வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுபவரா நீங்கள் !! அப்போ இந்த பதிவு உங்களுக்குதான் கட்டாயம் படியுங்கள் !!

விந்தை உலகம்

அதிகமானவர்கள் உணவின் பூட்டு வெங்காயத்தை பச்சையாக உணவில் சேர்த்து சாப்பிடுவார்கள். இந்த வெங்காயத்தில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த வெங்காயத்தை பச்சையாக தினமும் சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. பல்வேறு காரணங்களால் உஷ்ணம் அதிகரிக்கும்போது வெங்காயம் உடல்உஷ்ணத்தைச் சமனப்படுத்துகிறது. நாடித்துடிப்பைச் சீராகவைத்திருக்க உதவும் ஆற்றலும் வெங்காயத்துக்கு உண்டு.

 

சாதாரணமாக தலைவலிக்கு வெங்காயத்தை நசுக்கி முகர்ந்தால் உடனே குணம் தெரியும். வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி தேள், குளவி போன்ற விச ஜந்துக்கள் கடித்த இடத்தில் அழுத்தித் தேய்த்தால் வலி குறையும். பொதுவான இருமலுக்கு வெங்காயச் சாற்றை மோருடன் கலந்து குடிக்க குணமாகும்.

 

முதுமைப் பருவத்தில் தோன்றுகிற கடுமையான இருமலுக்கு வெங்காயத்தை வதக்கி வெல்லம் கலந்து சாப்பிட குணம் தெரியும். மூளையின் ஆற்றலை வலுப்படுத்தும் சக்தி வெங்காயத்துக்கு இருக்கிறது. அது நல்ல உடல் தேற்றும் டானிக்காகவும் திகழ்கிறது. ஆகவே தினமும் வெங்காயத்தை சூப்பாகச் செய்து அடிக்கடி சாப்பிடலாம்.

 

இரவு தூங்குவதற்கு முன்பு ஒரு கோப்பை வெங்காய சூப் சாப்பிடுவது மிகவும் நல்லது. வெங்காயத்தை வேகவைத்து தேன், கற்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம். பற்களில் குறிப்பாக ஈறு பகுதிகளில் வீக்கம் கண்டு சீழ் வடிவதுண்டு. அப்போது வலியும் எரிச்சலும் க டுமையாக இருக்கும். இதற்கு சுடுநீரில் வெங்காயச் சாற்றைக் கொண்டு வாய் கொப்பளிக்கலாம். பஞ்சில் நனைத்து பா தி க் கப்பட்ட பற்களில் நன்றாகத் தடவி விடலாம்.

 

தோல் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு ஒவ்வாமை பிரச்சினைக்கும் முற்றுப்புள்ளி வைக்கின்றது. வெங்காயத்தில் கொழுப்புச் சத்து மிக மிகக் குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக்கொள்ள விரும்புவோர் உணவில் வெங்காயத்தைத் தாராளமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ர த் த விருத்திக்கும் இ ர த் த சுத்தத்திற்கும் வெங்காயம் மிகவும் உதவிகரமாக இருக்கிறது. அதனால் உடல் அழகு ஏற்படுகிறது. உணவோடு வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்ளும்போது அந்த உணவு வெகு எளிதில் ஜீரணமாக வெங்காயம் உதவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *