ஒரு வெண்கல பாத்திரம் முழுவதும் தண்ணீரை நிரப்பி, அதில் பூக்களை மிதக்க வைப்பதை பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அதற்கு சில காரணம் உள்ளது. பொதுவாக வீட்டில் அல்லது அலுவலகத்தில் வெண்கல பாத்திரத்தில் நீர் முழுவதையும் நிரப்பி அதில் அழகான பூக்களை வைத்து மிதக்க வைப்பார்கள் அல்லவா?
இவ்வாறு ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி அதில் பூக்களை மிதக்க விடுவது ஏன் என்று நீங்கள் யோசித்தது உண்டா? இந்த முறையானது சீனர்களின் பயன்பாட்டில் இருந்து தோன்றிய ஒரு வாஸ்து பரிகாரமாகும்.
வாஸ்து குறைபாடு – இந்த முறையை நமது வீட்டில் அல்லது அலுவலகத்தில் செய்தால், நமது வீடுகளில் மற்றும் அலுவலகங்களில் காணப்படுகின்ற எல்லாவிதமான வாஸ்து குறைகளும் நீங்கி விடும்.
கண் திருஷ்டி – எல்லோருக்கும் கண்டிப்பாக கண் திருஷ்டி காணப்படும் இது இல்லாமலா போக வேண்டும் என்றால் இந்த முறையை பயன்படுத்தி நமது வீட்டில் அல்லது அலுவலகத்தில் இவ்வாறு செய்து வந்தால் ஒவ்வொருத்தருடையவாழ்விலும் காணபடுகின்ற கண் திருஷ்டி யானது போய்டுமாம்.
நோய் நொடிகள் – நோய் நொடிகள் நீங்கி, நாம் நல்ல ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் அதே நேரம் எந்த விதமான நோய்களும் நம்மை அண்டாமல் இருக்க வேண்டுமாயின் நமது வீடுகளில் இவ்வாறு ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி அதில் பூக்களை மிதக்க விடவேண்டுமாம்.