கோழி முட்டையில் என்னென்ன இருக்கிறது தெரியுமா !! இதுவரை யாரும் அறியாத ஆ ப த் து என்ன தெரியுமா !!

விந்தை உலகம்

முட்டை இன்று அதிகானவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.  பொதுவாக முட்டையை வேக வைக்காமல், பச்சையாகக் குடித்தால் உடலுக்கு அதிகச் சத்து கிடைக்கும்’ என்று பொது மக்களிடம் ஒரு நம்பிக்கை உள்ளது,  குறிப்பாக, குழந்தைகள், இளம்பெண்கள், தடகள வீரர்கள், உடலுக்கு வலு தரும் உடற்பயிற்சி செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள், போன்றோர் அதிகச் சத்தைப் பெறுவதற்காகப் பச்சை முட்டையைக் குடிப்பார்கள். இதில்தான் ஆ ப த்து உள்ளது.

 

இன்றைய தினம் துரித உணவகங்களில் பல வகை வண்ணச் சுவையூட்டிகளையும் மசாலாக்களையும், எண்ணெய்களையும் கலந்து பலதரப்பட்ட முட்டை உணவுகளைத் தயாரிக்கிறார்கள்.ஒரு முட்டை சாப்பிட்டால் 155 கலோரி ஆற்றல் கிடைக்கிறது. ஒரு நேரத்தில் இரண்டு முட்டை சாப்பிட்டால் ஒரு சராசரி மனிதருக்குக் காலை உணவுக்குத் தேவையான சக்தி கிடைத்துவிடும்.

 

100 கிராம் கோழி முட்டையில் தன்ணீர் 75 கிராம். கார்போஹைட்ரேட் 1.12 கிராம், கொழுப்பு 10.6 கிராம், கொலஸ்ட்ரால் 373 மி.கிராம், புரதச்சத்து 12.6 கிராம் வைட்டமின் ஏ, வைட்டமின் டி உள்ளிட்ட பத்து வகை வைட்டமின்கள், கால்சியம், இரும்பு உள்ளிட்ட ஏழு வகை தாதுச்சத்துகள், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் எனப் பல சத்துகள் உள்ளன.

 

முட்டையால் கிடைக்கிற கொலஸ்ட்ரால் ஆபத்தை விட, இந்தக் கலப்புப் பொருள்களால் குடல் புற்று நோய் உள்ளிட்ட ஆ ப த் து கள் வருவத்தான் பெரும் கவலைக்குரிய விஷயம். ‘ ‘பச்சை முட்டை’ யின் வெள்ளைக்கருவில் ‘அவிடின்’ எனும் புரதச்சத்து உள்ளது.

 

இது முட்டையில் உள்ள பயாட்டின் எனும் வைட்டமினுடன் இணையும்போது, பயாட்டின் சத்து சிறுகுடலில் உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகிறது. அதேநேரத்தில் முட்டையை வேக வைத்து விட்டால், அந்த வெப்பத்தில் அவிடின் அ ழி ந் து வி டு ம்.

 

இதன் பலனாக, முட்டையில் உள்ள ப்யாட்டின் முழுமையாக உடலில் சேரும். அவிடின் சத்தை விட பயாட்டின் தான் நமக்கு முக்கியம். குறிப்பாகக் கூந்தல் வளர்ச்சிக்கு இது தேவை. ஆகவே, வேகவைத்த முட்டையைச் சாப்பிடுவதே எப்போதும் நல்லது. முட்டையில் ‘சால்மோனல்லா’ போன்ற பாக்டீரியா கிருமிகள் இருக்க வாய்ப்பு உள்ளது.

 

முட்டையை அவிக்கும் போது, அவை இ ற ந் து விடும் என்பதால் முட்டையின் மூலம் டைபாய்டு, வயிற்றுப் போக்கு போன்ற நோய் தொற்றுகள் ஏற்படுவது தடுக்கப்படும். இப்போது ஹார்மோன் ஊசி போட்டுத்தான் பெரும்பாலான கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த மருந்துகளின் பா தி ப் பு இறைச்சியில் மட்டுமல்லாமல்,

 

முட்டையிலும் இருக்கும் சாத்தியம் உள்ளது. முட்டையை வேக வைக்கும்போது இந்தப் பா தி ப்பு க ள் குறைந்துவிடும். இருந்தாலும் நாட்டுக்கோழி முட்டைகளை வாங்கிப் பயன்படுத்துவதே மிகச் சிறந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *