நீரிழிவு நோயாளிகள் தினமும் நெல்லிக்காய் சாப்பிடலாமா? எவ்வளவு சாப்பிட வேண்டும் தெரியுமா?

மருத்துவம்

நெல்லிக்காய் அளவில் சிறியதாக இருந்தால் கூட பெரிய பெரிய நோய்களை தடுக்க கூடியது. அப்படிப்பட்ட நெல்லிக்காயின் கூடுதல் நன்மைகளை பற்றி நாம் அறிந்து கொள்வோம் நெல்லிக்காய் விட்டமின் சி நிறைந்த மூலமாகும். இதனால் இது சலதோஷத்தை எதிர்த்து போராட உதவுகிறது. இரண்டு டீஸ்பூன் நெல்லிக்காய் பொடியை இரண்டு டீஸ்பூன் தேனுடன் கலந்து, உங்களுக்கு சளி அல்லது இருமல் ஏற்படும் சமயங்களில் ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு முறை சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் தொல்லை நீங்கும்.

சலதோஷம் பிடிக்காமல் இருக்க தினமும் ஒரு முறை உட்கொண்டு வருவது சலதோஷத்தை எதிர்த்து போராட உதவுகிறது. நெல்லிக்காயில் உள்ள புரத மூலக்கூறுகள் நம்முடைய பசியை அடக்குகிறது. ஒரு கிளாஸ் நெல்லிக்காய் சாறு குடிப்பது உங்களை குறைவாக உண்ண வைக்கும். இதனால் உங்க தேவையற்ற கொழுப்புகள் குறையும். வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதிலுள்ள நார்ச்சத்துக்கள், டானிக் அமிலங்கள் மலச்சிக்கலை போக்க உதவுகிறது.

நெல்லிக்காய் கருவேப்பிலை போன்றே கூந்தல் பராமரிப்புக்கான டானிக் ஆகும். இது நரைப்பதை மெதுவாக்குகிறது. முடி உதிர்தல், பொடுகுத் தொல்லைகளை விரட்டுகிறது. மயிர்க்கால்களை வலுப்படுத்தி கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. எனவே நெல்லிக்காயை கூந்தலுக்கு இயற்கை கண்டிஷரனாக கூட நீங்கள் பயன்படுத்தலாம். ஹேர் பேக்காக நெல்லிக்காய் எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.

நெல்லிக்காய் பொடி மற்றும் மருதாணி கலவையை உங்க கூந்தலுக்கு சிறந்த ஒன்று. நெல்லிக்காய் ஒரு சிறந்த ஆன்டி ஏஜிங் பழமாகும். நெல்லிக்காய் ஜூஸில் தேன் சேர்த்து தினசரி காலை வேளையில் குடித்து வந்தால் பருக்கள் அற்ற பளபளக்கும் சருமத்தை பெறுவீர்கள். தோல்கள் சீக்கிரம் வயதாகாமல் இளமையாக இருக்கும்.

நெல்லிக்காயில் குரோமியம் காணப்படுகிறது. இது நம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இது இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் நீரிழிவு நோய் க்கு காரணமான இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. எனவே நெல்லிக்காய் ஜூஸை காலையில் குடித்து வந்தால் உங்க இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *