்கு பால் சார்ந்த பொருட்களைப் பயன்படுத்தி செய்யும் உணவு வகைகள் நலம் தரும். பால் இனிப்புகள், பால் பாயாசம், காஷ்மீர் அல்வா, தேங்காய் பர்பி, வெண்ணையில் செய்த பிஸ்கட், முலாம் பழ ஜூஸ், வெள்ளரி ஜூஸ், வாழத்தண்டு ஜூஸ், இட்லி, தோசை, தேங்காய் சட்னி, கம்பு தோசை, ஆப்பம், அவியல், தயிர் சேமியா, புலாவ், கோஸ் சாம்பார், பூண்டு ரசம்,வாழத்தண்டு பொரியல், நீர் மோர், வெள்ளரி, பாசிப்பருப்பு சாலட் போன்றவைகளை தயார் செய்யலாம். ரிஷபம், துலாம் ராசியினருக்கு நலம் உண்டாகும்.

 

சனி
சனிக்கிழமைகளில் ஜிலேபி, எள் உருண்டை, அதிரசம், சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, கொள்ளு சுண்டல், எள்ளு சாதம், எள் சட்னி, கொள்ளு ரசம், மிளகு சாதம், மிளகு ரசம், உளுந்து சாதம், புளியோதரை, எண்ணை கத்தரிக்காய் குழம்பு, நாவல் பழம், கருப்பு திராட்சை ஜூஸ், பாதாமி, முந்திரி, திராட்சை, பேரிச்சை, பிஸ்தா கலவை போன்றவைகளை பயன்படுத்தலாம். மகரம், கும்ப ராசியினருக்கு நலம் உண்டாகும்.

 

மேலே ஒவ்வொரு கிழமைகளுக்கும் கூறப்பட்ட உணவு வகைகளைத் தயார் செய்ய பயன்படுத்தப்படும் அடிப்படை பொருட்களைப் பார்த்தால், அவை எல்லமே அந்ததந்த கிரகங்களுக்கு உரியே தானியங்களே. நம்முடைய முன்னோர்கள் எவ்வளவு அற்புதமாக ஆன்மிகத்தையும், அறிவியலையும் தொடர்புபடுத்தி நமக்கு ஒரு அழகான, நலமான வாழ்வியல் முறையை அமைத்துகொடுத்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *