இணையத்தில் வைரலாக ப ரவும் திருமண பத்திரிக்கை… மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள மணமக்களின் பலே ஐடியா என்ன தெரியுமா !!

விந்தை உலகம்

கொரோனா காலக்கட்டத்தில் பல திருமணங்கள் ஆன்லைனிலேயே நடந்து முடிந்து விட்டது. உறவினர்கள் மட்டும் தான் கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், பல தம்பதிகள் தங்களது திருமணத்தை ஆன்லைனில் லைவ்-ஆக வெளியிட்டனர். செல்போனிலேயே காதல் ஜோடிகளுக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட சில சோக கதைகளும் இந்த லாக்டவுனில் அரங்கேறியது.

 

ஒரு தம்பதி தங்களது திருமணத்தை நேரலையாக ஒளிபரப்புவதோடு, கல்யாண சாப்பாடும் வீட்டுக்கே வரும் என அழைப்பிதழில் குறிப்பிட்டிருப்பது தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த நிலையில் காதல் ஜோடி சிவ பிரகாஷ் – மஹதி, தங்களது திருமணத்திற்கு விடுத்திருக்கும் அழைப்பிதழ் மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

நாளை காலை 9 மணியில் இருந்து 10 மணிக்குள் அவர்களது திருமணம் நடக்கவிருக்கும் நிலையில், வாழ்த்த விரும்புவோர் அனைவரும் நேரலையில் கலந்து கொண்டு தங்களை ஆசீர்வதிக்க வேண்டும் என அந்த ஐடிக்கான பாஸ்வோர்டுடன் அழைப்பிதழில் குறிப்பிட்டுள்ளனர்.

 

இதில், கல்யாண சாப்பாடு அவரவர் வீடு தேடி வரும் என அந்த தம்பதி குறிப்பிட்டுள்ளது தான் ஹைலைட். ‘செலவு மிச்சம்டா’ என்று பல ஆன்லைன் திருமணங்கள் நடைபெற்று வரும் இக்காலகட்டத்தில், இந்த தம்பதி வீட்டிற்கே சாப்பாடு அனுப்புவதாக அறிவித்திருப்பது வைரலாகி வருகிறது.

 

மொய் பணம் ஆன்லைனில் அனுப்ப சொல்லுவாங்க போல என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *