சோகமோ துக்கமோ எதுவா இருந்தாலும் அலுத்து தீர்த்து விடும் பொது தான் மனதுக்கு ஒருவித அமைதி கிடைக்கும் அல்லவா ?ஆனால் அழுவதால் நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கிறது. என்னடா அழுவதே கவலையில் தான் இதில் நன்மை இருக்கிறதா என்று யோசிக்கின்றீர்களா? வேதனைகளை மனதுக்குள்ளே போட்டு அமுக்குவதை விட அழுவது நல்லது. இது உங்க மன பாரத்தை குறைக்கும்.
உண்மையில் அழுகை என்பது கூட ஒரு பாஷை தான். நீங்கள் ஆதரவைத் தேடும் மற்ற நபருடன் தொடர்புகொள்வதற்கான சொற்கள் அல்லாத வழியாகும். அழுவதால் அப்படி என்ன நன்மைகள் கிடைக்கிறது என முழுமையாக அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் அழுத்தமாக இருக்கும்போது ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் உங்கள் உடலில் வெளியிடப்படுகின்றன. இது உங்கள் உணர்ச்சிகளை அதிகரிக்கிறது.
இது கண்ணீர் குழாய்களைத் தூண்டும். நீங்கள் ஒரு உணர்ச்சி நிலையில் இருக்கும் போது உங்க கண்ணீருடன், புரதம் மற்றும் மன அழுத்த ஹார்மோன்களும் வெளியிடப்படுகின்றன. குறிப்பாக கோபமாக அல்லது அழுத்தமாக இருக்கும் போது இது நிகழ்கிறது.
அழுவது உணர்ச்சியை சமநிலையில் மீட்டெடுக்க உதவுகிறது. நாம் மிகவும் மகிழ்ச்சியாக அல்லது கவலையாக இருக்கும்போது அழுவோம். ஏனென்றால் நாம் அனைவரும் அந்த உணர்ச்சிகளில் அதிகமாக இருப்பதன் வெளிப்பாடு. அந்த நேரத்தில உங்க உடல் அழுவதன் மூலம் பதிலளிக்கிறது. இதனால் உணர்ச்சிகளின் சுனாமியைக் கட்டுப்படுத்தலாம் மற்றும் இயல்பு நிலைக்கு உங்களால் திரும்ப முடியும்.
ஒரு நல்ல அழுகை உண்மையில் உங்களை இலகுவாகவும் சிறப்பாகவும் உணர வைக்கும் . இது உங்கள் மனதைத் தணிக்கிறது. அதனால்தான் பெரும்பாலோர் அழுதபின் தூங்குவதைப் போல உணர்கிறார்கள். ஏனென்றால் மன அழுத்தங்கள் உடலில் இருந்து விடுவிக்கப்படுகின்றன. மேலும் உங்கள் மனம் மிகவும் அமைதியாக உணரும்.
இருப்பினும் உங்க அழுகை அடிக்கடி நேர்கிறது என்றாலோ அல்லது கண்ணீர்த் துளிகளாக வருகிறது என்றாலோ நீங்கள் மன உளைச்சலில் இருப்பதை குறிக்கிறது. நீங்கள் உங்க மன உளைச்சலை போக்க உளவியல் நிபுணர்களின் உதவியை நாடலாம்.
எனவே அடுத்த முறை நீங்கள் அழுகும் போது உங்களை யாராவது பலவீனமானவர்கள் என்று அழைக்கிறார்கள் என்றால் அதைக் கண்டு கவலை கொள்ளாதீர்கள். உங்க மன அமைதிக்காக பழைய நிலைக்கு திரும்ப அழுவதில் தப்பில்லை.