பெற்றோர்களே உஷார் உங்கள் குழந்தைகளுக்கு கண் பார்வை பிரச்சனை ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன? கட்டாயம் தெரிஞ்சு கொள்ளுங்க !!

விந்தை உலகம்

தற்போதைய சூழ்நிலையில் குழந்தைகளுக்கு கண் பார்வை பிரச்சனை ஏற்படு சாதாரணமாகிவிட்டது. அதாவது தொலைக்காட்சியின் அருகில் அமர்ந்து படம் பார்ப்பது. விளையாட்டு போன்ற செயல் திறன்களில் ஈடுபடாமல் வெகுநேரம் திரையின் முன்னே கதி என்று இருப்பது. இரவு தாமதமாக தூங்குவது. அதனால் கண்களுக்குத் தேவையான ஓய்வு கிடைப்பதில்லை. அதிகம் கைப்பேசி உபயோகித்து படம் பார்ப்பது.

 

அதில் பல்வேறு விதமான விளையாட்டுக்களை பதிவு இறக்கம் செய்து சதா விளையாடிக் கொண்டே இருப்பது. எல்லாவற்றையும் விட முக்கியமான காரணம் உங்கள் குழந்தை சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளாதது. அதனால் உரிய ஊட்டச்சத்துகள் கண்களுக்குக் கிட்டுவதில்லை. மரபு ரீதியான பிரச்சனைகளும் இந்த பா தி ப் பு க்குக் காரணமாக இருக்கலாம்.

 

தீர்வுகள்:
முட்டையில் இருக்கும் ஜின்ங்க் மற்றும் லுடீன் போன்ற சத்துக்கள் கண் குறைபாடு ஏற்படாமல் பெரிதளவு காக்கிறது. ஒமேகா-3 கொழுப்பு அமிலம் கண் பார்வைக்கு மிகவும் தேவையானது. இது ரெடினாவின் ஆரோக்கியம் மற்றும் செயல்பாட்டிற்குப் பெரிதும் உதவும். கூடுதலாகக் கண்கள் உலர்ந்து போவதைத் தடுக்கிறது.

 

பொன்னாங்கண்ணி, முருங்கை, பசலை, புதினா, பிரோக்கோலி போன்ற கீரை வகைகளில் ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைவாக உள்ளது. இதனால் இதைத் தொடர்ந்து உட்கொள்வதால் நீண்ட கால கண் நோய்களை வரவிடாமல் தடுக்கவும் குணப்படுத்தவும் முடிகிறது.

 

மாம்பழம், ஆரஞ்சு, காரட்,எலுமிச்சை போன்ற பழங்களில் அதிக ஊட்டச்சத்து ஏ நிறைந்துள்ளது. இதனால் இரவில் பார்வை பிரகாசமாகத் தெரியும். முந்திரி, பாதாம் போன்ற சில கொட்டை வகைகளில் அதிகம் உயிர்ச்சத்து இ சத்து நிறைந்துள்ளதால் உங்கள் குழந்தையின் கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும். பட்டாணி, மொச்சை மற்றும் அவரைக் கொட்டைகளில் பையோபிலவோனாய்ட் மற்றும் ஜிங்க் நிறைந்து உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *