உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? இந்த காய்கறியை அடிக்கடி சாப்பிடுங்க…

மருத்துவம்

ஒருவரது ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதற்கு வாரத்திற்கு பல முறை காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.புதிய ஆய்வு ஒன்றில், அதிகளவு குறுக்குவெட்டுக் காய்கறிகளான ப்ராக்கோலி, முளைக்கட்டிய பிரஸ்ஸல்ஸ் மற்றும் முட்டைக்கோஸ் போன்றவை, இரத்த நாள நோய்களான மாரடைப்பு அல்லது பக்கவாத நோய்களின் அபாயத்தைக் குறைப்பது தெரிய வந்தது.ஒருவருக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் இரண்டுமே கொழுப்புக்களின் தேக்கம் மற்றும் இரத்த நாளங்களின் சுவர்களில் படியும் கால்சியம் படிவுகளால் ஏற்படலாம். இதனைத் தவிர்க்க ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட சில காய்கறிகளை சாப்பிட வேண்டும். மாரடைப்டைத் தடுக்க உதவும் சில காய்கறிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து உங்களின் அன்றாட உணவிலும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ப்ராக்கோலி

ப்ராக்கோலியை வேக வைத்து அடிக்கடி சாப்பிடுவது, உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து இதய நோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் ப்ராக்கோலி இதய நோயின் அபாயத்தைக் குறைப்பதோடு, வலிமையான எலும்புகளுக்கும், கண் பார்வையை மேம்படுத்தவும், புற்றுநோயைத் தடுக்கவும் உதவுகிறது.

காலிஃப்ளவர்

100 கிராம் காலிஃப்ளவரை சாப்பிடும் போது, அதில் 92 கிராம் நீர்ச்சத்து கிடைக்கிறது. ஆகவே இந்த காய்கறியை அதிகம் உணவில் சேர்க்கும் போது, உடலில் நீர்ச்சத்து அதிகரித்து இரத்த ஓட்டம் சீராக இருக்கிறது. மேலும் காலிஃப்ளவரில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி வைரல் பண்புகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் போன்றவையும் நிறைந்துள்ளது.

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸில், குறிப்பாக சிவப்பு/ஊதா நிற முட்டைக்கோஸ் இதயத்திற்கு நல்லது. இந்த காய்கறி பீட்டா-கரோட்டீன், லுடின் மற்றும் பிற இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைப்பதால், இது பெருந்தமனி தடிப்புக்களின் அபாயத்தைக் குறைப்பதுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதோடு முட்டைக்கோஸ் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளதால், இதய நோய்களையும் தடுக்க உதவுகிறது.

கேல்

கேல் கீரை கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவி புரிந்து, இதய நோயின் அபாயத்தையும் குறைக்கிறது. உணவுப் பொருட்களிலேயே கேல் கீரையில் தான் வைட்டமின் கே அதிகம் உள்ளது. இந்த ஊட்டச்சத்து தான் இரத்தம் உறைதலில் ஈடுபடும் முக்கிய ஊட்டச்சத்தாகும். மேலும் இந்த கீரையில் உள்ள ஏராளமான உட்பொருட்கள் புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் என்பது சோதனை-குழாய் மற்றும் விலங்குகளின் மீதான ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *