தமிழ் மாதமான மார்கழி மாதத்தில் நிகழ போகும் கிரகங்களின் மாற்றம் !! பேரதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசியினர் யார் !!

ஆன்மீகம்

அனைத்து ராசியினருக்கும் மார்கழி மாத ராசி பலன்களை ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணிப்பில் விளக்கமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு (12 ராசிக்கும்) ராசிக்கும் ஜோதிட பலன்களையும், தமிழ் மாதமான மார்கழி மாதத்தின் பலன்களையும் கணித்து தந்துள்ளார். அந்த வகையில் இந்த மாதத்தில் நிகழ போகும் கிரகங்களின் மாற்றம் காரணமாக எந்தெந்த ராசியினருக்கு நன்மைகள் வந்து சேரப்போகின்றது என்று பார்ப்போம்.

 

மேஷம்
(அசுபதி, பரணி, கிருத்திகை 1 பாதம்) – கிரகநிலை: ராசியில் செவ்வாய் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ – அஷ்டம ஸ்தானத்தில் கேது, சுக்ரன் – பாக்கிய ஸ்தானத்தில் சனி,சூர்யன், புதன், சந்திரன் – தொழில் ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்:26-12-20 அன்று காலை 5.22 மணிக்கு சனி பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 30-12-20 அன்று இரவு 2.22 மணிக்கு புதன் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 06-01-21 அன்று காலை 07.18 மணிக்கு சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

 

பலன்:
இந்த மாதம் தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். வேலையில் உழைப்பு அதிகரிக்கும். பயணங்களால் வீண் செலவு உண்டாகும். இருக்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டி இருக்கும். குடும்பத்தில் கலகலப்பு குறையும். எதிலும் வெறுப்பும் திடீர் கோபமும் வரலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் சொல்வதை கேட்டு நிதானமாக பேசுவது நல்லது. பேச்சின் இனிமை சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

 

தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். லாபம் அதிகாரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும். அரசாங்கத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகன யோகம் உண்டாகும். எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை ஏற்படலாம். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும்.

 

அசுபதி:
இந்த மாதம் நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். தொழில் வியாபாரம் முன்னேற்ற மடையும். போட்டிகள் குறையும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும்.
பரணி: இந்த மாதம் வீண் ஆசைகள் தோன்றலாம் கட்டுப்படுத்துவது நல்லது. திட்டமிட்டு செய்யும் வேலைகள் சாதகமாக முடியும். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு அதனால் நிம்மதி குறையலாம். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு நடக்க வேண்டி இருக்கும்.

கார்த்திகை: இந்த மாதம் பண வரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். துணிச்சலாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகம் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். உடல்நல பாதிப்பு உண்டாகலாம்.
பரிகாரம்: செவ்வாய்கிழமைதோறூம் விரதம் இருந்து முருகனை வணங்கி வர காரிய தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி;சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 9, 10 அதிர்ஷ்ட தினங்கள்: ஜனவரி 3, 4.


ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2 பாதங்கள்) – கிரகநிலை: ராசியில் ராஹூ – களத்திர ஸ்தானத்தில் கேது, சுக்ரன் – அஷ்டம ஸ்தானத்தில் சனி,சூர்யன், புதன், சந்திரன் – பாக்கிய ஸ்தானத்தில் குரு – அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்:26-12-20 அன்று காலை 5.22 மணிக்கு சனி பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.30-12-20 அன்று இரவு 2.22 மணிக்கு புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 06-01-21 அன்று காலை 07.18 மணிக்கு சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:
இந்த மாதம் எல்லா நன்மைகளும் உண்டாகும். பயணம் மூலம் நன்மை கிடைக்கும். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். காரிய தடைகள் அவ்வப்போது இருந்தாலும் பணவரத்து அதிகரிக்கும். புத்தி சாதூரியம் கூடும். உடல்நிலையைப் பொறுத்தவரை இருந்து வந்த மருத்துவ செலவுகள் குறையும். மறைவிடங்கள் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். சோம்பல் அதிகமாகலாம்.தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் ஏற்படலாம். பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நல்லது.

 

கடன் கொடுக்கும்போது கவனம் தேவை. வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குறிக்கோளற்ற வீண் அலைச்சல், கூடுதல் உழைப்பும் இருக்கும். சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள். அலுவலக விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். மேலிடத்தில் மனம் விட்டு பேசுவது கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும்.

 

கார்த்திகை: இந்த மாதம் மனம் நிலை கொள்ளாமல் தவிக்கும் நிலை வரலாம். கவுரவம், அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள் மற்றவர்கள் மூலம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. வீண் அலைச்சலும் கூடுதல் உழைப்பும் இருக்கும். ரோகினி: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்பட்டாலும் பணவரத்து குறைவு இருக்காது. தொழில் கூட்டாளிகளுடன் அனுசரித்து செல்வது நன்மைதரும். திருமண முயற்சி மேற்கொள்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.

 

மிருகசீரிஷம்: இந்த மாதம் எழுத்து தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை சாதகமான பலன் தரும். கணவன், மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் நவக்கிரகத்தில் சுக்கிரனுக்கு மொச்சை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். மனமகிழ்ச்சி ஏற்படும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளிசந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 15, 16; ஜனவரி 11, 12, 13அதிர்ஷ்ட தினங்கள்: ஜனவரி 5, 6.

 


மிதுனம்
(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்) – கிரகநிலை: ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது, சுக்ரன் – களத்திர ஸ்தானத்தில் சனி,சூர்யன், புதன், சந்திரன் – அஷ்டம ஸ்தானத்தில் குரு – லாப ஸ்தானத்தில் செவ்வாய் – அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 26-12-20 அன்று காலை 5.22 மணிக்கு சனி பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.30-12-20 அன்று இரவு 2.22 மணிக்கு புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.06-01-21 அன்று காலை 07.18 மணிக்கு சுக்கிர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:
இந்த மாதம் அனுகூலம் தரும் வகையில் அமைந்திருக்கிறது. காரிய அனுகூலங்களை தரும். மனோதிடம் அதிகரிக்கும். பயன் தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். செல்வம் சேரும். வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். உடல்நிலையைப் பொறுத்தவரை மருத்துவ செலவு உண்டாகலாம். வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.குடும்ப நிம்மதி குறையக்கூடும். கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான நிலை ஏற்படும். வீடு வாகனங்களுக்கான செலவு கூடும்.

 

பிள்ளைகளுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். இது வரை இருந்த தொய்வு நீங்கும். லாபம் அதிகரிக்கும். இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்வீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்களை செய்து முடிப்பதில் திறமை வெளிப்படும் பணவரத்து கூடும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி தேடிவரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

 

மிருகசீர்ஷம்: இந்த மாதம் பிள்ளைகளுக்காக செய்யும் பணிகள் திருப்தி தரும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் இருந்த தகராறுகள் நீங்கும். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லா தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும்.
திருவாதிரை: இந்த மாதம் நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். வெளிநாடு தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். திறமை வெளிப்படும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.

 

புனர்பூசம்: இந்த மாதம் நெருக்கமானவர்களுடன் ஏற்படும் சந்திப்பு மன மகிழ்ச்சியை தரும். எதைப்பற்றியாவது யோசித்துக்கொண்டே இருப்பீர்கள். பண தேவை உண்டாகும். உத்தியோகத்தில் ஏற்றம் பெறுவது பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.பரிகாரம்: புதன்கிழமைகளில் பெருமாளை தரிசித்து அர்ச்சனை செய்ய எல்லா நலனும் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளிசந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 17, 18, 19அதிர்ஷ்ட தினங்கள்: ஜனவரி 7, 8.


கடகம்
(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) – கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில் கேது, சுக்ரன் – ரண, ருண ஸ்தானத்தில் சனி,சூர்யன், புதன், சந்திரன் – களத்திர ஸ்தானத்தில் குரு – தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் – லாப ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 26-12-20 அன்று காலை 5.22 மணிக்கு சனி பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.30-12-20 அன்று இரவு 2.22 மணிக்கு புதன் பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.06-01-21 அன்று காலை 07.18 மணிக்கு சுக்கிர பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:
இந்த மாதம் வீண் மனக் கவலை உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் தடையை ஏற்படுத்தும். இடம் விட்டு வெளியில் தங்க நேரிடும். எதிலும் திருப்தி இல்லாத நிலை காணப்படும்.குடும்பத்தில் ஏதாவது சிறு சிறு சண்டைகள் ஏற்படலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். சகோதரர்கள், தகப்பனாரிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. பணவரத்து தாமதப்படலாம்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

 

புனர்பூசம்: இந்த மாதம் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும் பழைய பாக்கிகள் வசூலாவதில் இருந்த தாமதம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே மன வருத்த மடையும் சம்பவங்கள் ஏற்படலாம். பிள்ளைகளின் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பூசம்: இந்த மாதம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும். ஆனால் புதிய ஆர்டர்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான செலவு கூடும்.

 

ஆயில்யம்: இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையில் திடீர் இடை வெளி ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. அவர்களின் நலனுக் காக செலவு செய்ய வேண்டி இருக்கும். பரிகாரம்: அபிராமி அந்தாதி துதி பாடி அம்மனை வணங்கி வர குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள் சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 20, 21 அதிர்ஷ்ட தினங்கள்: ஜனவரி 9, 10.

 


சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) – கிரகநிலை: சுகஸ்தானத்தில் கேது, சுக்ரன் – பஞ்சம ஸ்தானத்தில் சனி,சூர்யன், புதன், சந்திரன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு – பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் – தொழில் ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள் :26-12-20 அன்று காலை 5.22 மணிக்கு சனி பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.30-12-20 அன்று இரவு 2.22 மணிக்கு புதன் பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.06-01-21 அன்று காலை 07.18 மணிக்கு சுக்கிர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:
இந்த மாதம் மனதில் உறுதி பிறக்கும். எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். நன்மை உண்டாகும். வீண் செலவு உண்டாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும்.குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான உறவு காணப்படும். பிள்ளை கள் கல்வியிலும் மற்ற வகையிலும் சிறந்து விளங்குவார்கள். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும்.தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியை சந்திக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கடுமையான பேச்சை தவிர்ப்பது நல்லது. லாபம் எதிர்பார்த்ததை விட குறையலாம். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன் செய்வது நல்லது. உடல்நலனைப் பொறுத்தமட்டில் உடற்சோர்வு மன சோர்வு வரலாம்.

 

மகம்: இந்த மாதம் பிள்ளைகள் அறிவு திறன் கண்டு ஆனந்தப்படுவீர்கள். அவர்க ளுக்காக செலவு செய்யவும் நேரிடும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரியதாமதம் ஏற்படும். வீண்கவலை இருக்கும். பணவரத்து அதிகப்படும் அதே நேரத்தில் வீண்செலவு உண்டாகும். பூரம்: இந்த மாதம் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத சூழ்நிலை வரும். எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுப்பார்கள். எனவே கவனமாக இருப்பது நல்லது.

 

உத்திரம்: இந்த மாதம் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சில காரியங்கள் நடந்து முடியும். பணவரத்து திருப்தி தரும் விதத்தில் இருக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும்.
பரிகாரம்: அருகில் இருக்கும் சிவன் ஆலயத்திற்கு சென்று வணங்கி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். மனோ பலம் கூடும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன் சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 22, 23
அதிர்ஷ்ட தினங்கள்: டிசம்பர் 15, 16; ஜனவரி 11, 12, 13.

 


கன்னி
(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்) – கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில் கேது, சுக்ரன் – சுக ஸ்தானத்தில் சனி,சூர்யன், புதன், சந்திரன் – பஞ்சம ஸ்தானத்தில் குரு – அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் – பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.கிரகமாற்றங்கள்:26-12-20 அன்று காலை 5.22 மணிக்கு சனி பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.30-12-20 அன்று இரவு 2.22 மணிக்கு புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.06-01-21 அன்று காலை 07.18 மணிக்கு சுக்கிர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:
இந்த மாதம் பல வகையிலும் நற்பலன்களை அள்ளித் தரும். தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். வீண் பழி உண்டாகலாம்.குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கணவன், மனைவிக் கிடையே நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்கள் சந்தோஷத்தை தரும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உடல்நலனைப் பொறுத்தவரை காய்ச்சல் ஏற்படலாம். தண்ணீரைக் காய்ச்சி அருந்துவது நன்மையைத் தரும்.தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும்.

 

லாபம் குறையக்கூடும். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். கடித போக்குவரத்து நன்மை தரும். வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டிவரும். புதுவியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அலுவலகத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சனை தலை தூக்கலாம். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம்.

 

உத்திரம்: இந்த மாதம் குடும்பத்தில் எதிர்பார்த்த சுமுகமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தருவதாக இருக்கும். வாகனங்களில் செல்லும் போதும், ஆயுதங்களை கையாளும் போதும் கவனம் அவசியம். ஹஸ்தம்: இந்த மாதம் எடுத்த காரியத்தை செய்துமுடிப்பதில் இழுபறியான நிலை காணப்படும். சாதாரணமாக பேசினாலும் மற்றவர்கள் அதில் குறை காண்பார்கள். எண்ணியதை செய்து முடிக்க முடியாமல் தடங்கலை உண்டாக்கும். தொழில், வியாபாரத்தில் சிக்கல்கள் தீர பாடுபடுவீர்கள்.

 

சித்திரை: இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இடைவெளி குறைய மனம் விட்டு பேசுவது நல்லது. பரிகாரம்: ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வணங்கி வர உடல் ஆரோக்கியம் பெறும். குடும்ப பிரச்சனை தீரும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்;
சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 24, 25, 26 அதிர்ஷ்ட தினங்கள்: டிசம்பர் 17, 18, 19.

 


துலாம்
(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்) – கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது, சுக்ரன் – தைரிய ஸ்தானத்தில் சனி,சூர்யன், புதன், சந்திரன் – சுகஸ்தானத்தில் குரு – களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் – அஷ்டம ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.கிரகமாற்றங்கள்:26-12-20 அன்று காலை 5.22 மணிக்கு சனி பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.30-12-20 அன்று இரவு 2.22 மணிக்கு புதன் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.06-01-21 அன்று காலை 07.18 மணிக்கு சுக்கிர பகவான் தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:
இந்த மாதம் வீண் வாக்குவாதங்கள் அகலும். மனதில் உற்சாகம் ஏற்படும். வீண் பகை உண்டாகலாம். நண்பர்களிடம் இருந்து பிரிய வேண்டி இருக்கும். கவுரவ பங்கம் ஏற்படாமல் கவனமாக செயல்படுவது நல்லது.குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும் உறவு பலப்படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்க பெறுவீர்கள். அவர்களது கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும்.தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும்.

 

எதிர்பார்த்த லாபம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தடைகள் உண்டாகலாம். வீண் அலைச்சலும், பண விரயமும் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு உண்டாகும். வேலைப்பளு குறையும். திடீர் நெருக்கடிகள் ஏற்படலாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பயனற்ற பயணங்கள் உண்டாகலாம்.

 

சித்திரை: இந்த மாதம் பிள்ளைகள் எதிர்கால நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். உங்களது செயல்களில் மற்றவர்குறை காண நேரலாம். தெய்வ பக்தி அதிகரிக்கும். பயணம் செல்ல நேரலாம். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நிதானமாக நடந்து கொள்வது வியாபாரம் நன்கு நடக்க உதவும்.

 

ஸ்வாதி: இந்த மாதம் பணவரத்து திருப்திதரும். எதிர்பாராத திருப்பம் உண்டாகும். சிந்தித்து செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். பயணங்களின் போதும் வாகனங்களை ஓட்டி செல்லும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
விசாகம்: இந்த மாதம் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். உறவினர்களுடன் அனுசரித்து செல்வதும், வாக்கு வாதத்தை தவிர்ப்பதும் நல்லது. பரிகாரம்: வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாரியம்மனை வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். குடும்ப ஒற்றுமை ஏற்படும். அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், ஞாயிறுசந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 27, 28அதிர்ஷ்ட தினங்கள்: டிசம்பர் 20, 21.


விருச்சிகம்
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) – கிரகநிலை: ராசியில் கேது, சுக்ரன் – தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சனி,சூர்யன், புதன், சந்திரன் – தைரிய ஸ்தானத்தில் குரு – ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் – களத்திர ஸ்தானத்தில் ராஹு என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 26-12-20 அன்று காலை 5.22 மணிக்கு சனி பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 30-12-20 அன்று இரவு 2.22 மணிக்கு புதன் பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
06-01-21 அன்று காலை 07.18 மணிக்கு சுக்கிர பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:
இந்த மாதம் தன்னம்பிக்கை வளரும். பணவரவு திருப்தி தரும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். வாக்கு வன்மை அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். ஆனாலும் தேவையற்ற வீண் பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. அறிவுத்திறன் அதிகரிக்கும். பெயருக்கும், புகழுக்கும் பங்கம் வரலாம்.குடும்பத்தில் காணாமல் போன சந்தோஷம் மீண்டும் வரும். கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த கருத்து மோதல்கள் மறையும்.தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும்.

 

வியாபார நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான பலன் கிடைக்க பெறுவார்கள். புதிய பொறுப்புகள் சேரும். வேலை தேடியவர்களுக்கு வேலை கிடைக்கும். தேவையற்ற வீண் வாக்குவாதம் ஏற்படும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும். வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம்.

 

விசாகம்: இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்ட மிட்டு செய்யும் காரியங்கள் நல்ல பலன் தரும். பகைவர்களால் ஏற்படும் சிறு தொல்லைகளை சமாளிக்க வேண்டி இருக்கும். புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை. அனுஷம்: இந்த மாதம் மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும்.

 

கேட்டை: இந்த மாதம் கணவன் மனைவிக்கிடையே சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும்.பரிகாரம்: கந்தசஷ்டி கவசம் படித்து முருகப் பெருமானை வணங்கி வர எதிர்ப்புகள் விலகும். குடும்ப பிரச்சனைகள் தீரும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 29, 30, 31 அதிர்ஷ்ட தினங்கள்: டிசம்பர் 22, 23.

 


தனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) – கிரகநிலை: ராசியில் சனி,சூர்யன், புதன், சந்திரன் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு – பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் – ரண ருண ரோக ஸ்தானத்தில் ராஹு – அயன சயன போக ஸ்தானத்தில் கேது, சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 26-12-20 அன்று காலை 5.22 மணிக்கு சனி பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.30-12-20 அன்று இரவு 2.22 மணிக்கு புதன் பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார். 06-01-21 அன்று காலை 07.18 மணிக்கு சுக்கிர பகவான் ராசிக்கு மாறுகிறார்.

 

பலன்:
இந்த மாதம் தடை ஏற்படலாம். சாமர்த்தியமான பேச்சு கை கொடுக்கும். பணவரத்து திருப்தியாக இருக்கும். நீண்ட நாட்களாக இழுத்து வந்த வீண் பிரச்சனைகள் நீங்கும். மரியாதை அந்தஸ்து உயரும். வெளிநாட்டு பயணங்கள் கைகூடும்.குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் உண்டாகும்.தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்யவேண்டி இருக்கும். வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்லலாமா என்று கூட தோன்றலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது. வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும்.

 

மூலம்: இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.பூராடம்: இந்த மாதம் அலுவலக பணிகள் மூலம் டென்ஷன் உண்டாகும். கவனமாக பேசுவது நல்லது. அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தெய்வபக்தி அதிகரிக்கும். உத்திராடம்: இந்த மாதம் தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையில் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. அக்கம் பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை வரலாம்.

 

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையில் நெய்தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். செயல் திறமை அதிகரிக்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 1, 2
அதிர்ஷ்ட தினங்கள்: டிசம்பர் 24, 25, 26.


மகரம்
உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்) – கிரகநிலை: ராசியில் குரு – சுக ஸ்தானத்தில் செவ்வாய் – பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ – லாப ஸ்தானத்தில் கேது, சுக்ரன் – அயன, சயன, போக ஸ்தானத்தில் சனி,சூர்யன், புதன், சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 26-12-20 அன்று காலை 5.22 மணிக்கு சனி பகவான் ராசிக்கு மாறுகிறார்.30-12-20 அன்று இரவு 2.22 மணிக்கு புதன் பகவான் ராசிக்கு மாறுகிறார்.06-01-21 அன்று காலை 07.18 மணிக்கு சுக்கிர பகவான் அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

இந்த மாதம் பிரயாணத்தில் தடங்கலை ஏற்படுத்தும். திட்டமிட்டபடி காரியங்கள் நடந்து முடியாமல் இழுபறியாக இருக்கும். வீண் வாக்குவாதங்களை ஏற்படுத்தும். எந்த காரியத்தையும் கடின பிரயாசைக்கு பிறகே செய்ய வேண்டி இருக்கும். ஆனாலும் குரு தன ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் வாகன லாபம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.
குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் தேவை. கெட்டகனவுகள் தோன்றும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களை விட்டு விலகி செல்லலாம். மனதில் நிலையான எண்ணம் இருக்காது. பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

 

தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த நீண்ட நாள் பிரச்சனைகள் ஒரு சுமூக முடிவிற்கு வரும். உங்கள் வியாபாரத்தை விருத்தி செய்து கொள்வீர்கள்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மன உறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும்.

 

உத்திராடம்: இந்த மாதம் ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. திருவோணம்: இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நன்மைதரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைபளு இருக்கும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

 

அவிட்டம்: இந்த மாதம் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். பதவி உயர்வு, நிலுவையில் உள்ள பணம் வருவது தாமதப்படும். பரிகாரம்: சனிக்கிழமையில் சனி பகவானை வணங்கி காகத்திற்கு எள் சாதம் வைத்து வர உடல் ஆரோக்கிய மடையும். வீண் அலைச்சல் குறையும். கடினமான பணிகள் எளிதாக முடியும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி; சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 3, 4 அதிர்ஷ்ட தினங்கள்: டிசம்பர் 27, 28.

 


கும்பம்
அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்) – கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில் செவ்வாய் – சுக ஸ்தானத்தில் ராஹூ – தொழில் ஸ்தானத்தில் கேது, சுக்ரன் – லாப ஸ்தானத்தில் சனி,சூர்யன், புதன், சந்திரன் – அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்:  26-12-20 அன்று காலை 5.22 மணிக்கு சனி பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 30-12-20 அன்று இரவு 2.22 மணிக்கு புதன் பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
06-01-21 அன்று காலை 07.18 மணிக்கு சுக்கிர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:
இந்த மாதம் வீண் செலவுகள் குறையும். பணவரத்து அதிகரிக்கும். காரியங்களில் இருந்து வந்த தாமதம் அகலும். மிகவும் வேண்டியவரை பிரிய நேரிடும். கண்மூடித்தனமாக எதையும் செய்யாமல் யோசித்து செய்வது நல்லது.
குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான ஏதாவது சம்பவங்கள் நடக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மன வருத்தம் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. நண்பர்கள் உறவினர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. தாய், தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடல்நலனைப் பொறுத்தமட்டில் ஜலதோஷ தொந்தரவு ஏற்படலாம். தலையில் நீ கோர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளவும்.

 

தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது. புதிய பொறுப்புகள் சுமையாக வரும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

 

அவிட்டம்: இந்த மாதம் வீண் பேச்சை குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தருவதாக இருக்கும். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. பிள்ளைகளை அனுசரித்து செல்வது நன்மை தரும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. ஸதயம்: இந்த மாதம் குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை வந்து நீங்கும். பயணங்களின் போது உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும். அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது.

 

பூரட்டாதி: இந்த மாதம் மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வெளி வட்டார தொடர்புகளில் கவனம் தேவை. எதிர்பார்த்த பணம் வந்து சேரும். திறமை வெளிப்படும். பல வகையிலும் முன்னேற்றம் உண்டாகும். சொத்து தொடர்பான விஷயங்களில் இழுபறியானநிலை காணப்படும். இடமாற்றம் உண்டாகும். சுபசெலவுகள் ஏற்படும். பரிகாரம்: பகவத்கீதை படித்து ஸ்ரீகிருஷ்ணனை வணங்கி வர எல்லா பிரச்சனைகளும் தீரும். மன மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்; சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 5, 6 அதிர்ஷ்ட தினங்கள்: டிசம்பர் 29, 30, 31.

 


மீனம்
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) – கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் – தைரிய ஸ்தானத்தில் ராஹூ – பாக்கிய ஸ்தானத்தில் கேது, சுக்ரன் – தொழில் ஸ்தானத்தில் சனி, சூர்யன், புதன், சந்திரன் – லாப ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 26-12-20 அன்று காலை 5.22 மணிக்கு சனி பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 30-12-20 அன்று இரவு 2.22 மணிக்கு புதன் பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 06-01-21 அன்று காலை 07.18 மணிக்கு சுக்கிர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:
இந்த மாதம் எல்லா வகையிலும் நன்மை உண்டாக்கும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்து மதிப்பு கிடைக்க பெறுவீர்கள். உடல் உழைப்பை அதிகரிக்க செய்யும். குறிக்கோளற்ற பயணங்கள் உண்டாகும். விழிப்புடன் இருப்பது நல்லது. சுப செலவுகள் உண்டாகும். கையிருப்பு கரையும். ஆன்மீக யாத்திரைகள் சென்று வருவீர்கள்.குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன்முகம் கொடுத்து பேசுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.

 

பிள்ளைகள் விரும்பியதை வாங்கிக் கொடுப்பீர்கள்.தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் சுமூகமாக செல்வது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். மேலிடத்திலிருந்து உங்களுக்கு பொறுப்புகளை அதிகரிக்கலாம். பணி நிமித்தமாக வெளியூர் சென்று தங்க வேண்டி வரலாம்.

 

பூரட்டாதி: இந்த மாதம் அனுபவபூர்வமான அறிவுதிறன் கூடும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். தொழில் தொடர்பான தகராறுகள் நீங்கும். உத்திரட்டாதி: இந்த மாதம் மற்றவர்கள் உதவி கிடைப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். சொத்து விவகாரங்களில் காரிய தடை தாமதம், வீண் அலைச்சல் ஏற்படலாம். எதிலும் கூடுதல் கவனம் தேவை. திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

 

ரேவதி: இந்த மாதம் முக்கியநபர்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்க பெறலாம். பணவரத்து அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். நன்மை தீமைகளை பற்றி கவலைப் படாமல் எதிலும் துணிச்சலான முடிவு எடுப்பீர்கள்.
பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்க எல்லா கஷ்டங்களும் நீங்கும். மன நிம்மதி உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 7, 8 அதிர்ஷ்ட தினங்கள்: ஜனவரி 1, 2.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *