தோட்டத்தை சுத்தம் செய்கையில் அடித்த அதிர்ஷ்டத்தினால் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளார் மூதாட்டி. அதாவது பிரித்தானியாவில் தோட்டம் ஒன்றில் மெட்டல் டிடெக்ருடன் சுத்தம் செய்து கொண்டிருந்த பெண்ணுக்கு சுமார் 2500 பவுண்ட் மதிப்புள்ள தங்கநாணயம் கிடைத்துள்ளது. பிரித்தானியாவின் Portsmouth-ல் இருக்கும் சுமார் 48 வயது மதிக்கத்தக்க Amanda Johnston என்ற பெண் வீட்டின் பின்புற தோட்டத்தில்,
தன்னுடைய மகனான George’s metal பயன்படுத்தும், மெட்டல் டிடெக்டரை வைத்து சுத்தம் செய்ததாக கூறப்படுகிறது.அப்போது அவர் முதலில் இரண்டு பழைய நாணயங்களை கண்டுள்ளார். அதன் பின் தொடர்ந்து ஹென்றி VII என்ற பைன் தங்க ஏஞ்சல் நாணயம் கிடப்பத்தைக் கண்டுள்ளார். இது 3 செ.மீற்றர் கீழ் அளவிடப்படுவதுடன், 5 கிராம் எடை கொண்டது, 22 காரட் தங்கமான இது, கடந்த 1454ம் ஆண்டு புழக்கத்தில் இருந்ததாகவும்,
அந்தே நேரத்தில் இதன் மதிப்பு ஆறு ஷில்லிங் மற்றும் எட்டு பென்ஸ் மதிப்புடையது என்று பிரபல ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து Amanda Johnston கூறுகையில், இது ஆச்சரியமாக இருப்பதுடன், என்னால் இதை நம்பவே முடியவில்லை. இது மிகவும் மெல்லியதாக இருக்கிறது, ஆனால் இது ஒரு சிறப்பு அம்சமாக இருக்கலாம் என்று நான் உடனடியாக உணர்ந்தேன். நான் அதை வைத்திருக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் கண்டுபிடிக்கப்பட்ட நாணயம் ஒன்று என்பதால் புதையலாக அறிக்க வேண்டியதில்லை. மேலும் நாணயம் கண்டுபிடிக்கப்பட்ட நிலம் குறித்த பெண்ணிற்கே உரிமையானது என்பதால் தற்போது உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கின்றார்.
மேலும், எடுக்கப்பட்ட தங்கநாணயத்தின் மதிப்பு சுமார் 2500 பவுண்ட் என்று குறிப்பிட்டுள்ளது.